ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தாடி வைத்தவன் அறிவாளியா? (நகைச்சுவைகள்)




   ஒரு சமயம் ஸ்பெயின் நாட்டு அரசர், இளைஞன் ஒருவனை டென்மார்க் நாட்டுக்குத் தூதுவராக அனுப்பினார்.
   டென்மார்க் மன்னர் அந்த இளைஞனைப் பார்த்து, “ஸ்பெயின் நாட்டில் மனிதர்களே இல்லை போலிருக்கிறது. அதனால்தான் ஸ்பெயின் மன்னர் தாடி முளைக்காத ஒரு சிறுவனை எனது நாட்டுக்குத் தூதுவராக அனுப்பி இருக்கிறார்“ என்று கிண்டலாகக் கூறினார்.
   அதைக் கேட்ட அந்த இளைஞன் டென்மார்க் மன்னருக்குச் சரியான பாடம் கற்பிக்க எண்ணினான்.
   உடனே அவன், “அரசே... அறிவு என்பது தாடியில் தான் இருக்கிறது என்ற தங்களின் கருத்து எமது அரசருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஓர் வெள்ளாட்டை இங்கு தூதுவராக அனுப்பியிருப்பார்“ என்றான்.
   அதைக் கேட்டதும் டென்மார்க் மன்னருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
***************************************************************************

 
நாய்க்குப் பழமொழி தெரியாது! (நகைச்சுவை)

   இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலம். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்த பாஷ்யம் ஐயங்கார், ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
   ஒரு நாள்...
   சமஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதற்காக பாஷ்யம் ஐயங்கார், அந்த வெள்ளை அதிகாரியின் வீட்டிற்குள் நுழைநதார்.
   அப்போது... அந்த அதிகாரி வளர்த்த பிரம்மாண்ட நாய் குரைத்துக் கொண்டே அவரை நோக்கிப்பாய்ந்தது.
   அதைக் கண்டு பயந்து போன பாஷ்யம் ஐயங்கார், வாசலை நோக்கி ஓடினார்.
   அதைப்பார்த்த அந்த வெள்ளை அதிகாரி சிரித்தபடியே ஓடிச் சென்று நாயை அடக்கினார்.
   “என்ன ஐயங்கார்... நாய்க்குப் போய் இவ்வளவு பயந்து விட்டீர்? குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா?“ என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.
   உடனே ஐயங்கார், “அந்தப் பழமொழி உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் அந்த நாயிக்குத் தெரியாதே“ என்றார் மூச்சிறைக்க.
   வெள்ளைக்கார அதிகாரி, “உண்மைதான்“ என்றாராம் யோசித்தபடி.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

13 கருத்துகள்:

  1. நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது இரண்டுமே எனக்கும் பிடித்திருந்தது.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அதானே ,தாடி வைத்தவன் தாகூர் ஆகிவிட முடியுமா ?
    குரைக்கிற நாய் கடிக்காது ,பழமொழி ஆங்கிலத்திலும் இருக்கிறதா ?இருந்தாலும் நாய்க்குப் புரியாதுதான் !
    +1

    பதிலளிநீக்கு
  3. படித்ததில் பிடித்தது - எனக்கும் பிடித்தது.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! .

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  6. தமிழ்மணம் 5

    வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    பதிலளிநீக்கு
  7. இரண்டுமே நல்ல துணுக்குகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அருணா.

    பதிலளிநீக்கு
  8. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  10. அருமை தோழி அவர்களே....

    (பிடித்திருந்ததால் எனது முகநூல் சுவற்றிற்கு சுட்டு கொண்டேன்.. மன்னிக்க் வேண்டும்...)

    பதிலளிநீக்கு

  11. நன்றாகச் சிந்திக்க வைக்கிறியள்.

    பதிலளிநீக்கு