அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தைத்
தடித்தாலும் அழுகைவரும்! பாசம்
பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
இடித்தாலும் அழுகைவரும்! மேனி
நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
முடியாமல் அழுகைவரும்! கதையில்
மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர் பொங்கி
வடிக்கின்ற அழுகையாவும் விதியே
செய்யும்!!
அருணா செல்வம்.
19.09.2013
வணக்கம்
பதிலளிநீக்குகவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன்.
அழுகை- இளிவு, இழவு, அசை, வறுமை என்னும் நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும்.
பதிலளிநீக்குஇதனைத் தொல்காப்பியர்,
“இளிவே இழவே அசையே வறுமையென
விளிவுஇல் கொள்ளை அழுகை நான்கே” (தொல். மெய். 5)
என்கிறார். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையும் தோன்றும். கீழ்வரும் அடிகளில் அசை என்ற மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
தொல்காப்பியர் சொல்லிய அழுகையை நனைவுபடுத்தியது தங்கள் கவிதை..
தங்களின் வருகைக்கும் நல்லதோர் விளக்கத்திற்கும்
நீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா.
அழுகை...
பதிலளிநீக்குஅழகான கவிதை...
வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
அருமை சகோதரி... முனைவரின் கருத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தங்கள் வரிகளையும் குணசீலன் அவர்களின் விளக்கமும் சிறப்புங்க.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சசிகலா.
அழுகையினை அழாமல் ரசிக்க முயன்றேன்...
பதிலளிநீக்குதங்கள் படைப்பு அருமை!
வாழ்த்துக்கள் தோழி!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
சில நேரங்களில் அதீத ஆனந்தத்திலும் அழுகை வரும்
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதும் உண்மை தான்.
நீக்குஅதனால் தான்...
“கண்ணீர் பொங்கி
வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!!“
என்று முடித்தேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
கவிதை..... ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
mmmm ...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மிக்க நன்றி சீனி ஐயா.
நீக்கு