ஒரு சமயம் ஞானி ஒருவர் ஒரு மரத்தடியில்
அமர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு
அவரது உபதேசங்கள் எரிச்சலைக் கொடுத்தன. உடனே அவன் எழுந்து அந்த ஞானியைக்
கடுஞ்சொற்களால் திட்டினான்.
அவன் திட்டி முடிக்கும் வரை
பொறுமையாய் இருந்த ஞானி, அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“மகனே! இப்பொழுது நான் உன்னை ஒரு
கேள்வி கேட்கிறேன். பதில் சொல்வாயா?“ என்று கேட்டார்.
“என்ன கேள்வி?“ என்று அவன் கேட்டான்.
“தனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை
ஒருவர் ஏற்க மறுத்தால் அது கடைசியில் யாரைச் சென்றடையும்?“ என்று கேட்டார் ஞானி.
“இதென்ன கேள்வி? அந்தப் பொருளை யார்
கொடுத்தாரோ அவரைத்தான் சென்று சேரும்“ என்றான் அவன்.
அதற்கு ஞானி, “நீ என்னை வாய்க்கு
வந்தபடியெல்லாம் கன்னாபின்னாவென்று திட்டினாய். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக
இல்லை. அதனால், இப்பொழுது அந்தத் திட்டுக்கள் யாவும் உன்னிடம் தானே வந்து சேரும்!“
என்றார் அமைதியுடன்.
திட்டியவன் தலை கவிழ்ந்தான்.
(படித்ததில் பிடித்தது)
அருணா செல்வம்.
முன்பே படித்திருந்தாலும் மீண்டும் உங்கள் பக்கத்தில் படித்தது - எனக்கும் பிடித்தது!
பதிலளிநீக்குவணக்கம் நாகராஜ் ஜி.
நீக்குநான் இந்தியா போய் வந்ததிலிருந்து சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். அதிக நேரம் வலையில் அமர முடியவில்லை. ஆனால் ஏதாவது வலையில் பதிய வேண்டும் என்ற ஆசையும் விடவில்லை.
புதியதாக ஏதாவது பதிய மனமும் ஒத்துவரவில்லை. அதனால் நான் படித்ததில், எனக்குப் பிடித்ததைப் பகிர்கின்றேன்.
கூடிய விரைவில் புதியதாக எழுதி வெளியிடுவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரையில் (என் இம்சைகளை) நீங்களும் மற்றவர்களும் பொறுத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
அருணா செல்வம்.
“நீ என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாய். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், இப்பொழுது அந்தத் திட்டுக்கள் யாவும் உன்னிடம் தானே வந்து சேரும்!"
பதிலளிநீக்குதிட்டுபவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி.
அருமை...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html
பதிலளிநீக்குகேள்விப்பட்ட கதைதான். இருந்தாலும் நினைவில் வைக்க வேண்டியது!!
பதிலளிநீக்குநாம் நிறைய கேள்விப் படுகிறோம் தான்! ஆனால்
நீக்குமறந்தும் விடுகிறோம். இந்த மறதி நமக்கு நன்மையா? தீமையா? என்று யோசிக்க வைக்கியது இல்லையா தோழி...
நன்றி தோழி.
அருமை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
நீ திட்னதெல்லாம் உனக்குத்தான்,போ ,,,சின்ன வயதில் குழாயடியில் நடக்கும் சண்டையில் கேட்டிருக்கிறேன் இவ்வார்த்தைகளை/
பதிலளிநீக்குஅப்படியா....?
நீக்குநான் குழயடி சண்டையெல்லாம் பார்த்ததே இல்லைங்க. (சினிமாவில் பார்த்திருக்கிறேன்) ம்ம்ம்... அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் போல...
கருத்திற்கு மிக்க நன்றி விமலன் ஐயா.
அருமை..
பதிலளிநீக்கு