வெள்ளி, 13 செப்டம்பர், 2013

இல்லை.. இல்லை... இல்லை...!!
ஒளிர்கின்ற பொருளெல்லாம் உயர்ந்த தில்லை!
   ஊர்கின்ற உயிரெல்லாம் நடப்ப தில்லை!
குளிர்கின்ற காலமெல்லாம் கொடுமை இல்லை!
   குவிந்திருக்கும் மலரெல்லாம் காய்ப்ப தில்லை!
களிப்பென்று நினைப்பதெல்லாம் நீல்வ தில்லை!
   கவிஞர்கள் காதலினை வெறுப்ப தில்லை!
துளிர்க்கின்ற மரமெல்லாம் தழைப்ப தில்லை!
   துயரங்கள் என்னாளும் தொடர்வ தில்லை!

அருணா செல்வம்.
13.09.2013

22 கருத்துகள்:

Tamizhmuhil Prakasam சொன்னது…

துயரங்கள் என்னாளும் தொடர்வ தில்லை!
உண்மையான வரிகள்.
அருமையான கவிதை...வாழ்த்துகள் தோழி.

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆம் துயரங்கள் தொடரவதில்லைதான்
அதற்கு ஆதாரமாய்ச் சொல்லிப்போன
உவமைகள் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதையைப் பாராட்ட வார்த்தை இல்லை! :)

ராஜி சொன்னது…

நல்லா இல்லைன்னு சொல்ல முடியாத கவிதை. பகிர்வுக்கு நன்றி!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உண்மைதான்! வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை.

சீராளன்.வீ சொன்னது…

இல்லை இல்லை என்று சொல்லி
இனிக்க தந்தீர் ஈர்நான்கு வரிகளிலே

அருமை அருமை வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அருணாவின் கவிதைக்கு அழகே எல்லை!-நம்
அன்னைத் தமிழ் மொழிவாழ நாளும் ஒல்லை
உருவாகி திருவாகும் பாடல் கண்டேன்-என்
உள்ளத்தில் கருவான கருத்தை விண்டேன்!

Seeni சொன்னது…

arumai ...

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் சொன்ன செய்திக்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
(போய் பார்க்கிறேன். உடல்நிலை சரியில்லாததால்
அதிக நேரம் வலை பக்கம் வர முடியவில்லை.)

அருணா செல்வம் சொன்னது…

வித்தியாசமான அதே சமயம் அருமையான பாராட்டு.
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீராளன்.

அருணா செல்வம் சொன்னது…

கருவாய் உருவான வாழ்த்தைக் கவியின்
திருவாய் நினைத்தேன் திளைத்து!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.