ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

மழலை மொழி!!

சின்னப் பூபோல்
   சிரிக்கும் வாயால்
      சிந்தும் மழலைமொழி
கன்னித் தமிழைக்
   கன்னல் தேனில்
      குழைத்த கவிதையடி!
உன்னில் இருந்து
   உலகை மறந்து
      உதிரும் சிரிப்பொலியோ
பொன்னை உருக்கிப்
   பூவில் நனைத்துப்
      பொழியும் இன்பமடி!!


அருணா செல்வம்.

30 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

படமும் அதற்கான விளக்கமாக அமைந்த
கவிதையும் மிக மிக அருமை
இன்னும் எழுதி இருக்கலாமோ
சட்டென முடிந்ததைப் போல இருந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

பால கணேஷ் சொன்னது…

மழலையின் சிரிப்பிலும் பேச்சிலும் மயங்காதவர் எவரும் உண்டோ? அழகுத் தமிழில் நீங்கள் உரைத்திட்ட மழலைக் கவிதையும் அதைப் போலத்தான் மனதைப் பறிக்கிறது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்றும் ரசிக்க வைக்கும் மொழி...

அருமை வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

நம்பள்கி சொன்னது…

///சிரிக்கும் வாயால்
சிந்தும் மழலைமொழி///

அருணா! அட்டகாசமான வரிகள்! வாழ்த்துக்கள்..!

நம்பள்கி சொன்னது…

த.ம. 1. அந்த இரண்டு வரிகளுக்காக, உங்களுக்கு என் முதல் (PLUS) + ஒட்டு!

நான் ஒரு கஞ்ச ஆசிரியன்; என் இடுகைக்கே நான் (PLUS) + ஒட்டு போடமாட்டேன்! என் இடுகை அவ்வளவு...!

ஆனால், உங்களுக்கு ஒரு (PLUS) + ஒட்டு! அழகனா இரு வரிகள்...!

சசிகலா சொன்னது…

பொன்னை உருக்கிப்
பூவில் நனைத்துப்
பொழியும் இன்பமடி!!

மழலையை கொஞ்சும் இன்பத்திற்கு இணை ஏதுமில்லையே அழகு தோழி.

இளமதி சொன்னது…

தோழி...
மழலை மொழி கட்டிக்கரும்பாய் இனிக்கிறது.
வாழ்த்துக்கள்!

த.ம.6

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் இரமணி ஐயா.

நீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கலாம் தான்.
ஆனால் நேரம் தான் போதவில்லை.
தவிர சின்ன கவிதைகளை நிறையபேர்
விரும்பி இரசிக்கிறார்கள்.
இருப்பினும் உங்களின் விருப்பதிற்கேற்ப
இரண்டு மூன்று கவிதைகளாக எழுத முயற்சிக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

படம் இணையத்திலிருந்து எடுத்தேன்.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிகவும் இரசித்து எழுதிய உங்களின் பின்னோட்டம்
என்னை மேலும் மகிழ்வித்தது.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் நம்பள்கி.

ரொம்பவே இரசித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

அடடடடடா.....
உங்கள் வலையுக வாழ்க்கையில்
என் பாடலுக்காக முதல் ஓட்டு போட்டதைக்
குறித்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
காரணம்...
என் பாடலுக்கு நீங்கள் ஓட்டு போட்டப்பிறகு தான்
உங்களுக்கும் ஓட்டுப் போடத் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஆமாம் .... நம்பள்கி... நீங்கள் தமிழ் பாடலை இரசிப்பீர்களா?
டமில் மட்டும் தான் இரசிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.

(இதெல்லாம் கலாய்ப்பு. கண்டுகாதீங்க)

உண்மையில் எனக்கு “மெட்ராஸ் பாசை“ கத்துக் கொடுக்கிறேன்
என்று சொன்ன உங்களிடமிருந்து நான் என் செம்மொழி தமிழில் எழுதிய கவிதையால் ஒரு ஓட்டு பெற்றுள்ளேன்... என்று
நினைக்கும் பொழுதே பெருமிதம் அடைகின்றேன்.

மிக்க நன்றி நம்பள்கி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படமும் கவிதையும் அருமை சகோ. பாராட்டுகள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மழலை மொழி இன்பம்தான்! இனிப்புதான்! அருமையான படைப்பு! நன்றி!

கவியாழி சொன்னது…

கவியும் படமும் அருமை

பூ விழி சொன்னது…

பொன்னை உருக்கிப்
பூவில் நனைத்துப்
பொழியும் இன்பமடி!!

சூப்பரா இருக்கு இந்த வரிகள்

Unknown சொன்னது…
தாலாட்டு நன்று!

நம்பள்கி சொன்னது…

முதலில் நான் என் இடுகைக்கே ஒட்டு போடமாட்டேன்..!
இந்த வரிகள் எனக்கு மிக பிடித்ததன் காரணம்...
///சிரிக்கும் வாயால்
சிந்தும் மழலைமொழி///

என் மகன் வெகு சீக்கிரம் பேசினான்; அதனால், அவன் "எச்சையுடன்" சேர்ந்து வழியும் மழலை ஞாபகம் வந்தது.

சிரிக்கும் வாயில்
வழியும் மழலைமொழி


அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மலர் பாலன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

ஸ்ரீராம். சொன்னது…

குழந்தை சிரிப்பை மீறிய சொர்க்கம், மழலையை மீறிய இசை உண்டா?
கவிதையும் படமும் அருமை.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம்.

Seeni சொன்னது…

nalla irukku...!