வியாழன், 19 செப்டம்பர், 2013

அழுகை!!





அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தைத்
   தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
   இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
   முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர் பொங்கி
   வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!!
  
அருணா செல்வம்.
19.09.2013

17 கருத்துகள்:

  1. வணக்கம்

    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. அழுகை- இளிவு, இழவு, அசை, வறுமை என்னும் நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும்.

    இதனைத் தொல்காப்பியர்,
    “இளிவே இழவே அசையே வறுமையென
    விளிவுஇல் கொள்ளை அழுகை நான்கே” (தொல். மெய். 5)
    என்கிறார். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையும் தோன்றும். கீழ்வரும் அடிகளில் அசை என்ற மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
    தொல்காப்பியர் சொல்லிய அழுகையை நனைவுபடுத்தியது தங்கள் கவிதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் நல்லதோர் விளக்கத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  4. அருமை சகோதரி... முனைவரின் கருத்தும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வரிகளையும் குணசீலன் அவர்களின் விளக்கமும் சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  6. அழுகையினை அழாமல் ரசிக்க முயன்றேன்...

    தங்கள் படைப்பு அருமை!
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. சில நேரங்களில் அதீத ஆனந்தத்திலும் அழுகை வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதும் உண்மை தான்.
      அதனால் தான்...
      “கண்ணீர் பொங்கி
      வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!!“
      என்று முடித்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு