மாலை மஞ்சளில் சூரியன் மயங்கும் வேலை...
மன்மத அம்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு பாச பிணைப்பை இச்சென்மத்தில் மாற்றவே
முடியாத தங்கையின் வீட்டிற்குச் சென்றேன்.
தாவிக்குதித்து ஓடிவந்தாள் கால் முளைத்தத்
தாமரையாய்த் தங்கையின் மகள்.
ஆசையுடன் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.
இரண்டு மாதம் இந்தியாவில் தான் கண்டதையெல்லாம் கண்விரித்துக் கூறினாள்.
கடைசியில் கேட்டாள்.. ” நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவீங்களே... நான் கேட்பதற்கு
பதில் சொல்லுவீங்களா...?” என்று
எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான்... நமக்கு எதுவும் முழுமையாகத் தெரியாதே...
ஏடாகூடமாக ஏதாவது கேட்டுவிட்டால்....
இருந்தாலும் இதை ஐந்துவயது குழந்தையிடம் ஒப்புக்கொள்ள முடியாது என்று மனம்
மறுத்ததால்... ”சரி கேளும்மா... பதில் தெரிந்தால் சொல்கிறேன்” என்றேன்.
இவளும்
கேட்டாள்
“இந்தியாவில் சுவர் இருக்குது இல்லையா.... அதுல எறும்பு வரிசை வரிசையாக போகும்
பார்த்திருக்கிறீர்களா...?“ என்றாள்.
இந்தியாவில் பிறந்துவிட்டு இதைப் பார்க்காமலா... ”ஆமாம் போகும். அதற்கென்ன..?“
என்றேன்.
”அப்படி வரிசையாக போகும் பொழுது இடையில் நம் கை விரலால் ஒரு கோடு போட்டால் அந்த
எறும்புகள் தடுமாறுதே... ஏன் தெரியுமா....?“ என்றாள்.
அடடா... அருமையாக குழந்தை யோசிக்கிறதேன்னு நினைத்து மனத்திற்குள் பெருமிதத்தோடு
சொன்னேன். “எறும்புக்குக் கண்ணு தெரியாது. அது வாசனை முகரும் உணர்ச்சியைக் கொண்டு
தன் இனத்தோடு ஒன்றாக சேர்ந்து செல்வதற்காகத் தான் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கிறது.
அப்படிச் செல்லும் பொழுது நீ உன் கைவிரலால் அங்கே கோடு போட்டால் உன் கைவிரல் வாசனை
அங்கே ஒட்டிக்கொள்ளும். அந்த வாசனை அதற்கு புதிது என்பதால் வழி புரியாமல்
தடுமாறும்.“ என்றேன்.
அவளும் சற்று நேரம் யோசித்தாள். பிறகு சொன்னாள்... “ஐயோ நீங்க புரியாமல்
சொல்லுறீங்க... எறும்புக்குச் சின்ன இடை. அந்த இடையில உங்க கைவிரலால கோடு போடவே
முடியாதே....” என்று சொல்லிச் சிரித்தாள்.
நானும் என் அறியாமையை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நாம், எனது, என்எண்ணம்
என்பதை மட்டும் நினைத்திருந்தால் அடுத்தவரின் எண்ண உணர்வுகளைப் புரிந்து கொள்ள
முடியாது.
mUzh nry;tk;
நல்ல நகைச்சுவைதான்.குழந்தைகள் நம்மை எளிதில் முட்டாளாக்கி விடுவார்கள்.
பதிலளிநீக்குஇப்படி நம்மை மடக்கிச் சிரித்தால் நாமும் அல்லவா
பதிலளிநீக்குகுழந்தையாகி விடுவோம் !
அவர்களைச் சின்னவர்கள் என்றும் நாம் பெரியவர்கள் எல்லாம் எமக்குத் தெரியும் என்று எளிதில் கணக்கிட்டு விடக்கூடாது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!
அருமை... அருமை... அறியாமையை உணர வேண்டும்...
பதிலளிநீக்குவணக்கம் நண்பர்களே... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html
நன்றி...
வணக்கம் அக்கா...
பதிலளிநீக்குதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
அதற்கான சுட்டி இதோ....
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html
நன்றி.
நட்புடன்
மனசு சே.குமார்
Chinna idaiyil eppadi kudu poda mudiyum nalla kelvithan. Siruvarkalai Vella mudiyadhuthan.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவைப் பதிவு
பதிலளிநீக்குரசித்துச் சிரித்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்