செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

புதுமையைப் புரிந்து கொண்டேன்!!





புதுமைகளைத் தேடினேன்! அதனைப்
பழமையினுள் கண்டு கொண்டேன்!

பழமையும் அன்றொரு நாள்
புதுமையாகத் தான் இருந்திருக்கும்!

புதுமையும் மற்றொரு நாள்
பழைமையாகி விடும் தானே!

ஐயகோ...

தினம் தினம் விழித்தெழும்
பொழுதெல்லாம் புதியதாகப்
பிறந்துவிட்டோம் என்றெல்லாம்
நினைத்தாலும் அப்புதியது
பழையதின் துவக்கம் தான்
என்றாகி விடுகிறதே!

அப்படியானால்
புதுமை என்பது எதுவெனத்
தேடிப்பார்த்தேன்!

ஒரு திறமையை அடுத்தவர்
வீழ்த்தும் வரையில்
அத்திறமை தான்
புதுமை என்பதைப்
புரிந்து கொண்டேன்!!

அருணா செல்வம்.

32 கருத்துகள்:

  1. ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்கள் செய்கைகள் தொடர்புகள் எல்லாமே புதுமை இதுதான் தேவை முதுமையிலும் இளமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  2. உண்மைதான் சகோ ! அருமையான கருத்திற்கு வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. ஒரு திறமையை அடுத்தவர் வீழ்த்தாமல் இருப்பதற்கு அத்திறமையை மென்மேலும் வளர்த்துக்கொள்வதும் புதுமை தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலும் மேலும் வளர்வது தான் புதுமை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  4. பழசு தான் புதுசாகி கொண்டிருக்கிறது இப்போது எல்லாம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் பிரேம்.
      ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் பழசு தான்.
      மின்வெட்டால் மீண்டும் வந்துவிட்டது.

      ஆனால்...
      அதை வைத்து நம் இளைய தலைமுறை கத்துக்கிறாங்க பாருங்க
      அது தான் புதுமை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாஸ்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  6. //புதுமையும் மற்றொரு நாள்
    பழைமையாகி விடும் தானே!//

    உண்மை தெரிந்து அப்படியா என்று கேட்பதே வாழ்க்கை ஆகிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற வழி....

      புதிய கண்டுபிடிப்புகள் நம்மை வியக்கத்தான் வைக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  7. சிறப்பான கருத்தை கவியாக தந்த விதம் சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  8. நல்லதொரு சிந்தனை. வாழ்த்துக்கள் தோழி...

    அருமை! உங்கள் சிந்தனை திறமை! கவிவடித்த பெருமை!
    பருகினேன் இனிமை! தருகிறேன் என் வாழ்த்தெனும் கனிமை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி நல்கிய இன்பக் கவிதை
      உளமதில் நிற்கும் உயர்ந்து! - வளமாய்ப்
      பலமுடன் வாழ்த்து பலகொடுத்தே என்றும்
      நலமுடன் வாழ்கவே நன்று!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. அட, இதுதான் புதுமையா? அழகாச் சொல்லியிருக்கிறீங்க அருணா! புதுமை என்பது பழமைக்குள்தான் இருக்கிறது என்ற கருத்து சரியே,

    என்றாலும் நமது திறமையை இன்னொருவரால் மழுங்கடிக்க முடியாது என்றுதானே கேள்விப்பட்டேன்!

    “ தண்ணீரில் மூழ்காதாம் காற்றுள்ள பந்து”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கருத்துச் சரியானது தான் மணி அண்ணா.

      “ தண்ணீரில் மூழ்காதாம் காற்றுள்ள பந்து”

      தண்ணீரில் மூழ்காத வரையில் காற்றுள்ள பந்து புதுமையே.
      அதை மூழ்கடிக்க வேறு ஏதாவது வழி வந்துவிட்டால் அது தான் அதை விட “புதுமை“

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மணி அண்ணா.

      நீக்கு
  10. ஒரு திறமையை அடுத்தவர்
    வீழ்த்தும் வரையில்
    அத்திறமை தான்
    புதுமை என்பதைப்
    புரிந்து கொண்டேன்!! // புதுமையின் இலக்கணம் புதுமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  11. ஒரு திறமையை அடுத்தவர்
    வீழ்த்தும் வரையில்
    அத்திறமை தான்
    புதுமை//

    உண்மை...புதுமைக்கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  12. அட அட அட !!நான் என்னனு சொல்றது அருமையா சொல்லிடிங்க புதுமைனா என்ன னு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  13. பழையன கழிதலும் புதியன் புகுதலும் வழுவல!
    அருமை அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. புரியவில்லை தனபாலன் ஐயா.

      (என் பாடலில் ஏதாவது.... நான் கவனக் குறைவுடன் எழுதிவிட்டேனா என்று தேடிப் பார்த்தேன்.)

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  15. நீங்கள் சொல்லியிருக்கும் கவிதை நம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகவே எழுதியது போலிருக்கிறது.

    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு