வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சிறப்படிகளால் ... பெற்ற கவிதை!!




 குறளோடு உறவாடுவோம்!!
    
உறவொன்றும் கேட்கவில்லை! அன்னைக் குள்ளே
    உருவொன்று கருவாக உயிரைப் பெற்றோம்!
அறமொன்றும் அறியவில்லை! வயிற்றுக் குள்ளே
    அறிவொன்றும் வளரவில்லை! பத்தாம் திங்கள்
பிறப்பென்று பூமிதனில் பிறந்து விட்டோம்!
    பிற்கால வாழ்வில்நற் பயனைக் கொள்ளக்
குறளென்ற திருமறையைக் கொடுத்துச் சென்ற
    கோவிலில்லா வள்ளுவரின் வழியில் செல்வோம்!!

அன்புடைய வாழ்க்கைவாழ அறத்துப் பாலில்
    அழுக்காறாமை, வெகுளாமை, மெய்யு ணர்தல்,
இன்பமதைப் பெறுவதற்கே புறம்கூ றாமை,
    இனியதையே கூறல்,மெய் உணர்தல், ஈகை,
துன்பதைப் போக்கிடவே மக்கட் பேறு,
    துறவு,அவா அறுத்தலுடன் ஊழும், வாய்மை,
பொன்பொதிந்த தலைப்புகளில் புலமை கொஞ்ச
    புகழ்பெற்று வாழ்ந்திடவே வழியைத் தந்தார்.

பண்புடனே வாழ்ந்துயர்ந்து வீரம் கொள்ள   
    படைமாட்சி, படைச்செருக்கு, பொச்சா வாமை,
கண்ணோட்டம்,  வினைசெயலின் வகைகள், தூது,
    காலமறிந்(து) அவையறிவைப் பொருளில் சேர்த்தார்!
பெண்வழிசேர்ந்(து) உட்பகையும், பழைமை, சூதும்,
    பேதைமையும், தீநட்பும், இகலும் போக
மண்ணுலகில் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
    மானமுடன் குடிமைதந்து பெருமை சேர்த்தார்!

வஞ்சியுடன் கற்புநிலை வாழ்வில் வாழ
    வகைபிரித்துக் காதற்சீர் உரைத்தல், பெண்ணின்
நெஞ்சிற்குள் நின்றாடும் அலர்அறிவு றுத்தல்,
     நிறைஅழிதல், நலம்புனைந்(து) உரைத்தல், தன்னுள்
விஞ்சிவரும் படர்மெலிந்(து) இரங்கல், கண்கள்
    விதுப்பழித்தல், உறுப்புநலன் அழித்தல், கற்பாய்க்
கொஞ்சிவர அவர்வயின்வி தும்பல், போன்ற
    குறிப்புகளை இன்பத்தில் இனிதாய்ச் சேர்த்தார்!
       
நூற்றுமுப்ப(து) அதிகாரம்! குறள்கள் எல்லாம்
    நுட்பத்துடன் ஆராய அருளோ வேண்டும்!
நாற்றுபோலே நானிருக்கேன்! நவின்ற சொற்கள்
    நற்றமிழின் மழையினிலே பொதிந்த வேர்கள்!
காற்றைக்போல் தொடமுடியா உயர்வைக் கொண்ட
    கருத்துள்ள குறள்நெறியில் உலகில் வாழ்ந்தால்
கூற்றுவனே கொண்டுசென்ற பின்பும் கூட
    குறள்கொடுத்த உறவாலே உயர்ந்தே நிற்போம்.!!

அருணா செல்வம்.
13.02.2013

29 கருத்துகள்:

  1. அருமை.... குறள்வழி சிறப்பாய் நடந்திட வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. வரிகள் மேலும் சிறப்பு...

    பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. அதிகாரங்களின் பெயர்களைக் கொண்டு அழகான எண்சீர் விருத்தம்(சரிதானா?) அமைத்தது சிறப்பு.
    சரளமான கவி நடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் எண்சீர் விருத்தம் போல் இல்லையா...?

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கல் காற்று.

      நீக்கு

  4. /உறவொன்றும் கேட்கவில்லை! அன்னைக் குள்ளே
    உருவொன்று கருவாக உயிரைப் பெற்றோம்!/--உறவொன்றும் கேட்காமலே கரு.? எனக்குத்தான் விளங்கவில்லையா.?திருக்குறள் பற்றிய அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      “நாமே இந்தத் தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று கேட்டுப் பிறக்கவில்லை“ என்பது தான் அதன் பொருள்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்பரமணியன் ஐயா.

      நீக்கு
  5. Miga miga arumayaana kavithai... ithu thaan ungalukku perumai sertha kavithai ena nambugiren... neengal ungal uchaththai thottu vittergal..

    sukumar www.nisu1720.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுகுமார் ஐயா.

      நீக்கு
  6. அழகான கவிதை .
    திருக்குறள் அதிகாரங்களை வைத்து வாழ்க்கையை விவரித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. எங்கு பயின்றீர்கள் இப்படி ஒரு அழகு தமிழை எனக்கும் கொஞ்சம் கற்று தாருங்கள்...

    பதிலளிநீக்கு
  8. எங்கு பயின்றீர்கள் இப்படி ஒரு அழகு தமிழை எனக்கும் கொஞ்சம் கற்று தாருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் யாப்பிலக்கண ஆசிரியர் கவிஞர் கி.பாரதி தாசன் அவர்கள்.

      ஆனால்...
      நான் அறியாததை யார் யாரெல்லாம்
      சொல்லிக் கொடுக்கிறார்களோ.... அவர்கள் அனைவருமே
      எனக்கு ஆசிரியர்கள் தான்.

      தங்களின் வருகைக்கு
      மிக்க நன்றி ஆதிரா.


      நீக்கு
  9. அருமையான கவிதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர்பாலன்.

      நீக்கு
  10. தமிழ் விளையாடும் கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  11. அழகான கவிதை.தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நட்பே!

      நீக்கு
  12. குறளும் உங்களின் கவிதையும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  13. Nice...The guy who asked you like that should have some guts...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  14. [[G.M Balasubramaniam22 February 2013 23:16
    /உறவொன்றும் கேட்கவில்லை! அன்னைக் குள்ளே
    உருவொன்று கருவாக உயிரைப் பெற்றோம்!/--உறவொன்றும் கேட்காமலே கரு.? எனக்குத்தான் விளங்கவில்லையா.?]]
    ____________________________________________
    வாழ்க்கையின் தத்துவமே ஏன் உலகம் இயங்குவதும் இயக்கபடுவதும் இதில் தான்..! நாம் பிறப்பதற்கு காரணம்...

    நமது பெற்றோரின் உறவாக, மகனாகவோ மகளாகவோ, வரவேண்டும் என்று நாம் கேட்கவில்லை! நாம் நமது அன்னையின் வயிற்றில் கருவாக காரணம் நாமில்லை; வேறு இருவர்; நமது பெற்றோர்கள்.

    பெற்றோர்களின் கவிதையில் உருவாகும் கருவே நாம்; அந்த உறவு நாம் கேட்காமல் வந்த உறவு...! காதல் என்ற மூன்றேழுத்து இல்லாவிடில் உலகத்தில் உறவேது?

    ஆங்கிலத்தில்...A child is a bye-product of sex; but for sex, we would not be discussing this here...

    An unwanted child is often refereed to as a means to an end...!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      கவிதையைப் புரிந்து கொண்டு பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் கேள்விக்கும் அழகாக விளக்கமளித்தமைக்கும் மிக்க நன்றி.



      நீக்கு
  15. எனக்கு இலக்கணமெல்லாம் தெரியாதுங்க. அழகுத் தமிழை ரசிக்க மட்டும் நல்லாவே தெரியும். குறள் கூறும் நெறிகளை வைத்து உங்களின் சுந்தரத் தமிழ் விளையாடுவதை மிகவும் ரசித்துப் படிச்சேன் அருணா! இன்னும் நிறைய நற்கவிதைகளை நீங்கள் எங்களுக்குத் தர மனம் நிறைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு