ஞாயிறு, 17 ஜூன், 2012

மழலை மொழி!! (கவிதை)




சின்னப் பூபோல்
   சிரிக்கும் வாயால்
      சிந்தும் மழலைமொழி!
கன்னித் தமிழைக்
   கன்னல் தேனில்
      குழைத்த கவிதையடி!
உன்னில் இருந்து
   உலகை மறந்து
      உதிரும் சிரிப்பொலியோ
பொன்னை உருக்கிப்
   பூவில் நனைத்துப்
      பொழியும் இன்பமடி!


(இப்பொழுது...
கவிமனத்தில் ”போகப் போகத் தெரியும்” பாகம் 13)

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் தனபாலன் ஐயா.

      தங்களின் முதல்வருகைக்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  2. மூங்கிலில் நுழைந்து
    முன்னூறு இசைகொடுக்கும்
    முத்தான மொழியல்லவா........

    பதிலளிநீக்கு
  3. உன்னில் இருந்து
    உலகை மறந்து
    உதிரும் சிரிப்பொலியோ// மழலை சிரிப்பில் உலகை மறக்காதவர் உண்டோ . அருமை வரிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”மழலை சிரிப்பில் உலகை மறக்காதவர் உண்டோ . அருமை வரிகள் .“ -சசிகலா.

      உண்மைதாங்க சசிகலா.
      நன்றிங்க.

      நீக்கு
  4. ஆஹா...தொடருங்கள் உங்கள் பாணியில் உங்கள் பாதையில் உங்கள் பயணத்தை....:)
    நல்ல படைப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி....

      உங்களை மாதிறி ரசிகர்கள் இருந்தால்...
      எனகவிப்பாதையும் முடியாது
      பயணமும் முடியாதுங்க.

      நன்றிங்க சிட்டுக்குருவி.

      நீக்கு
  5. தேனில் குலைத்த கவிதைதான்,

    பதிலளிநீக்கு
  6. பிள்ளை மொழி
    தேன் மொழி அல்லாவா

    ம்ம்ம்.... அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க தோழரே... அதனால்தாங்க இனிக்கிறது.

      நன்றிங்க.

      நீக்கு
  7. பொன்னை உருக்கி, பூவில் நனைத்து... மயககிட்டுது வரிகள் அருணா. எப்படித்தான் இப்படி எழுத வருதோ. அருமைப்பா.

    பதிலளிநீக்கு