திங்கள், 24 மார்ச், 2014

இசைப்பாட்டு! (பாடிப் பாருங்கள்)




சிந்து பாடுவேனோ?


            (எடுப்பு)

சிந்து பாடு வேனோ உடல்
சிலிர்க்கப் பாடு வேனோ                      (சிந்து)

            (தொடுப்பு)

சந்தம் நிறைகிற சதிராடும் தமிழால்
சாதனை புரிகிற செழித்திடும் மொழியால்      (சிந்து)

            (முடிப்பு)

அமைதியாய் அமர்ந்திடும் பாவலர் நெஞ்சில்
அரவரம் புரிந்திடும் காதலர் நெஞ்சில்
குரல்வளம் கொடுத்திடும் பாடகர் நெஞ்சில்
கொஞ்சிடக் குளிர்ந்திடும் என்னவர் நெஞ்சில்   (சிந்து)


அருணா செல்வம்
24.03.2014

21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனாபலன் அண்ணா.

      நீக்கு
  2. மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி அருணா .த .ம .3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. பாடல் நன்றாக இருக்கிறது பாடத்தான் ஆசை என்ன செய்வது? அருகில் உள்ளவர்கள் பயந்து விடக் கூடாதே அதனால் பாட்டை படித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே அதனால தாங்க உங்களை பாடிப்பார்க்கச் சொன்னேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  4. நல்ல பாடல்....

    நான் பாடிப் பார்த்தேன்... என் குரல் கேட்டு வாசலில் ஏதோ சத்தம்... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... என் வீட்டு வாசலிலும் அதே மாதிரி சத்தம் தான் கேட்டது..... அதனால் தான் நான் பாடவதை நிறுத்திவிட்டு உங்களுக்குப் பதிர்ந்தேன்.

      நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. எடுப்பு ,தொடுப்பு ,முடிப்பை பாடிப் பார்த்தேன் ,வீட்டுக்கார அம்மா கடுப்பு ஆயிட்டாங்க !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயாவது பரவாயில்லை.
      இங்கே என் குரலைக் கெட்டு நானே கடுப்பாகி விட்டேன்.

      நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  6. பாடல் நன்றாக உள்ள்து! மெட்டுப் போடலாமே! சகோதரி!

    போடலாம் என்றால் நாங்கள் ரெடி! கேட்க ஆள் இருக்குமா என்று தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ரெடி இல்லைங்க.
      நீங்கள் பாடிப்பாருங்கள்.... கேட்க ஆள் வரும்... வரும்... வரும்...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  7. நம்ப பேட்டையாண்டே இத்தப் பாட சொல்லோ... இன்னாபா இத்து... நம்ப கானா சாங்கு மாறி தெர்லயேபா... இர்ந்தாலும் சோக்கா கீதுபான்னு சொல்லிக்கினாங்கம்மே...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கானா சாங்குக்கு இத்தெல்லாம் பிஸ்கோத்து!

      இருந்தா கூட பாடி பாத்திருக்கியே நைனா. வெரி டாங்ஸ்ப்பா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  10. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு

  11. வணக்கம்!

    சிந்துக் கவிபாடிச் சிந்தை பறிக்கின்றீா்!
    முந்தும் தமிழை மொழிந்து!

    பதிலளிநீக்கு