செவ்வாய், 16 செப்டம்பர், 2014

எல்லோரும் ஓடி வந்து பாருங்கள்!!நட்புறவுகளுக்கு வணக்கம்.
   நான் சொல்லப்போகிற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரித்தையோ கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. இது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆச்சர்யம்....
   என்னவென்று யோசிக்கிறீர்களா.....? சொல்கிறேன். சொல்கிறேன்.
   கடந்த 31.10.2010 அன்று நடந்த கம்பன் விழாவில்

சீர்மணக்கும் செந்தமிழின் யாப்பைக் கற்று,
    பார்மணக்கும் பாட்டெழுதிச் சங்கம் சான்ற
பேர்மணக்கும் பெரும்புகழைப் பெற்று! மின்னும்
    தேர்மணக்கும் திருமகளின் அருளை ஏற்று!
தார்மணக்கும் சொல்லாற்றல்! ஒளிரும் பண்பாம்
    வேர்மணக்கும் எழுத்தாற்றல்! குளிரும் இன்பக்
கார்மணக்கும் கவியாற்றல் கமழ்ந்து வாழும்
    கவிதைப்பெண் உயர்அருணா செல்வம் வாழ்க!

என்று வாழ்த்தி, “கவிதைப்பெண்“ என்ற விருதை கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் எனக்கு வழங்கினார்.

  அதற்கு முன் 2006 ம் ஆண்டு “சிறந்த பேச்சாளர்“ என்ற விருதையும் கம்பன் கழகம் வழங்கியது. (அதற்கு முன்பே வீட்டில் “வாயாடி“ என்ற பட்டம் சான்றிதழ் இல்லாமலேயே இருப்பது அவர்களுக்குத் தெரியாது)
  பிறகு வலைப்பு திறந்த புதியதில் நண்பர் செய்தாலி அவர்கள் ஒரு விருதை வழங்கினார்.
   இப்பொழுது மீண்டும் ஒரு விருது!!
   தோழி அம்பாளடியாள் அவர்கள் அன்புடன் எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளார். இதைப் பார்க்கத் தான் உங்கள் அனைவரையும் ஓடி வரச் சொன்னேன். உங்களுக்கு இது ஆச்சர்யமான விசயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய ஆச்சர்யம். காரணம்..... நான் முதன்முதலில் ஒரு பெண்ணிடம் இருந்து விருது பெற்றிருக்கிறேன் என்பது தான்...


மிக்க நன்றி தோழி!!

   தவிர, விருது பெற்ற அனைவருக்கும் இதன் நிபந்தனைகள் தெரியும். அதனால் நான் விளக்கவில்லை. நான் மிகவும் தாமதமாக வந்ததால் நான் விருது கொடுக்க நினைத்த அனைவரும் இரண்டு மூன்று முறை அதே விருதை வாங்கி விட்டிருக்கிறார்கள். அதனால் நான் யாருக்கு விருதைக் கொடுப்பது என்று அறியாமல் என் விருதை மட்டும் என் வலையில் வைத்துவிட்டேன்.

   அடுத்து என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டுமாம்.
   உண்மையில் என்னைப்பற்றி எனக்கே தெரியவில்லை. நான் யார்? எங்கிருந்து வந்தேன்?...... என்றெல்லாம் (யோசித்து யோசித்து யோசித்துக்கொண்டே இருந்தாலும்..... அதையெல்லாம்) சொல்லி உங்களைக் கடுப்பேத்த மாட்டேன்.
   இதெல்லாம் இல்லாமல், என் பெயர் அருணா. என் கணவர் பெயர் என்செல்வம். எனக்குத் தமிழ்...... என்று எழுதினால்.... இதெல்லாமும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
   அதனால் வித்தியாசமாக எனக்குப் பிடித்த உணவுவகைகளை எழுதிவிடுகிறேன்.

1.நிறைய முந்திரி போட்ட பாயாசம்.
2. ஐஸ் கிரிம் ( ஜிகிர்தண்டா ஐஸ்கிரிமை நம் பதிவர் சந்திப்பில் கொடுக்க இருக்கிறார்களாம்.... ம்ம்ம்.... எனக்குத் தான் அதைச் சாப்பிட கொடுப்பனை இல்லை.)
3. இஸ்லாமிய சகோதரிகள் செய்யும் மட்டன் பிரியாணி.
4. என் அம்மா எனக்காகச் செய்து தரும் மட்டன் சாப்ஸ்.
5. வஞ்சர மீன் வறுவல்.
6. நெய் சொட்டச் சொட்ட இருக்கும் சிகப்பரிசி “தொதோல்“
7. முறுவல் தோசை அதற்கு தேங்காய் சட்னி......
   இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..... படிப்பவர்களுக்குக் கோபம் வரும் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் ஏன் இங்கே சொன்னேன் என்று சிலருக்குத் தோன்றும் இல்லையா..... அது ஒன்றுமில்லைங்க.... என்றாவது ஒருநாள் நான் இந்தியா வந்து உங்களில் யாரையாவது சந்தித்தால் இதில் ஒன்றைச் செய்துத் தருவீர்கள் என்ற நட்பாசை தாங்க.

அன்புடன்
அருணா செல்வம்
17.09.2014

    

26 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

செந்தமிழ் கலைச்சொற்களால்
நற்பாக்கள் இயற்றும் உங்களுக்கு
ஏற்ற விருதுகள் தான் தங்கை அருணா செல்வம்...
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இன்னும் பல உயரிய விருதுகள் பெற்றிட
அனபார்ந்த வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

விருதுகளுக்கு வாழ்த்துகள். தொதோல் என்றால் என்ன? :)))

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல விருதுகள் வந்து குவியட்டும்
த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கார்த்திக் சரவணன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.!

இளமதி சொன்னது…

விருதுகளால் நீங்கள் பெருமைப்படுவீர்கள்! அது உண்மை!
ஆனால்.. அத்தனை விருதுகளும் உங்களைச் சேர்ததால்
பெருமை கொள்ளும் தோழி!

அத்தனை பேற்றுக்கும் மிகத் தகுதியானவரே நீங்கள்!

உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…

என் வீட்டிற்கு வந்தால் சைவ உணவே கிடைக்கும்.. எனக்கும் தொதோல் என்றால் என்ன என்று தெரியவில்லை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.....

தொதோல் - என்னவென்று ஒரு பதிவு போடுங்களேன்!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் தோழி !

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Unknown சொன்னது…

மகளே! நீ இந்தியா வரும்போது என் வீட்டிற்கு என்னைப் பார்க மட்டுமே வரவேண்டுகிறேன் மற்றது....! மன்னிக்கவும்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

தொதோல் என்றால் மெல்லிய கறுப்பு அரிசியில் செய்யும் இனிப்பு பண்டம். அதன் செய்முறையை ஒரு பதிவில் விளக்குகிறேன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

போங்க தோழி.
என்னை அதிகமாகப் புகழ்ந்து இருக்கிறீர்கள்.
எனக்குச் சங்கோஜமாக இருக்கிறது.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

ஐயா.... நான் சைவம் சாப்பிட மாட்டேன் என்று சொல்லவில்லை.
தொதோல் என்பதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.
(உங்களுக்கு 74 வயதா....? நான் இனி உங்களைத் தாத்தா என்று தான் அழைக்கப் போறேன்.)

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம்..... பதிவாகவே போட்டு விடுகிறேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

கவலையே வேண்டாம் ஐயா.
நான் கவிதை கட்டுரை எழுதுவதைவிட சமையல் நன்றாக செய்வேன்.
நானே உங்களுக்குப் பிடித்த சைவ உணவுகளைச் செய்து கொண்டு வந்து பார்க்கிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா...

சிவகுமாரன் சொன்னது…

மேன்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்