ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மிக உயரமான நீர்வீழ்ச்சி!


                                                         
 

   ஒரு சமயம் காந்திஜியும் காகா கலேல்கரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள “ஷிமோகா“ என்ற இடத்திற்குச் சென்றிருந்தனர்.
   ஓர் ஓய்வு நேரத்தில் கலேல்கர் காந்திஜியிடம், “இங்குள்ள ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. நாம் அவசியம் அதைப் பார்க்க வேண்டும்“ என்றார்.
   “நீர்வீழ்ச்சியில் என்ன இருக்கிறது பார்க்க?“ எனறு கேட்டார் காந்திஜி.
    “இந்தியாவில் உயரமான நீர்வீழ்ச்சி அது!“ என்றார் கலேல்கர்.
    “இருக்கட்டுமே! அதனாலென்ன?“ என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார் காந்திஜி.
    “இல்லை. அதைப் பார்க்க வேண்டும் போலுள்ளது.“ என்று குழைந்தார் கலேல்கர்.
    “அங்கு இங்கு சுற்றி நேரத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு வேலை இருக்கிறது. என்னால் வரமுடியாது“ என்று தீர்மானமாகச் சொன்னார் காந்திஜி.
    கலேல்கரோ அவரை விடுவதாக இல்லை.
    “மன்னிக்க வேண்டும். உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியான வெனிசுலா நாட்டிலிருக்கும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைப் போல் உள்ளதாம் இந்த நீர்வீழ்ச்சி. போனவுடன் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடலாம்“ என்றார் கலேல்கர்.
    காந்திஜி அவரைத் தீர்க்கமான கண்களால் பார்த்தார்.
    “சரி. இப்பொழுது நான் ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் சொல்லுவதை விட உயரமான நீர்விழ்ச்சி ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைவிட பல மடங்கு உயரத்தில் இருந்து அது விழுகிறது. மகா அற்புதம் போங்கள்“ என்றார் காந்திஜி.
    “அப்படியா...! நீங்கள் சொல்லும் அந்த நீர்வீழ்ச்சி எங்கே இருக்கிறது?“ என்று கேட்டார் கலேல்கர்.
    “எங்கும் பார்க்கலாம். மழைதான் அந்த நீர்வீழ்ச்சி. அதைவிடவா நீங்கள் சொல்லும் ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி உயரத்திலிருந்து விழுகிறது?“ என்றார் காந்திஜி.
    கலேல்கர் வாயடைத்துப் போனானர். அதோடு ஜெர்சப்பா நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் எண்ணத்தையே விட்டு விட்டார்.

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.

12 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படித்ததில் பிடித்தது..... எங்களுக்கும் பிடித்தது...

பகிர்வுக்கு நன்றி அருணா செல்வம்.

Avargal Unmaigal சொன்னது…

எங்க நீர்விழ்ச்சிக்கு கூட்டி போய் தன்னை தள்ளிவிட்டுவிடுவார் என்று பயந்து இப்படி சொல்லி இருக்கிறார் காந்திஜீ. வெவரமான மனுஷன் காந்திஜி

Yaathoramani.blogspot.com சொன்னது…

அசத்தல் பதில்
அறியாத செய்தி
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma4

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

காந்தி ஒரு கவிஞாராய் இருந்திருக்க வேண்டியவர் போல் இருக்கிறது. இதுவரை அறியாத தகவல் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

ம்.... சரிதான்... காந்திக்கு நீர்வீழ்ச்சி பிடிக்கவிலை என்பதால் மழையை நீர்வீழ்ச்சி ஆக்கிவிட்டாரா?

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

காலத்தைப் போற்றிய காந்தியின் சொற்படித்தால்
ஞாலத்தை வெல்லலாம் நாம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

uNmai:)

Unknown சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு நன்றி..

கும்மாச்சி சொன்னது…

பகிர்விற்கு நன்றி அருணா.

ராஜி சொன்னது…

நல்ல பகிர்வு

Seeni சொன்னது…

ada...

nantri!