புதன், 14 ஆகஸ்ட், 2013

கழுதையும் உருளைக்கிழங்கும்!! (நகைச்சுவை)




    ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
    அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
    பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார்.
    அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார்.
    பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.
    அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.
    அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட... வென்று சிரித்துவிட்டார்.
    பிறகு அவர், “பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா... கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!“ என்றார்.
    அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, “உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்“. என்றார்.
    அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கிவிட்டது.

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. பெர்னாட்ஷா வை பேச்சில் வென்றது யாரும் இல்லை .அருமை !

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    வல்லவன் வாழ்வில் வளமின்றி வரண்டுள்ள
    புல்லும் பெறுமே புகழ்!

    தமிழ்மணம் 2

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  3. நல்ல நகைச்சுவை. நீங்கள் அடிக்கடி கூறும் கடவுள்,பக்தன்,பரிசுசீட்டு கதையையும் பதிவில் ஏற்றலாமே.அப்துல் தயுப்.

    பதிலளிநீக்கு
  4. ஜூப்பர்....... இப்படி சந்தர்ப்பதுல கதைக்கிற திறமை எனக்கு இல்லையெங்கிறதும் ஒரு :(

    பதிலளிநீக்கு
  5. சில கழுதைகள் உருளைகிழங்கு திங்காது என்பது சரிதான்.
    நம்ம நினைச்சிட்டு இருக்கோம் கழுதைகளுக்கு புத்தி மட்டு என்று.
    அது சரி அல்ல.
    உருளைக்கிழங்கு சாபிட்டால் வாய்வு உபத்திரவம் வரும் என்கிற செய்தி கழுதைகளுக்கு நன்றாகவே தெரியும்.

    எப்படி என்று கேட்கிறீர்கள் இல்லையா ?

    எனக்கு தெரிந்து இருப்பது பர்னாட் ஷாவுக்கு தெரியாமல் இருக்குமா ?

    ஹா ஹா ஹா ...

    ஜோக் பிரமாதம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஓ,,,,ஓ,,,,ஓ,,,, நகைச்சுவை மிக அருமையாக உள்ளது பின்னூட்டம் எழுதும்போதும் சிரிப்புத்தான்,,,,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நல்ல நகைச்சுவை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமை அருமை அருமை அருமை

    பதிலளிநீக்கு
  9. நகைக்கவைத்தப் பகிர்வு. நன்றி அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
  10. நேரத்திற்கு தகுந்தாற் போல் உடனே இப்படி பேச அவருக்கு நிகர் அவர் தான்....

    பதிலளிநீக்கு
  11. அருமையான நகைச்சுவைப் பகிர்வு சகோதரி...

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு