வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நான் ஏன் உயிர் வாழ்கிறேன்? (நகைச்சுவை)



 
    
   இலக்கித்தைப் பொறுத்தவரை யாராவது தவறு செய்து விட்டால் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும்.
    “இலக்கியத்தில் தவறே இல்லை. தவறு செய்யக் கூடாதது இலக்கியம்“ என்பார்.
    பெர்னார்ட் ஷா காலத்தில் ஓர் இளம் கவிஞர் இருந்தார். அவர் பெர்னார்ட் ஷாவின் தீவிர விசிறி. ஆங்கில இலக்கியத்தில் பெர்னார்ட் ஷாவைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
    ஒரு சமயம், அந்த இளம் கவிஞர், “நான் ஏன் உயிர் வாழ்கிறேன்“ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார்.
    அதை பெர்னார்ட் ஷாவின் விமர்சனத்திற்கு அனுப்பி வைத்தார்.
    கவிதையைப் படித்த பெர்னார்ட் ஷாவிற்கு ஒரே எரிச்சல் வந்தது. அந்தக் கவிதை சுத்த பேத்தலாக இருந்தது. கரு சரியில்லை... நடை சரியில்லை.... கையெழுத்துச் சரியில்லை.... என்று எத்தனையோ கோளாறுகள் அந்தக் கவிதையில் இருந்தன.
    கவிதையின் தலைப்பை மறுபடி படித்தார் பெர்னார்ட் ஷா.
    அவர் உடனே அந்த இளம் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    “இளைஞனே! உன் கவிதையை எடுத்துக் கொண்டு நீயே நேரில் வராமல் நல்ல வேலையாகத் தபாலில் அனுப்பி வைத்தாய். அதனால் தான் நீ இன்னும் உயிர் வாழ்கிறார்“ என்று எழுதி அனுப்பி வைத்தார்.

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.

9 கருத்துகள்:

  1. ரொம்ப கோவக்கார இருப்பாரோ....

    ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. நானும் வலைப்பூவில் எழுதுவதால் தப்பித்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன் ...வருகிற வலைப் பதிவர்கள் திருவிழாவில் நேரில் கலந்துக் கொள்வதால் ஏதேனும் ஆபத்து வராமே இருக்கணும் !

    பதிலளிநீக்கு
  3. ஹா... ஹா....

    அது சரி...

    நல்லவேளைக்கு என்னோட ஆசானுக்கெல்லாம் கோவம் வரலை... வந்திருந்தா....

    பதிலளிநீக்கு
  4. அருமை சகோதரி... கடைசியில் உள்ள எழுத்துப்பிழையை சரி செய்யவும்..

    பதிலளிநீக்கு
  5. [[ இலக்கித்தைப் பொறுத்தவரை யாராவது தவறு செய்து விட்டால் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும்.]]

    அதனால் தான் நான் கவிதை எழுதுவது இல்லை...!

    பின்குறிப்பு:
    திரிஷாவின் அப்பா தானே பெர்னார்ட்ஷா?

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்

    அருமையான நகைச்சுவை படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிலடி. சிறப்பு தோழி. நலம்தானே ? உங்களை எங்கும்காணவில்லை என்று கேட்டேன்.

    பதிலளிநீக்கு