தரகர்
கொண்டு வந்து கொடுத்தப் படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத்தான்
இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப்
பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட்டாரிடம் மேற்கொண்ட
செய்திகளைப் பேசுவதுமாக இருந்ததைப் பார்க்கும் பொழுது இந்த இடம் மிகவும்
அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.
என்ன செய்யலாம்
... என்ற யோசனையுடன் தாயைத் தனியாக வெளியில் அழைத்து வந்தான்.
“அம்மா... தரகர்
இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டினார் இல்லையா...? அந்தப் பெண்ணையும் பார்த்து
விடலாம்“ என்றான் மாதவன்.
அம்மாவிற்குக்
கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித்துச், “சரிப்பா பாத்திடலாம்... ஆனால் இந்தப்
பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறாள். குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும்
ஏத்த சோடியா தெரியுது. மற்றபடி மீதி எல்லாமே பொருந்தி வருது......“ அவள் பேச்சை
இழுக்க, “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கனும். அவ படத்துலே இவளை விட அழகா
இருந்தாள்... எனக்கு அவளைக் காட்டுங்கள்“ என்றான் பிடிவாதமாக மாதவன்.
வேறு
வழியில்லை. அனைவரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மையில் மேனாகவை விட
இந்தப் பெண் மதுமிதா அதிக அழகு. மாதவனுக்குப் பார்த்ததும் இவளைப் பிடித்துவிட்டது.
பெண் வீட்டாரும் நல்ல கலகலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய்
பேசிவிட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்“ என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே
பேசி முடியுங்கள்“ என்றான் மாதவன்.
“சரிப்பா...
ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது...?“ யோசனையுடன் கேட்டார்
அப்பா.
“பிடிக்கலை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை...
இல்லையென்றால் பொருத்தம் பத்தலைன்னு ஏதாவது சொல்லிடுங்கள். ஆனால் எனக்கு இந்தப்
பெண்தான் வேணும்“ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.
உடனே தரகரை
வரவழித்தார் அப்பா. தரகரிடம், “மதுமிதா வீட்டிற்குப் போய் எங்களுக்குச்
சம்மதம்ன்னு சொல்லிடுங்கள்“ என்றார்.
அவர் கொஞ்சம்
தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?“ என்று கேட்டார்.
“அது
வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண்டாங்க. தம்பிக்கு வேற இடம்
காட்டுறேங்க.“ என்றார் தரகர் தலையைச் சொறிந்தபடி.
“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்...“
என்றார் அப்பா.
“அது
முடியாதுங்க.“
“ஏன்...?“
“ஏதோ
பொருத்தம் பத்தலைன்னு சொன்னாங்க“
இதைச்
சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பா யோசித்தபடி.... “இது உண்மையான காரணமா இருக்க
முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு தானே சொல்லி
பொண்ணோட படத்தைக் காட்டினீங்...? பிறகென்னவாம்...?“ சற்று காரமாக கேட்டார்.
“அது
வந்துங்க....“ திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு மெதுவாக அவர் காதருகில் வந்து
“உங்க பிள்ளை... அந்த பொண்ணுக்கேத்த அழகு இல்லையாம். அதனால பொண்ணுக்குப் பிடிக்கலையாம்“
என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் தரகர்.
அப்பா
பெருமூச்சுடன் அமர்ந்தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த
மாதவன் நிலைகண்ணாடியைப் பார்த்தான்.
அடுத்தவர் வந்து சொல்லும்
வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!
அருணா செல்வம்.
02.08.2013
மாதவனுக்கு சரியான அடி தான்... அழகுக் கதை அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
அருமை!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி துளசி அம்மா.
பதிலளிநீக்குஅழகுக்கு ஆசைப்பட்டால் இப்படிதான் கஷ்டப்பட வேண்டும் நல்ல கதை
அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!
பதிலளிநீக்குநான் சொன்னது உண்மைதானுங்க...?
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
மாதவனுக்கு தேவைதான்!!
பதிலளிநீக்குஆமாம்... அவனுக்கு நல்லா வேண்டும்....
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
அழகப்பாத்து கண்ணாலம் கட்டியவர்கள் எல்லாம் இன்று ரொம்ப கஷ்டப்படுகின்றனர்...அழகு நிலையத்துக்கே மாதம் பாதி செலவாகுதாம்...
பதிலளிநீக்குஅழகானவர்கள் எதற்காக அழகு நிலைஙத்துக்கு போகனும்?
நீக்குஅச்சோ... ஏமார்ந்து விட்டார்கள் போல.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சங்கவி.
ஓரு நிமிடத்தில் சூப்பர் கதை.... நன்றி
பதிலளிநீக்குநெத்தியடிக் கதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
அருமையான பாடம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
அலைபாயும் நெஞ்சை அடக்கினால் வாழ்க்கை
கலைமேவும் என்றும் கமழ்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் கருத்துக் கவிக்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
இன்னொருவர் வந்து கூறுமுன்பே தன் இருப்பைத்தானே உணர்ந்து கொள்ளல் அவசியம்.
பதிலளிநீக்குமிகவும் அருமையான கதை அருணா!
வாழ்த்துக்கள்!
த ம.6
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
சரியான அடி....
பதிலளிநீக்குநல்ல சிறுகதை....
த.ம. 7
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
நல்ல நோஸ் கட்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மூங்கில் காற்று.
கதை சூப்பர் தோழி. முக அழகு முக்கியமில்லை என்பதை இந்த காலத்து பிள்ளைகள் எங்கே உணர்கிறார்கள்.
பதிலளிநீக்குஹலோ சசிகலா.... எங்கண்ணன் உங்க அழகைப் பார்த்து தான் மயங்கினார் என்பது எங்களுக்குத் தெரியுங்க.
நீக்குச்சும்மா அந்த காலம் இந்த காலம்ன்னு சொல்லாதீங்க.
நன்றி சசிகலா.
கதை---அழகு!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி பித்தன் ஐயா.
பார்க்கிறேன் அண்ணா.
பதிலளிநீக்குஅழகிய கதை அழகு பற்றிய கதை அருமையான கதை
பதிலளிநீக்குarumai..
பதிலளிநீக்கு