வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கலைவாணர் சொன்ன “மை“ கள்!


                     
  
    ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.
    “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
    “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.
    அதைக்கேட்டதும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
    “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“யாகவும், உரி“மை“யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
   கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.

பிடித்ததைப் பகிர்ந்தேன்.
அருணா செல்வம்.

19 கருத்துகள்:

  1. கலைவாணரின் சொல்நயத்தை பகிர்ந்தமை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. ரொம்பத்திற’மை’யான பேச்சு.
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. எழுதுகோல் ஏந்திய
    எல்லோருக்கு ஏற்ற
    உண்மை
    கலைவாணர் சொன்ன “மை“ கள்!
    உண்மையில்
    எனக்குப் பிடித்த பதிவிது
    படித்தவர்கள்
    பலருக்குப் பறை சாற்றினால்
    தமிழுக்கு நன்மை!

    பதிலளிநீக்கு
  4. ”மை”ல இவ்வளவ் விசயம் இருக்கா?!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையாகச் சொன்னார்
    அறியாத விவரமதை அருமையாக
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமை....

    எனது ஒரு ஃப்ரூட் சாலட் பகுதியில் இந்த விஷயத்தினை பகிர்ந்து கொண்ட நினைவு...

    பதிலளிநீக்கு
  7. மேதை'மை'நிறைய இருந்தால் பேச்சிலும் வள'மை' நிறைய இருக்கும். :)))

    பதிலளிநீக்கு
  8. கலைவாணர் சொன்னது அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இது போன்ற அருமையான பகிர்வுகளை நிறைய எதிர்நோக்குகிறேன்....
    (உங்களிடம் பேசும் முன்னரே எனது முகநூல் மற்றும் வலைப்பூவிற்கும் 'சுட்டு விட்டேன்'...)

    பதிலளிநீக்கு
  10. கலை வாணரின் வார்த்தை விளையாட்டு சூப்பர்.

    உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  11. அருமையான நல்ல செய்தி, இப்படிப்பட்ட செய்திகளை எதிர் பார்க்கின்றோம்.அப்துல் தயுப்

    பதிலளிநீக்கு
  12. தாய்குலங்களே!
    இவ்வையுலகில் அருமையும் பெருமையும் கொண்ட ஒரே மை-தாய்மை..!

    பின்குறிப்பு:
    உங்க பெருமையையும் நாங்க தான் எடுத்து சொல்லனும் போல இருக்கு!

    பதிலளிநீக்கு
  13. அரு மை அவர் வாய் மை வெல்லும்

    பதிலளிநீக்கு
  14. அரு மை அவர் வாய் மை வெல்லும்

    பதிலளிநீக்கு
  15. அருமை அருமை, அவரது சிந்தனையை தூண்டும் நகைச்சுவையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    அரிய தகவலை அனைவரும், அறிய பகிர்ந்தமைக்கு நன்றி
    நமக்கு தெரிந்ததெல்லாம், நேர்மை, எருமை, கருமை

    பதிலளிநீக்கு