புதன், 28 ஆகஸ்ட், 2013

பாப்பா பாட்டு!!

 

சிட்டுக் குருவி
   சிறகை விரித்துச்
      சீராய் வந்துவிடு!
பட்டுப் பாப்பா
   பல்லைக் காட்ட
     பாக்கள் பாடிவிடு!
கட்டும் பாட்டில்
   கன்னல் தமிழைக்
     கருத்தாய்ச் சேர்த்துவிடு!       
சொட்டுத் தேனாய்ச்
   சொற்கள் இனிக்கச்
      சொக்க வைத்துவிடு!

வட்ட நிலவின்
   வண்ணக் கதையை
      வகையாய்ச் சொல்லிவிடு!
பட்டுப் புழுவின்
   பண்பு வாழ்வைப்
      பாட்டில் கலந்துவிடு1
எட்டுத் திக்கும்
   ஏற்கும் தமிழை
      என்றும் நீகலந்தால்
மெட்டு போட்டே
   மேலும் பாப்பா
      மேன்மை கவிபடைப்பாள்! 

அருணா செல்வம்.

20 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

ராஜி சொன்னது…

பாப்பாவை பாடல் வடிக்க சொல்லும் பாடல் அழகு அருணா!

K சொன்னது…

பாப்பா பாட்டு அருமை!

பட்டுப் புழுவின்
   பண்பு வாழ்வைப்
      பாட்டில் கலந்துவிடு //

இது நல்லா இருக்கே! யாருமே சிந்திக்காதது :)))

Seeni சொன்னது…

ada...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அழகான பாட்டு அருணா

மகேந்திரன் சொன்னது…

குழந்தையாய் மாறிப்போனது மனது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பாப்பா பாட்டு அருமை.

அ.பாண்டியன் சொன்னது…

//கட்டும் பாட்டில்
கன்னல் தமிழைக்
கருத்தாய்ச் சேர்த்துவிடு!// அருமையான வரிகளுடன் கூடிய பாடல். பகிந்தமைக்கு நன்றி ச்கோதரி.

Yarlpavanan சொன்னது…

பாப்பா பாட்டு!! - இதில்
"கட்டும் பாட்டில்
கன்னல் தமிழைக்
கருத்தாய்ச் சேர்த்துவிடு!" என்றும்
"எட்டுத் திக்கும்
ஏற்கும் தமிழை
என்றும் நீகலந்தால்
மெட்டு போட்டே
மேலும் பாப்பா
மேன்மை கவிபடைப்பாள்!" என்றும்
நம்மாளுகள்
கன்னல் தமிழில்
பாபுனைய வழிகாட்டியதை
வரவேற்கிறேன்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஜீவன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோ.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.