திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கவிஞர் வாலியின் எதிராளியின் பலம்! (நகைச்சுவை)
    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலியை ஒரு நண்பர் சந்தித்தார்.
    “ஏன் இந்தப் பெயரை வைத்துக் கொண்டீர்கள்?“ என்று கேட்டார்.
    அதற்கு வாலி, ராமாயணத்தில் வரும் வாலி தன் எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்றுள்ளது போல நான் சந்திக்கும் அறிஞர்களின் திறமையில் பாதி எனக்கு வரட்டுமே என்று நினைத்து இந்த புனை பெயரை சூட்டிக் கொண்டேன்“ என்றார்.
    “அப்படி ஒன்றும் உங்களுக்கு அறிவு வந்துவிட்டதாகத் தெரியவில்லையே...!“ என்று நக்கலாக சொன்னார் நண்பர்.
    அதற்கு வாலி, “என்ன செய்வது! நான் இன்னும் ஒரு அறிஞனையும் சந்திக்கவில்லையே!“ என்றார் வாலி சிரித்தபடி.
    நண்பரும் வாலியின் நகைச்சுவையை ரசித்தார்!!

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.

8 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நானும் படித்திருக்கிறேன்... வாலியின் நகைச்சுவை அருமை...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

தமிழ்மணம் 2

வாலியின் வல்லமை வார்த்த வரிபடித்தேன்!
பாலினிமை நல்கும் படைப்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல தகவல்...

மகேந்திரன் சொன்னது…

பேசத் தெரிந்தவர்கள்..
பேச்சில் நகைச்சுவையும் அழகும்...

Avargal Unmaigal சொன்னது…

ரசித்து நானும் சிரித்தேன் பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதில் சொல்வதிலும் வாலி அவர்கள் கில்லாடி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் பார்வைக்கு : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்

http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

Seeni சொன்னது…

padithathu aanaalum pakirnthathu makizhchi..