செவ்வாய், 30 ஏப்ரல், 2013

தென்றல்!!






 தொட்டோ அணைக்க முடியாது!
   தொடாமல் இருக்க முடியாது!
கட்டுக் கடங்கி நிற்காது!
   கண்ணால் பார்க்க முடியாது!
கொட்டிக் கொடுக்க முடியாது!
   கூட்டித் தள்ள முடியாது!
பட்டு உணர்வைத் தரும்தென்றல்
   பருவ கால வசந்தமது!

மெல்லத் தவழும் வேளையிலே
   மேலும் கேட்டு மனமேங்கும்!
வல்லத் தனமாய் ஆகையிலே
   வலிமை மிகுந்து பயங்கொடுக்கும்!
எல்லை எதுவும் அதற்கில்லை!
   எழிலாம் உலகில் இதன்வரவோ
இல்லை என்றால் இயக்கமில்லை!
   இனிமை பொங்கும் வாழ்வுமில்லை!!

தண்ணீர் குளத்தில் தவழ்ந்துவந்தால்
   தனிமை ஏக்கம் தரும்தென்றல்!
பெண்ணின் மேனி தொட்டுவந்தால்
   பெண்மை தொட்டச் சுகதென்றல்!
கண்ணைத் தொட்டுப் போனாலும்
   கண்ணீர் சிந்த வைக்காமல்
மண்ணில் மட்டும் வாழுகின்ற
   மாசே அற்ற நறுந்தென்றல்!!

சின்னச் சின்ன உயிர்களுக்கும்
   சீராய் இதயம் துடிக்கவைக்கும்!
வண்ண வண்ண மலர்களையும்
   வளமாய் வாழ வழிவகுக்கும்!
எண்ணி எழுத முடியாத
   இயலாய் வாழ்வில் இருப்பதனால்
சின்னச் சின்னக் கவிச்சிறையில்
   சிக்கி அடைக்க முடியவில்லை!

(இந்த மாத பிரான்சு குறளரங்கத்தில் கொடுக்கப்பட்ட
தென்றல்“ தலைப்பில் நான் எழுதி வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்
27.04.2013

31 கருத்துகள்:

  1. தென்றலை இத விட இனிமையாய் சொல்லிவிட முடியாது...

    அழகிய கவிதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிதை வீதி.

      நீக்கு
  2. அருமை! தண்ணீர் குளம் என்று இருக்க வேண்டுமோ? பகிர்வுக்குநன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் குளம் என்று தான் வரவேண்டும்.
      தங்களின் வருகைக்கும் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  3. // கண்ணைத் தொட்டுப் போனாலும்
    கண்ணீர் சிந்த வைக்காமல்
    மண்ணில் மட்டும் வாழுகின்ற
    மாசே அற்ற நறுந்தென்றல்!!
    //

    அஹா .. அருமையான வரிகள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி என் ராஜபாட்டை.

      நீக்கு
  4. மிகவும் ரசித்த வரிகள்...

    /// எல்லை எதுவும் அதற்கில்லை!
    எழிலாம் உலகில் இதன்வரவோ
    இல்லை என்றால் இயக்கமில்லை!
    இனிமை பொங்கும் வாழ்வுமில்லை!! ///

    வாழ்த்துக்கள் சகோதரி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. கவிதை அருமை தலைப்பும் ஒரு கவிதைதான் டீச்சர்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீச்சரா....?????

      தனிமரம் அவர்களுக்கு... முதலிலெல்லாம் ”டீச்சர்“ என்ற வார்த்தைக்கு மிகவும் மதிப்பிருந்தது.
      இப்பொழுது ஒரு சில தமிழ்ப் படங்களில் இந்த வார்த்தைக்கு மதிப்பற்றும் மிகவும் கேவலமாகவும் சொல்லும் சொல்லாகப் பயன் படுத்தப் படுகிறது. என் ஆதங்கம் தவறாகக் கூட இருக்கலாம்.
      இருந்தாலும் தனிமரம் அவர்களே.... என்னைப் பெயரிட்டு எழுதினால் மிகவும் மகிழ்வேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. தென்றலின் இதம் இங்கு வரை வீசுகிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன் சே.

      நீக்கு
  7. தென்றல் கவியாகி எம்மைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு


  9. வணக்கம்!

    சில்லெனும் தென்றலாய்ச் சிந்தை குளிர்ந்திடச்
    சொல்லெலாம் வீசும் சுகம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  10. வளியிலே பிறந்து
    வெளியினை அலங்கரித்து
    மனதுள்
    ஒளியினை பரப்பும்
    இனிய பூந்தென்றலுக்கு
    அழகிய கவிதை சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  11. கவிதையும் தென்றலாய் தவழ்ந்து மனதைத் தொட்டது... வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  12. கவிதை எங்கோ அழைத்துப் போனது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...?

      எங்கேயெல்லாம் போய் பார்த்தீர்கள்....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. இணைக்கிறேன்.

    நன்றி தமிழன் பொது மன்றம்.

    பதிலளிநீக்கு
  14. மெல்லத் தவழும் வேளையிலே
    மேலும் கேட்டு மனமேங்கும்!//
    கட்டுக்கடங்கா உணர்சிகளை
    தொட்டுச் சென்று மறையும்.உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  15. தென்றலைப் போலே இதமாக மனதை வருடியது கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வர்ணிப்பிற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு


  16. சின்னச் சின்ன உயிர்களுக்கும்
    சீராய் இதயம் துடிக்கவைக்கும்!
    வண்ண வண்ண மலர்களையும்
    வளமாய் வாழ வழிவகுக்கும்!
    எண்ணி எழுத முடியாத
    இயலாய் வாழ்வில் இருப்பதனால்
    சின்னச் சின்னக் கவிச்சிறையில்
    சிக்கி அடைக்க முடியவில்லை

    பொன்குடத்திற்குப் பொட்டு வைக்க வைக்க வேண்டுமா?
    தென்றலெனக் கவிதை எனைத் தழுவிச் செல்கிறது!

    பதிலளிநீக்கு