செந்தாமரை.
எழுந்தும் அவனைக் கண்டவுடன்
இதழை விரித்துச் சிரித்திடுவாள்!
கழுத்து வரையில் தலைகாட்டிக்
காதல் கண்ணால் பேசிடுவாள்!
பொழுது போகும் நேரத்தில்
போதை மனத்தை மறைப்பதற்கே
இழுத்து மூடி நின்றுகொண்டே
இனிய இரவில் உள்துடிப்பாள்!
காலை எழுந்தும் கண்மலர
கவிதை பாடும் வண்டினங்கள்!
வேலை இதற்கோ இல்லையென்று
வேண்டா விருந்தாய்த் தேனிடுவாள்!
லீலை புரியும் காதலனை
லேசாய்ப் பார்க்க முகஞ்சிவப்பாள்!
மாலை நேரம் வந்துவிட
மயக்கம் துளைக்க இதழ்மறைப்பாள்!
என்னே இவளின் செய்கைகளோ!
ஏதோ தவறாய்த் தெரிகிறதே!
பின்னே சற்றே யோசித்தேன்!
பிறவி என்றோ வந்துவிட்டால்
முன்னே மூத்தோர் வழிமுறையில்
மூழ்கித் தானே வாழ்ந்திடனும்!
சொன்னேன் கருத்தைத் தாமரைக்கே!
சூழ்ந்த பொருளோ உலகிற்கே!!
அருணா செல்வம்.
லீலை புரியும் காதலனை
பதிலளிநீக்குலேசாய்ப் பார்க்க முகஞ்சிவப்பாள்!
மாலை நேரம் வந்துவிட
மயக்கம் துளைக்க இதழ்மறைப்பாள்!
மயக்கும் வரிகள்
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
வலைச்சரத்தில் தங்களின் பணி வெகு அருமை...என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி கவிஞர்.
நீக்குநீங்களெல்லாம் ஏற்கனவே பிரபலங்கள்.
உங்களைப் போன்றவர்களைச் சுட்டிக் காட்டியதால்
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தாமரையை மிகவும் ரசிக்க வைத்து விட்டீர்கள்... அதை விட...
பதிலளிநீக்கு/// முன்னே மூத்தோர் வழிமுறையில்
மூழ்கித் தானே வாழ்ந்திடனும்! ///
வாழ்த்துக்கள்...
உண்மையைத் தானே சொன்னேன்...!!
நீக்குதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.
படித்துக் களித்தேன்\
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி இரமணி ஐயா.
tha.ma 3
பதிலளிநீக்குமுன்னே மூத்தோர் வழிமுறையில்
பதிலளிநீக்குமூழ்கித் தானே வாழ்ந்திடனும்!
சொன்னேன் கருத்தைத் தாமரைக்கே!
சூழ்ந்த பொருளோ உலகிற்கே!!
உண்மைதான் பின்பற்றுதல் என்பதுவே
எம் வாழ்வில் பழக்கப்பட்ட ஒன்றாக உள்ளபோது
என்ன தான் செய்ய முடியும் !!
அருமையான கவி தந்த தோழிக்கு வாழ்த்துக்கள் .
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
வாருங்கள் தோழி...
பதிலளிநீக்குஅருமையாய்ச் சேவை முடித்து அழகிய பாமாலை தந்துள்ளீர்கள்.
ரசித்தேன்... மிக அழகு. வாழ்த்துக்கள்!
சொக்கிப்போகும் வார்த்தை கொண்டு
சோர்ந்து கிடக்கும் எண்ணங்களை
பக்கம் பார்க்கப் படைத்ததொரு
பங்கயப் பாவை என்னசொல்ல...
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குஅழகான கவிதைக்கும் மிக்க நன்றி தோழி.
படித்தேன் ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் இரசிப்பிற்கும்
நீக்குமிக்க நன்றி மலர் பாலன்.
arumayaana padhivu.... anaivaraiyum atkollum sorkal
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுகுமார் ஐயா.
nalla irukku....
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி ஐயா.
இனிய கவிதை. நல்வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கோவைக்கவி.
தாமரை மூலம் உலகிற்கே பாடம் சொன்ன கவிதை! நன்று. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
சொன்னேன் கருத்தைத் தாமரைக்கே!
பதிலளிநீக்குசூழ்ந்த பொருளோ உலகிற்கே!!
........................................................
ஆழ்ந்த கருத்தை பொதித்திங்கே
அழகாய் சொன்ன புலமைக்கு
சான்றோர் போலே வாழ்த்திவிட
என்றன் புலனில் அறிவில்லை
தண்ணீரில் வாழும் தாமரைக்கா
தரணியில் வாழும் பெண்மைக்கா
சிலேடை போலே செதுக்கிவிட்ட
சிந்தனைக்குத் தலை சாய்த்தேன்...!
இனிய கவிதை ரசித்தேன் ...வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
தங்களின் வரவிற்கும் அழகிய கவிதையுடன் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீராளன் ஐயா.