சனி, 1 பிப்ரவரி, 2014

உலகிலே ஒருவர்!!கல்லுக்குள் இருக்கின்ற சிலையைச் சிற்பி
    கற்பனையால் கண்டுநன்றாய் வடிப்பான்! செம்மைச்
சொல்லுக்குள் இருக்கின்ற பொருளைக் கற்றோன்
    சுவைதமிழும் சொக்கப்..பா படைப்பான்! உண்மை
இல்லுக்குள் இருக்கின்ற துயரை அன்பன்
    இல்லாமல் ஓட்டிடவே வைப்பான்! பெண்ணின்
உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வைக் கண்டே
    உலகினிலே உரைத்திடுவார் ஒருவர் உண்டோ!!

 அருணா செல்வம்.

10 கருத்துகள்:

 1. அருமை சகோதரி...

  உள்ளிருக்கும் உணர்வை இதுவரை யாரும் கண்டதில்லை...

  பதிலளிநீக்கு
 2. எனது தளம் உட்பட வேறு எந்த தளத்திலும் தங்களை காண முடியவில்லையே சகோதரி... நலம் தானே...?

  பதிலளிநீக்கு
 3. பெண் மனசு ஆழமுன்னு ஆம்பிளைக்கு தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்துல என்னதுன்னு யாருக்குதான் தெரியும் - இளையராஜா பாடல் இது.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ரசித்தேன்..... அருமை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. ///பெண்ணின்உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வைக் கண்டே
  உலகினிலே உரைத்திடுவார் ஒருவர் உண்டோ!!///
  பெண்ணை படைத்த கடவுளால்கூட அது முடியாது. அது என்னவென்று சரியாக தெரிந்தால் பல குடும்பங்களில் பிரச்சனைகளே வாராது அல்லவா

  பதிலளிநீக்கு

 6. "பெண்ணின் உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வைக் கண்டே
  உலகினிலே உரைத்திடுவார் ஒருவர் உண்டோ!!" என்ற
  கருத்தை வரவேற்கிறேன்.

  தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

  பதிலளிநீக்கு