திங்கள், 24 பிப்ரவரி, 2014

“மதுரைத் தமிழனை“ வன்மையாகக் கண்டிக்கிறேன்!




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கடந்த இரண்டு மாதமாக நான் வெளிநாட்டில் (இந்தியாவில்) இருந்ததால் வலைப்பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. நீங்கள் என்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக நீங்கள் கொடுத்த ஆதரவை நினைத்து மகிழ்கிறேன். படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
   இருந்தாலும்....
   நான் கடந்த மாதம் “அழகிய குட்டிகளின் படங்கள்“ என்றத் தலைப்பில் படங்கள் வெளியிட்டேன். அதன் லிங்க் http://arouna-selvame.blogspot.com/2014/01/blog-post_21.html
   இதைப்படித்த நம் மதுரைத் தமிழர் “அவர்கள் உண்மைகள்“

எல்லாக் குட்டிகளின் படம் போட்டு அதில் உங்கள் படத்தை (யானைக் குட்டி)யும் இடையே சொருகி உள்ளது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆமாம் அது எப்படி என்(சிங்க குட்டி) படம் உங்களுக்கு கிடைத்தது?

என்று கருத்திட்டு இருந்தார். இதை “மூங்கில் காற்றும்“ ஆமோதித்து இருந்தார்.

இது என்ன நியாயம்?

   நான் என்னை என் மனத்தளவில் மிகப்பெரிய யானையின் பலம் கொண்டுள்ளவளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். (மனத்தில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும்) என்னைப் போய்........
என்னைப் போய்...... இப்படி ஒரு “குட்டி“ யானை என்று சொல்லி எழுதியிருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி அப்படி சொல்லலாம்....? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
   தவிர, மதுரைத் தமிழரை நான் “பெரீரீய“ சிங்கம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தான் ஒரு “குட்டி“ என்பதை இப்படி போட்டு உடைப்பார் என்று நினைக்கவே இல்லை.
   சரி தோழ தோழியர்களே.... நீங்கள் சொல்வதால் (?) அவரை மன்னித்து விடுகிறேன்.

(இந்தப் பதிவு ஒரு ஜாலிக்காக எழுதியது)

நன்றியுடன்

அருணா செல்வம்.

35 கருத்துகள்:

  1. நல்லது சகோதரி...

    இனி தொடர்ந்து பகிருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க
      நன்றி தனபாலன் அண்ணா.

      இது “சும்மா“ தொடக்கம் தான்.
      இனி தொடர்ந்து (கலாய்க்காமல்) பகிர்கிறேன்.

      நீக்கு
  2. பதிவைப் படிக்கையில ZOO-க்குள்ள இருக்கிற மாதிரியே ஒரு feeling...
    ஏன்னுதான் தெரியல?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ZOO-க்குள்ளேயே நின்று கொண்டு இப்படி feel பண்ணக்கூடாது “மலரின் நினைவுகள்“

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில் கலாய்ப்பை அதிகம் ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கலாய்ப்பை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  4. ///என்னைப் போய்...... இப்படி ஒரு “குட்டி“ யானை என்று சொல்லி எழுதியிருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ////

    மன்னிக்கவும் தவறுதலாக “குட்டி“ யானை என்று எழுதிவிட்டேன். இப்போதுதான் தெரிந்தது நீங்கள் பெரிய யானை என்று.

    பதிலளிநீக்கு
  5. இப்படிதான் ஆடு தன்னால வந்து மாட்டிக்குமாம்

    பதிலளிநீக்கு
  6. ///சரி தோழ தோழியர்களே.... நீங்கள் சொல்வதால் (?) அவரை மன்னித்து விடுகிறேன்.///
    என்ன நம் தோழர்கள் & தோழிகள் என்னை மன்னித்துவிடுகிறேன் என்று சொன்னார்களா? அப்படி சொல்லி இருந்தால் நீங்கள் கனவு கண்டுதான் இந்த பதிவு எழுதி இருக்க வேண்டும்..

    உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம் தோழியர்கள் மன்னிக்க மாட்டார்கள் நிறைய பூரிக் கட்டை வாங்கி கொடுத்து நல்லா மொத்து மொத்து என்று சொல்லியிருப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி புரிக்கட்டை வேண்டாம் என்று அமெரிக்க மாமீ சொல்லிவிட்டார்களாம்.

      நம் தோழியர்கள் நாகராஜ் ஜி சொன்னது போல BAT வாங்கப் போய் இருக்கிறார்கள்.

      பெண்கள் ஆண்களை எப்படி மன்னிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும் தானே...

      நீக்கு
  7. உங்களைப் போலவே வெங்கட் சார் என்ன கலாய்த்து எழுதிய பதிவு..படிக்காதவர்கள் படிக்க

    http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_22.html மதுரைத்தமிழனும் பூரிக்கட்டையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பதிவு.

      இனி புரிகட்டையும் வேண்டாம் பேட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவர் போட்டிருக்கும் படம் சூப்பரோ சூப்பர்.

      நீக்கு
  8. இந்த பதிவை நான் பார்த்து படித்துவிட்டு அப்படியே கணனியில் வைத்துவிட்டு ஒரு கப் காபி எடுக்க போயிருந்தேன் அந்த நேரத்தில் என் மனைவி தலைப்பை பார்த்து உள்ளே உள்ள விஷயத்தை அரை குறையாக படித்துவிட்டு நான் ஏதோ ஒரு பெண்ணிடம் வம்பு செய்துவிட்டேன் என்று என்னை கண்ணா பின்னா என்று பூரிக்கட்டையால் அடித்துவிட்டார்கள் அவர்கள் அடிப்பதை நிறுத்தியதும் இங்க பாருடி ஆண்பாவம் பொல்லாதது....இந்த பதிவை அருணா அவர்கள் ஜாலிக்கா எழுதி இருக்கிறார்கள் என்று அழுதவாரே சொன்னேன் அதற்கு என்மனைவி அட என்னங்க நானும் உங்களை ஜாலிக்காதான் அடித்தேன் இதை போய் சிரியஸாக எடுத்துகிட்டீங்க என் கிறாள்... என்னைத்த சொல்ல என்னத்த செய்ய....நமக்கு நேரம் எப்பவுமே சரியில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கண்டிப்பு“ வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது.... என்று நான் கவலைப்பட்டேன்.
      நல்லவேலை.... அக்கா செயலிலும் காட்டிவிட்டார்.
      அப்பாடா... இப்பொழுது தான் எனக்குத் திருப்தியாக இருக்கிறது.

      நீக்கு
  9. அட நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா! நடத்துங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆரம்பிக்கவில்லை சுரேஷ். அவர் தான் என்னைக் ”குட்டி யானை“ என்று சொன்னார்.

      நன்றி சுரேஷ்.

      நீக்கு
  10. ஆஹா! தலைப்பைப் பார்த்தவுடன், மதுரைத் தமிழனை நல்லா வன்மையாக கண்டிக்கப்போறீங்க போலன்னு நினைச்சேன். ஏன்னா அவர் மனைவிக்கிட்ட அடி வாங்குறது பத்தாதுன்னு ஊர்ல இருக்கிறவங்கக்கிட்டேயும் அடி வாங்கியிருந்ததா சொல்லியிருந்தாரு.

    "http://avargal-unmaigal.blogspot.com/2014/02/warning-to-tamil-guys.html"

    நீங்க என்னடான்னா, உப்புச் சப்பு இல்லாம ஆக்கிட்டீங்களே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலும் “உப்பு” போட்டால் அதிகமாக வலிக்கும் என்றுதான்...
      பாவம் விட்டுவிடலாம் என்று தான்...

      நன்றி சுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  11. இன்னாரு கலாச்சிபையிங் இன்னாரு...! ஆளாளுக்கு கலாச்சிபையிங் ஆல் அல்லாரும்...! இன்னாபா நடக்குது இங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்னுமே நடக்குல முட்டா நைனா.

      இன்னும் என்ன செய்யலாம்?

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்
    சிறந்த பதிவுகளைப் படிக்க
    காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி நல்ல பதிவுகளைக் கொடுக்கப் பார்க்கிறேன் ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. யானை பெண்களை எதுவும் செய்யாதாம் உஷா.

      உங்களின் பல பதிவுகளை வார மாத இதழ்களில் படித்தேன். அருமையாக எழுதுகிறீர்கள்.
      வாழ்த்துக்கள் உஷா.

      நீக்கு
  14. வாங்கம்மா வணக்கங்கம்மா....
    குட்டிக் கதைகளின் ராணியில் கதைகளைக் காணோமே என்றிருந்தேன்....

    பதிலளிநீக்கு
  15. வாங்க தோழி வழமை போல் ஆக்கங்கள் தொடர
    வாழ்த்துகின்றேன் :)

    பதிலளிநீக்கு
  16. குட்டி யானை...
    இது நல்ல கதையா இருக்கே...
    அருமை....

    பதிலளிநீக்கு
  17. ச்ச்சே! நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சு ஓடி வந்தேன். இதானா!? எல்லாம் போங்கப்பா! போங்க! இங்க என்ன குறளி வித்தையாக் காட்டுறாங்க!?

    பதிலளிநீக்கு
  18. இரண்டு மாதம் இந்தியாவிலா இருந்தீங்க!!!!!?

    பதிலளிநீக்கு
  19. ரசித்தேன்....

    நமக்கும் இங்கே விளம்பரம் கிடைச்சுருக்கு போல! நன்றி மதுரைத் தமிழன்.

    பதிலளிநீக்கு