புதன், 5 பிப்ரவரி, 2014

எதை எங்கிருந்து பேச வேண்டும்?

   ஹெரால்ட் லாஸ்கி என்பவர் பிரிட்டனில் உள்ள பொருளாதார நிபுணர்களிலேயே முதன்மையானவர்.
   அவர், கருத்துச் சுதந்திரத்தையும் மனித உரிமையையும் அடக்கி ஒடுக்கும் சர்வாதிகார ஆட்சிகளை வன்மையாகக் கண்டித்து அடிக்கடி சொற்பொழிவு ஆற்றுவார்.
   அவரது ஒவ்வொரு சொற்பொழிவையும் கேட்டு எரிச்சல் அடைந்தார் லாவோஸ் என்ற பாதிரியார்.
   ஒருநாள்...
   ஹெரால்ட் லாஸ்கியின் சொற்பொழிவைக் கேட்ட பாதிரியார் உச்சகட்ட எரிச்சலுடன், “மிஸ்டர் லாஸ்கி... நீங்கள் சொல்லுகின்ற கொடுமைகள் அனைத்தும் ஜெர்மனியில் தான் நடக்கின்றன. நீங்கள் அங்கே போய்ப் பேசாமல் இங்கே பிரிட்டனில் இருந்து கொண்டு பேசுகிறீர்களே. இது வீணான வேலை இல்லையா?“ என்று கேட்டார்.
   அதைக்கேட்ட ஹெரால்ட் லாஸ்கி, “புனிதத் தந்தையே... தாங்கள் கூட மக்களை நரகத்திலிருந்து காப்பாற்றத் தான் பாடுபடுகிறீர்கள். ஆனால் அங்கே போய் பாடுபடாமல் இங்கு இருந்து கொண்டு பிரசாரம் செய்கிறீர்களே. இது வீண் வேலை இல்லையா?“ என்று கேட்டார்.
   அதைக் கேட்ட பாதிரியார் லாவோஸ், அடுத்து பேசமுடியாமல் வாயடைத்துப் போனார்.

படித்ததில் சிந்திக்க வைத்தது.
அருணா செல்வம்.

11 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கேள்வி...!

priyamaanakural சொன்னது…

ம் நல்ல விடயங்கள் தொடருங்கள்..!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சரியான பதிலடி! பகிர்வுக்கு நன்றி!

ராஜி சொன்னது…

நல்ல பதிலடி

ஆத்மா சொன்னது…

இப்படி பேச்சால் சட்டென திருப்பியடிக்கும் திறமை அப்போதிருந்த மகான்களுக்கு கைவந்த கலை என நினைக்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

சரியான பதில்...
நல்ல சிந்தனைப் பதிவு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படித்ததில் பிடித்தது - எனக்கும் பிடித்தது.

த.ம. +1

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சரியான பதிலடி கொடுத்து வாயை அடைப்பதில் சில மனிதர்கள் கில்லாடிகலாகத்தான் இருக்கிறார்கள்...!

Yarlpavanan சொன்னது…

படித்ததில் சிந்திக்க வைத்தது. - அது
என் உள்ளத்தில் பதிந்தது!

Unknown சொன்னது…

சூப்பர் கேள்வி