ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

வேலைக்கு உத்திரவாதம்! (நகைச்சுவை)




 


   ஒரு டாக்டரின் வீட்டில் குழாய் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்ய வந்த ப்ளம்பர் வேலையை முடித்துவிட்டு 200 ரூபாய் கூலி கேட்டார்.
   அதற்கு டாக்டர், “என்னப்பா இது! நானே ஒரு பேஷண்டுக்கு 100 ரூபாய் தான் ஃபீஸ் வாங்குகிறேன். நீ 200 ரூபாய் கேட்கிறாயே?“ என்றார்.
    அதற்கு ப்ளம்பர், “ஆமாம் சார். ஆனால் நான் என் வேலைக்கு இரண்டு வருடம் உத்திரவாதம் (கியாரண்டி) கொடுக்கிறேன். உங்களால் இந்த மாதிரி உத்திரவாதம் தர முடியாது இல்லையா... அதனால் தான் என் கூலி 200 ரூபாய்“ என்றார்.
    அதைக்கேட்ட டாக்டர் பேசாமல் 200 ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்.

-படித்ததைப் பகிர்ந்தேன்-



தமிழே வென்றது...! (கவிதை)


அலைபோல் ஓயா இரும்பலினால்
    அமைதி அற்ற ஓய்வின்று!
சுளைபோல் சொற்கள் இருந்தாலும்
    சோர்வாய்ப் படுக்கை தேடிடுது!
வலைபோல் பின்னும் என்மனமோ
    வடிக்கக் கவிதை எண்ணிடுது!
உலைபோல் உடம்பு கொதித்தாலும்
    உயர்ந்த தமிழே வென்றிடுது!

அருணா செல்வம்.


 

15 கருத்துகள்:

  1. உலைபோல் உடம்பு கொதிக்கையிலும்
    தமிழ் உணர்வே இங்கு வென்றதுவா ?...
    இன்பக் கவிதை வடிக்கும் உனதுடலும்
    நலன் பெற வேண்டும் என்பதே எனது
    வேண்டுதலும் தோழி !

    பதிலளிநீக்கு
  2. பிளம்பரின் பதிலடி சூப்பர்.
    இணைப்பாக கவிதையும் நன்று

    பதிலளிநீக்கு
  3. டாக்டரால் இந்த மாதிரி உத்திரவாதம் தர முடியாது என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  4. // சுளைபோல் சொற்கள் இருந்தாலும்
    சோர்வாய்ப் படுக்கை தேடிடுது!//
    உடம்பு சரி ஆயிட்டுங்களா?

    பதிலளிநீக்கு
  5. உலைபோல் உடம்பு கொதிக்கும் வேலையிலும் தமிழை நாடும் கவிமனத்தின் எண்ணம் கண்டு வியந்தேன். விரைவில் உடல்நலம் தேறி ஆறெனப் பெருகும் கவிபடைத்து எம்மை அசத்த வாழ்த்துக்கள். பகிர்ந்த கதை சிரிப்போடு சிந்திக்கவும் வைத்தது. நன்றி அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
  6. படித்ததைப் பகிர்ந்ததும் நன்று
    தமிழ் வென்றதுவும் நன்று ......

    நலமாக இருக்கிறீர்களா

    பதிலளிநீக்கு
  7. கதை அருமை தோழி!
    ஆனால் உங்கள் நலம் அருமையாயில்லை என்பது வருத்தமே...

    கவனியுங்கள் தமிழுடன் தங்களையும்...!

    நலங்காண என் நல்வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவையும் தமிழும் நன்று.

    பதிலளிநீக்கு
  9. உத்தரவாதம் தராவிட்டாலும் பரவாயில்லை ...சில டாக்டர்கள் உதரத்தின்கீழ் இருக்கும் இரு கிட்னியில் ஒன்றில் கை வைத்து விடுகிறார்களே !

    பதிலளிநீக்கு
  10. பகிர்வு அருமை
    விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. டாக்டர்கள் மட்டும் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? அரசியல்வாதிகளை திட்டும் மக்கள் மறந்து விடுகிறார்கள். அவனும் நம்மில் ஒருவனே என்று! அதே மாதிரி, டாக்டர்களும் உங்களில் ஒருவன்; அவன் அப்படித்தான் இருப்பான்!

    டாஸ்மாக்கில் 700 ரூபாய் சரக்கிற்கு 750 கேட்கிறான். பஸ்ஸில் ஐந்து ரூபாய் கொடுத்தால், இரண்டு ரூபாய் சில்லறை கொடுபதில்லை. 100 ரூபாய் சினிமா டிக்கெட்டுக்கு 500 ரூபாய் பிடுங்குகிரான்.
    இப்படி எல்லாரும் பொங்கு அடிக்கும் போது...2 கோடி ரூபாய் முதல் போட்ட டாக்டர் மட்டும் என்ன முட்டாளா?

    அவனும், உங்களில் ஒருவன்...அவன் அப்படித்தான் இருப்பான். அப்படி இருந்தால் தான் அவன் பத்ம சேஷாத்ரி பள்ளியில் அவன் குழந்தைகளை சேர்க்கமுடியும்!

    பதிலளிநீக்கு