வியாழன், 2 ஜனவரி, 2020

நன்றி! நன்றி!
  நான் எழுதிக்கொண்டிருந்த அணி இலக்கண நூலை எழுதி முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி அச்சகத்திற்கு அனுப்பவேண்டியது தான்.
  கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமுயற்சி எடுத்துச் செய்த வேலை இது. தண்டியலங்காரத்தில் உள்ள அணி இலக்கணத்திற்கு எளிய நடையில் எடுத்துக்காட்டுப் பாடல்களை அமைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை.
  இந்த நூல் தமிழ்ப்படிக்கும் பள்ளி, கல்லுரி மாணவச் செல்வங்களுக்கு நிச்சயமாக உதவும் என்பது எனது நம்பிக்கை.
  இதில் உள்ள சில பாடல்களை நான் முகநூலிலும், என் மின்தளத்திலும் வெளியிட்ட போது என்னை வாழ்த்தி எனக்கு ஊக்குவிப்புக் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களையும் கரம் குவித்து வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
திருமதி. பாவலர் அருணா செல்வம்
02.01.2020

4 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்...

    கிண்டிலில் வெளியிடலாமே...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு .. இதுபோன்ற பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள் 💐

    தமிழ் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு பின்வரும் தலைமுறையினருக்கு உதவும்

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு ... தமிழ் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு பின்வரும் தலைமுறையினருக்கு உதவும்

    பதிலளிநீக்கு