வியாழன், 29 அக்டோபர், 2015

கோபம் வந்தால்......


       இளைஞன் ஒருவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. அவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் அவன் கத்தித் தீர்த்து விடுவான். மேலும் தன் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வான்.
   இதைக் கவனித்த அவனின் அப்பா, அவனை ஒரு நாள் அழைத்து, அவனிடம் ஒரு சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்து, ‘இனிமேல் உனக்கு ஒவ்வொரு முறை கோபம் வந்து போன பின்பு வீட்டின் பின்புறத்தில் இருக்கும் சுவற்றில் ஒரு ஆணி அடித்து விடு‘ என்று சொன்னார்.
    அவனும் அது போலவே செய்தான். முதல் நாள் பத்து ஆணி அடித்தான். மறுநாள் ஏழு, அதற்கும் மறுநாள் ஐந்து என்று ஒவ்வொரு நாளாக ஆணி அடிப்பது குறைந்து கொண்டே வந்து ஒரு நாள் ஆணி அடிக்காத நிலையும் வந்தது. உடனே தன் தந்தையிடம் சென்று, ‘அப்பா இது வரையில் 45 ஆணிகள் அடித்துள்ளேன். இனி எனக்குக் கோபம் வராது என்று நினைக்கிறேன்‘ என்றான்.
   உடனே அப்பா, ‘அப்படியா, நல்லது. இனிமேல் உனக்குக் கோபம் வராத நாளெல்லாம் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கிவிடு‘ என்றார். 45 நாட்களில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. இந்த விசயத்தைத் தன் தந்தையிடம் பெருமையாக சொல்லி காட்டினான்.
   அப்பாவும் அவ்விடத்தைப் பார்த்தார். பிறகு சொன்னார், ‘ஆணிகளைப் பிடுங்கிவிட்டாய். ஆனால் சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய் ? உன் கோபமும் இது போல பலரைக் காயப்படுத்தி இருக்கும் அல்லவா ?‘ என்று கேட்டார். இளைஞன் பதில் சொல்ல முடியாமல் வெட்கித் தலை குனிந்தான்.

   கோபத் தீயின் வடுவும் மறையாது. 

15 கருத்துகள்:

  1. அருமை சகோ நல்லதொரு பாடம் கிடைத்தது
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  2. தெரிந்த கதை. ஆனால் என்னால் ஒருநாளும் கடைப்பிடிக்கவே முடியாத அறிவுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தோழி....
      இது மிகப்பழைய கதைதான்.
      இபபோதெல்லாம் எனக்கு அதிகமாக கோபம் வருகிறது. அது என் இயலாமையாகக்கூட இருக்கலாம்.
      என்னை இப்படி பேசி திருத்தவும் அருகில் யாரும் இல்லை. அதனால் இப்படியான கதைகளை எனக்காகவே வெளியிடுகிறேன்.

      நன்றி தோழி.

      நீக்கு
  3. ஏற்கனவே அறிந்த கதைதான் என்றாலும், மீண்டும் வாசிக்கக் கிடைத்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய தேனாக இருந்தாலும் அது
      எப்போதுமே இனிக்கும்.

      நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  4. சிறப்பான நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. படித்த கதை என்றாலும் பிடித்த கதை. மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு