திங்கள், 26 அக்டோபர், 2015

சித்திரச் சிரிப்பு !



சித்திரம்  போலவள்  சிரிக்க – கண்
                     பறிக்க – மனம்
                     அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும்
   செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத்தப் பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்துப் பாடி நெகிழ்வேன் !

நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்க்க – மனம்
நிம்மதியாய் அதை  ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும்
    கடலலையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் ! – அந்த
வஞ்சியாலே கவி வழியும் !

(காவடிச் சிந்து)
கவிஞர் அருணா செல்வம்.

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... ரசித்தேன் சகோதரி...

Ramani S சொன்னது…

கவி மழையில் நனைந்து மகிழ்ந்தேன்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

மனம்
நிம்மதியாய் அதை ஏற்க .////


இதானே முக்கியம் அருணா?!

KILLERGEE Devakottai சொன்னது…

கவிதை மிகவும் நன்று சகோ.
தமிழ் மணம் 4

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான காவடிச் சிந்து...மிகவும் ரசித்தோம் வரிகளை