செவ்வாய், 17 ஏப்ரல், 2012

அம்மா இங்கே வா...வா...!!பல்லாயிரம் மையிலுக்கப்பால்
பாசத்தை தேடுகிறேன்
சொல்லாயிரம் இருக்கிறது
சொல்லத் தெரியவில்லை!

நில்லாமல் சுற்றுமுலகம்
நினைவலையோ பின்சுழல
கொல்லாமல் கொல்கிறது
குழந்தைபோல் ஆனமனது!

பாசத்தை வளர்த்திடவும்
பணம்தான் வேண்டுமென்று
நேசத்தை துளைத்தவிட்டு
நெஞ்சுருகத் தேடுகிறோம்!

உறுதியுடன் மனமிருந்தும்
உடல்நோயில் படுத்துவிட
மருந்தென்ற மாத்திரைகள்
மனதிற்கு இதமில்லை.

கருத்தெல்லாம் தேடுவதோ
கனிவான உன்முகந்தான்!
ஒருமுறையே உன்குரல்கேட்க
உடனெழுவேன் பார்அம்மா!!


31 கருத்துகள்:

 1. தொலை தூரம் சென்றாலும் தொப்புள் கொடி பிணைப்பு அழிவதில்லை தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தாங்க ரெவெரி அவர்களே!

   தங்களின் வருகைக்கும் அருமையான
   கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

   நீக்கு
 2. அணையிட முடியா
  பாசமிகு அன்னைக்கு
  அழகாய் ஒரு பாமாலை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அருமையான
   கருத்திற்கும் மிக்க நன்றிங்க மகேந்திரன் அவர்களே.

   நீக்கு
 3. அன்னைக்குத் தந்த அழகு மிக்கப் பாமாலை
  என்னைக் கவர்ந்திட்ட எழில்மிகு பூஞ்சோலை
  பொன்னும் ஈடல்ல வேறு பொருளும் ஈடல்ல
  கன்னல் மொழிநல்ல கவிதை நீசொல்ல!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும்
   அருமையான பாடலை வாழ்த்தாக
   தந்தமைக்கும் மிக்க நன்றிங்க புலவர் ஐயா!

   நீக்கு
 4. பதில்கள்
  1. ம்ம்ம்ம்..... பாசத்தை வார்த்தையால்
   விவரிக்க முடியவில்லை இல்லைங்களா செய்தாலி?

   மிக்க நன்றிங்க.

   நீக்கு
 5. எங்களை விட்டுப் பிரிந்த என் பெற்றோரை வரிகளில் கண்டேன் . வார்த்தை இல்லை ரணமே மிஞ்சுகிறது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது....?
   கவலைப்படாதீங்க சசிகலா.
   என் அம்மா பாண்டிச்சேரியில் தான் இருக்கிறார். அவங்களுக்கு எந்தக் குழந்தை அம்மா என்று அழைத்தாலும் அவரைத் தன் குழந்தையாக ஏற்றுக்கொள்வார். அந்த வகையில் என் அம்மா உங்களுக்கும் அம்மா தான் சகோதரி.

   நீக்கு
 6. அம்மாவின் மடி தேடுகிறது மனம்.நெகிழவைக்கிறது மனம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றிங்க ஷேமா.

   நீக்கு
 7. முதலில் மன்னிக்கவும் இந்த பதிவு பகிர்ந்த அடுத்த நாளே வந்து பதிலிட நினைத்து நினைத்து மறந்து விடுவேன் . மிகவும் நன்றி சரி நான் எனது சகோதரனை நல்லா அடிப்பேன் உங்களுக்கு சம்மதமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசிகலா அக்கா...
   அடிக்கிற கை தான் அணைக்கும் என்று சொல்வார்கள். நீங்கள் அடியுங்கள். தலையிலே கொட்டுங்கள். தாங்கிக்கிறேன். ஆனால் இந்தத் தம்பிக்கு அந்த பச்சையம்மா விசயத்தில் நல்ல வழியைக் காட்டுங்கள். ப்ளீஸ்ஸ்ஸ் அக்கா...

   நீக்கு
 8. சகோ நாத்தனார் என்ன பண்ணணுமோ அத செய்வேன் சரியா . அம்மாவ கேட்டதாக சொல்லவும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசிகலா அக்கா...
   இப்போதைய நாத்தனார் மாதிரி அவ கூட சேர்ந்து என்னைக் கலாக்காதீங்க. பழைய கால நாத்தனார் மாதிரி உங்கள் இடத்திலிருந்து இறங்கிவிடாதீர்கள்.
   இந்தத் தம்பி எப்பவுமே உங்கள் பக்கம் தான். ஓ.கே.வா...?

   நீக்கு
 9. ஓகே ஓகே . சரி உங்கள மட்டுமே சிந்திக்காதிங்க அம்மா எப்படி இருக்காங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா நன்றாக இருக்கிறார்கள்.
   நான் தினமும் தொலைபேசியில் பேசிவிடுவேன்.
   உங்களைப் பற்றி சொன்னேன். மிகவும் சந்தோசப் பட்டாங்க.
   பாண்டிச்சேரி போக சந்தர்ப்பம் கிடைத்தால் போய் பாருங்கள். இந்த அளவு என்னிடம் நீங்கள் தொடர்பு கொள்வது குறித்து நான் மிகவும் சந்தோசப் படுகிறேன். தாய் நாட்டைப் பிரிந்து வந்து வாழ்பவர்களுக்கு ஆயிரம் வசதிகள் இருந்தும் சொந்தங்களைப் பிரிந்து வாழ்வது கண்களை விற்று குளிர் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொள்வது போன்ற உணர்வுடன் தான் வாழ முடிகிறது.
   உங்களைப் போன்ற அன்பானவர்களின் வார்த்தைகள் மனக் காயத்திற்கு மருந்து தான். நன்றிங்க சகோதரி.

   நீக்கு
 10. சகோ மிகவும் சந்தோசமாக இருக்கிறது நானும் எனது தம்பியும் இரட்டைப் பிறவிகள் காலம் எங்களை பிரித்து விட்டது உங்களோடு பேசும் போது அந்த சோகம் மறக்கிறேன் நன்றி .

  பதிலளிநீக்கு
 11. சசிகலா...
  எந்த ஒரு சகோரத உறவின் பிரிவும் நிரந்தரமில்லைங்க.
  எல்லாம் காலச் சூழல்தான்.
  கவலைப்படாதீர்கள். உறவைத் தேடும் உணர்வு நமக்கு இருக்கும் வரை நம்மீது அன்பு செலுத்துகிறவர்கள் அனைவருமே நம்மின் உறவுகள் தான்.
  எனக்குப் புதியதாக ஒரு சகோதரி கிடைத்ததில் நானும் மகிழ்கிறேன். நன்றிங்க சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ நலம் நலம் அறிய ஆவல் . அம்மா எப்படி இருக்காங்க .

   நீக்கு
  2. அம்மா நன்றாக இருக்கிறார்கள். அதிக வேலை காரணமாக நான் கடந்த நான்கு ஐந்து நாட்களாக போன் பேச வில்லை. இன்று கட்டாயம் பண்ணுவேன்.

   நீங்கள் உங்கள் கணவர் குழந்தைகள் நலமா? நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள். நன்றி சசி.

   நீக்கு
 12. எனக்கு இரண்டு குழந்தைகள் இனியவன் , இளையவன் அனைவரும் நலமே . நன்றி சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படி இருக்கிறீங்க சசிகலா?
   போன வாரம் முழுவதும் நிறைய வேலை. குழந்தைகளுக்கு அழகான பெயரிட்டு இருக்கிறீர்கள்.
   மூனாவது பெண் எப்பொழுது?
   தாய்மாமா சீர் செய்ய நான் ரெடியாக இருக்கிறேன்.
   நான் தினமும் என்னை அறியாமலேயே உங்கள் பதிலை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். நன்றி.

   நீக்கு
  2. அது எப்படிங்க என்னைய மாதிரியே சிந்திக்கிரிங்க போன வாரம் முழுமையும் வந்து வந்து ஏமார்ந்து போனேன் சகோ . சரி அம்மா எப்படி இருக்காங்க நீங்க எப்படி இருக்கீங்க .

   நீக்கு
  3. அம்மா நன்றாக இருக்கிறாங்க. நானும் நன்றாக இருக்கிறேன். தற்போது வேலை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் வலையின் பக்கம் அதிகம் வர முடிவதில்லை. பழையதையே திரும்ப போடுகிறேன்.
   நீங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? நன்றி சசிகலா.

   நீக்கு
  4. அனைவரும் நலமே . சகோவிற்கு நன்றி .

   நீக்கு
 13. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 14. என்ன சகோ எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசிகலா... நான் நன்றாக இருக்கிறேன்.
   கொஞ்சம் அதிக வேலை. அதனால் தான் அடிக்கடி வலைப்பக்கம் வரமுடியவில்லை.
   அம்மா நன்றாக இருக்கிறார்கள். இப்பொழுது எல்லாம் எப்பொழுதும் உங்களை விசாரிக்கிறார்கள்.
   நீங்கள் அனைவரும் நலமா...?
   உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,
   நன்றிங்க சசிகலா.

   நீக்கு