வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மீன் விழி!!

எனது முகநுர்ல் கவிதைகள்!

மீன் விழியாள்!




மீனவர்கள்
மீன் பிடிக்க
போகிறார்கள்.
அன்பே.... உன்
கண்களை உடனே
மூடிக்கொள்!

-------------------------------------------------------------------------------------------------- 

கதை சொல்லும் கண்கள்!




கண்ணுக்குள்
மறைத்துள்ள
காவியங்கள்
எத்தனை பெண்ணே?
எனைப் பார்க்கும்
உன் கலை கண்கள்
அத்தனை கதை
சொல்கிறதே!

 -----------------------------------------------------------------------------------------------------------------


விழி மீன்கள்!


வலை வீசி
மீன் பிடிப்பான்
மனிதன்!
இங்கே
இரு மீன்கள்
என்னை
வலை வீசிப் பிடித்த
மாயம் தான் என்ன...!  

 -------------------------------------------------------------------------------------------------------

படபடப்பு!



படபடப்பாய்ப்
பார்க்காதே பெண்ணே...
பட்டாம் பூச்சிகள்
பார்த்து விட்டால்
மயங்கி மதியிழந்து
தன் இனத்தை
மறந்து விடும்!

 ----------------------------------------------------------------------------------------------


வேல் விழியாள்!



விழியில் வேலை
வைத்திருக்கிறாயா?
பார்த்ததும்
நெஞ்சைக் கிழித்துத்
தஞ்சம்

புகுந்து விட்டதே!



அருணா செல்வம்
28.02.2015

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  2. எல்லாமே அருமை. பேஸ்புக்கில் என்ன பெயரில் இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      பேஸ்புக் ஐடி
      https://www.facebook.com/castouri

      நீக்கு
  3. பார்வை ஒன்றே போதுமே...!

    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. படித்தேன்
    ரசித்தேன்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. அனைத்தும் தேன் துளிகள் போல தித்தித்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  6. வணக்கம்!

    வண்ண விழிகளை எண்ணிப் படைத்தகவி
    திண்ணும் உயிரைத் திளைத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய குறளுக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  7. அருமையான குறுங்கவிதைகள்! ரசனை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  8. ஆஹா! அருமை!

    அயையோ! மீன் பிடிக்க யோசிப்பார்களோ...அஹஹ்ஹ ரசித்தோம் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு