திங்கள், 23 பிப்ரவரி, 2015

அழுகை!!அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தைத்
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர் பொங்கி
    வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!!

அருணா செல்வம்.

24.02.2015

8 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

அழுகைக்குப் பல காரணங்கள்! ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது..."சிரித்தாலும் கண்ணீர் வரும்.... அழுதாலும் கண்ணீர் வரும்.."

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அழுகை உணர்வின் வெளிப்பாடு அன்றோ
அருமை
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது... மாரடைப்பு வராது...!

Avargal Unmaigal சொன்னது…

அழகான அழுகை...ஆமாம் ஏன் இந்த அழுகை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா எத்தனை காரணங்கள் அழுகைக்கு.....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான வரிகள்! அருமை!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அடேங்கப்பா அழுகைக்கு காரணங்கள்....ம்ம் வரிகள் அருமை....அது சரி பாசம் பொங்க நடித்தாலும்??!!!!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!