காலை உறக்கம் கலைந்ததுமே
கண்முன்
வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
விழுங்கு
வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
சூழும்
மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
நுவலும்
பொருளில் தெரிகின்றாய்!
என்னில் உள்ளே இருந்தாலும்
எதிரில்
காண ஓடிவந்தால்
“என்னை
ஏனோ மறந்துவிட்டாய்!“
என்றே
கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
ஊடல்
கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
என்தன்
உயிரே என்செய்வேன்?!
எந்த நிலையில் உனைமறந்தேன்
என்று
தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
அந்தக்
கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
சொர்க்கம்
எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
இருக்கும்
நேரம் அதுவென்பேன்!
மறத்தல் தானே மனிதருக்கு
மகேசன்
கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
சீராய்
வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
மாறும்
இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
இனிமை
அதுவே தருமென்பேன்!
அருணா செல்வம்.
26.02.2015
அருமையான கவிதை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குமுடிவில் உருக்கம்... ஆகா...!
பதிலளிநீக்குரசனையான வரிகள்! அருமை!
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குஅருமையான வரிகள்! ரசித்தோம். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமையான கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு