வெள்ளி, 4 ஏப்ரல், 2014

எழுந்து வா மதுரைத் தமிழா!!


“உண்மைகள்“ என்று
பெயர் வைத்துக்கொண்டு
பொய்யை எழுதிய போதும்
அழகாய் ஜொலித்தாயே?

உண்மைகளைப்
போட்டுடைத்ததும்
பொய்யெல்லாம்
உனைச்சூழ பயந்தாயோ!?

அடிக்கொருமுறை
அடிவாங்கியதை
எழுதிவிட்டு...
அதற்காகவும்
அடிவாங்கியதை
எழுதுவாயே...

அக்காளும் (ராஜி)
தங்கையும் (உஷா)
பார்சலனுப்பிய
பூரிகட்டைகளுக்குப்
பயந்தாயோ...?

பின் மூளை பாதித்துப்
பைத்தியமாய்த்
திரிகிறாயோ...?

அல்லது...

அடி வாங்கி
அடி வாங்கி
ஆஸ்பத்திரியில்
கிடைக்கிறாயோ...?

எது நடந்தால்
எமக்கென்ன என்றே நீ
எழுந்து வா தமிழா!!

உன் பின்னோட்டம்
கண்டிடவே
உன் பின்னால்
ஒரு கூட்டம்
காத்திருக்கிறது!

வலையுலகம்
வாய்விட்டு
சிரித்திட
வருத்தத்திற்கு
வறுமை வந்திட
எழுந்து வா மதுரைத் தமிழா!!

நட்புடன்
அருணா செல்வம்.

27 கருத்துகள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஐயோ! சகோதரி, என்ன ஒற்றுமை! நாங்களும் , மதுரைத் தமிழனைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே! என்னாயிற்று? அவர் இல்லாமல் களை கொஞ்சம் இழந்துள்ளதெ என்ரு நினைத்து ஒரு இடுகை, உங்களைப் போல் கவிதையாக இல்லை என்றாலும் ஒரு இடுகை கொஞ்சம் கலாய்து, எழுதலாம் அவரைக் கூப்பிட்டு, உங்கள் எல்லோரையும் அதில் உட்புகுத்தி எழுதி வைத்திருக்கின்றோம்! நாளை இட.....அட இப்போது உங்களது கண்டதும்.....அதை அப்படியே ரிசர்வ் செய்து விட்டோம்!!!!

அழகாக எழுதி உள்ளீர்கள்! உன் பின்னோட்டம்
கண்டிடவே
உன் பின்னால்
ஒரு கூட்டம்
காத்திருக்கிறது!//

பின்னூட்டம் மட்டுமல்ல...இடுகைகளுக்காகவும்......பூரிக்கட்டை கூட வருத்தத்தில் இருப்பதாகக் கேள்வி! அவர் வருவாரா!! அவர் வருவாரா......என்று!!!

துளசிதரன், கீதா

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் துளசிதரன் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

தவிர, நீங்கள் எழுதிய பதிவை அவசியம் வெளியிடுங்கள். உங்களின் கற்பனைத் திறத்தை நாங்கள் ரசிக்கவேண்டும் அல்லவா...?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரண்டு மூன்று தடவை எனது "திரட்டியில்" விடுபட்டு விட்டதோ என்றும் பார்த்து விட்டேன்... ஆனால் பதிவு எதுவும் இல்லை... வேலைகள் அதிகம் இருக்கலாம்... விரைவில் வருவார் எனும் நம்பிக்கை இருக்கிறது...

அம்பாளடியாள் சொன்னது…

நிட்சயம் வருவார் மதுரைத் தமிழன் கவலை வேண்டாம் தோழி
இம்முறை பூரிக் கட்டை கொஞ்சம் அதிகமாகத் தன் வேலையைக்
காட்டியிருக்கும் :)))ஒரு வேளை இந்தத் தகவலைப் பார்த்தால் உடனும் துள்ளிக் குதித்து ஓடி வருவார் என்றே நம்புவோம் :))) .பகிர்வுக்கு நன்றி தோழி அருணா .

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லா தேடிப்பாருங்கய்யா !

மகேந்திரன் சொன்னது…

என்னைப்போலவே.. அதீத வேலைப்பளுவில் மாட்டிக்கொண்டார் போல...
நானும் அவரின் வரவை எதிர்பார்க்கிறேன்...

Seeni சொன்னது…

சகோ..
மதுரை தமிழன் விரைவில் வர வேண்டும்!
நீங்களும் என் தளம் வந்து பல தினங்கள் ஆகி விட்டது.
வருகை தரவும்,கேட்டுக்கொள்கிறேன் ..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நானும் எதிர்பார்க்கிறேன்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

பூரியின் கட்டையால் போட்டிங்[கு] உடைத்தலும்
பாரிபோல் வந்து பழகிடுவார்! - பாரில்
மதுரைத் தமிழனை வாவென்[று] அழைத்தேன்
புதுவைத் தமிழன் பொலிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

உஷா அன்பரசு சொன்னது…

வாவ்... மதுரைக்கு இவ்ளோ ரசிகமன்றம் இருக்கிறது தெரியாம எங்கத்தான் ஒளிஞ்சிருக்காரு? நான் நேர நெருக்கடியில் அதிக வலைப்பக்கம் வாசிக்க முடியலைன்னாலும் வாய்விட்டு சிரிக்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக மதுரை தமிழன் பக்கம் எட்டி பார்த்துவிடுவதுண்டு இரண்டு வாரமா ஆளையேக் காணோம்.. அவருக்கு மெயில் கூட அனுப்பி பார்த்தேன்... எவ்வளவு பேர் அவரை தேடறோம்னு கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுறார் போல...! இருக்கட்டும்... இருக்கட்டும் சொல்லாம கொள்ளாம ஒளிஞ்சிகிட்டதுக்கு மொத்தமா சேர்ந்து பூரிக்கட்டை பூஜை பண்ணிடலாம்...

உஷா அன்பரசு சொன்னது…

வேலைப்பளு, டூர் என்றால் கூட கொஞ்சமாவது தலைக்காட்டாம இருக்கமாட்டார் பாஸ்... என்ன ஆச்சு? பரவாயில்லை நம்ம சார்பா நீங்க பதிவா போட்டுட்டிங்க... நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரி எண்ண அலைவரிசை போல... நானும் இப்படி ஒரு பதிவு போடனும்னு நெனைச்சேன்... நீங்க பண்ணீட்டிங்க... மதுரை தமிழா எங்கிருந்தாலும் வாங்க... உங்க எழுத்தை பார்க்காம அளுதுட்டிருக்கோம்...!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சத்தம் இல்லாது தமிழகம் வந்திருக்கிறாரோ என்று ஒரு சந்தேகம்.... :) விரைவில் பதிவுலகினை கலக்க மீண்டும் வரவேண்டும்! நான் கூட காணாமல் போனவர் பற்றி காவல்துறையில் மனு கொடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.....

துளசிதரன் ஜி.... உங்கள் பதிவினையும் வெளியிடுங்கள்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நானும் கூட அவரின் பதிவுகளை காணோமே என்று டேஷ் போர்டை அலசி விட்டேன்! என்ன ஆயிற்று தெரியவில்லை! பார்ப்போம்!

அபயாஅருணா சொன்னது…

ஆமாம் நானும் கேட்கவேண்டுமென்று நினைத்தேன் ,
ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை .
ஓவராக வேலை செய்கிறாரா? ஹி.......ஹி ... என்னை மாதிரி

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

ஹா ஹா ஹா.....

தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

நீங்களும் தேடுங்கள்....

தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்
மிக்க நன்றி மனோ சார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் சீனி அண்ணா.

நான் தற்பொழுது என்னுடைய ஏழாவாது புத்தகத்தை வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் நிறைய பேர்களின் நல்ல நல்ல இடுகைகளை வாசிக்காமல்... அல்லது வாசித்துவிட்டு கருத்திடாமல் இருக்கிறேன். நிச்சயம் உங்களின் பதிவுகளைப் படிப்பேன்.
நான் அதிக பதிவுகளை டக்டில் டப்ளட்டில் (இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை) வாசித்துவிடுவதால்... அதில் தமிழ் எழுத்து இல்லாததால் கருத்திடுவதில்லை. மன்னிக்கவும். இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
நன்றி சீனி அண்“ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

வேண்டாம் உஷா. பாவம் அவர்.
உங்களின் பூரிகட்டை அடிகளுக்குப் பயந்தே அவர் வர பயப்படுகிறார் என்று நினைக்கிறேன்.

அருணா செல்வம் சொன்னது…

வருவார்... வருவார்... கண்களைத் துடைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி உஷா.

அருணா செல்வம் சொன்னது…

சத்தம் இல்லாது தமிழகம் வந்திருக்கிறாரோ என்று ஒரு சந்தேகம்.... :) இருக்கலாம்... இருக்கலாம்.... வந்தது தெரிந்தால் என்னாகும் என்ற பயம் இருக்கத்தானே செய்யும்...

நானும் துளசிதரன் ஐயா அவர்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

இருக்கலாம்.... நிறைய பதிவுகளைத் தேத்துகிறார் போல...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

ராஜி சொன்னது…

ஏம்மா அருணா! உனக்கு ஏன் இந்த ஆசை!? ஏற்கனவே வெயில் கடுமையாய் வாட்டுது. இதுல மதுரை தமிழனின் இம்சையும் சேரனுமா!?