வியாழன், 26 செப்டம்பர், 2013

யாராவது உதவி செய்யுங்களேன்... ப்ளீஸ்!!






நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருந்ததால் உங்களுடன் அதிக தொடர்பில் இல்லாமல் இருந்தேன். இப்பொழுது இங்கு வந்ததிலிருந்து உடல் நிலை சரியில்லை. இப்பொழுது சற்று பரவாயில்லை.
   என்ன இவரின் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் சொல்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் வேண்டாம் என்றாலும் நான் சொல்லி தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். காரணம்...
    என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் மிக முக்கியமானது மின் வலையில் பதிவுகளை ஏற்றுவதும் மற்றவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடும் நேரமும் ஆகும். ஆனால் இப்பொழுது அதிலும் பிரட்சனை வந்துவிட்டது.
   என்னவென்றால்...
   என் வலையைத் திறந்தாலே பதிவிற்கு மேல் நிறைய விளம்பரங்கள் வந்து அனைத்தையும் மறைத்து விடுகிறது. எழுத்துக்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை. மற்றவர்களின் வலைக்குள் போய் படித்தாலும் இப்படியான பிரட்சனைகள் வருகிறது. (இதனால் என் மனக்கவலைகளை இங்கே சொல்லி மாளாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்)
   நான் பலவகையில், (எனக்குத் தெரிந்த) அந்த விளம்பரங்கள் வராமல் தடுக்கப் பார்த்தாலும்.... அது சரிபடாமல் திரும்பவும் வந்து என்னை அலைகழிக்கிறது.
   ஆகவே நட்புறவுகளே.... யாருக்காவது இதனைச் சரி செய்யும் உத்தித் தெரிந்தால் அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

                     நன்றி!

அன்புடனும் நட்புடனும்
அருணா செல்வம்.
  

24 கருத்துகள்:

  1. இப்போது உங்கள் வலையை பார்க்கும் போது அப்படி விளம்பரங்கள் எதுவும் வரவில்லை... எதற்கும் உங்கள் blogger mail id & password அனுப்பி வைக்கவும்--->(dindiguldhanabalan@yahoo.com)

    எந்த browser உபயோகம் செய்கிறீர்கள்...? Chrome என்றால் AdBlock எனும் extension-யை உங்கள் கணினியில் நிறுவவும்... [link: https://chrome.google.com/webstore/detail/adblock/gighmmpiobklfepjocnamgkkbiglidom?hl=en] நன்றி... மேலும் சந்தேகம் என்றால் தொடர்பு கொள்ளவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன் அண்ணா.

      என் வலையின் மேல் பகுதியில் எந்த விளம்பரமும் வரவில்லை. ஆனால் உள் துழைந்ததும் கருத்துக்களையோ, புள்ளிவிவரங்களையோ... என்று எதையுமே பார்க்க முடியாமல் இருந்தது.
      பதிவு ஏற்ற மிகவும் சிரமமாக இருந்தது. இது நான் வந்த இரண்டு வார காலமாகவே தான் இருந்தது. நானும் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அதனால் தான் உங்கள் அனைவரிடமும் உதவி கேட்டு எழுதினேன்.
      இதைப்படித்த என் நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து நேராக பேசி அதைச் சரி செய்தார்.
      இப்பொழுது சரியாகிவிட்டது.
      அவர் நமது பிரேம் அவர்கள் சொன்னது போல் தான் சரி செய்தார்.
      இப்பொழுது சரியாகிவிட்டது. (ஹப்பா... ஒரு பெரிய பிரட்சனைத் தீர்ந்தது)
      அதனால் இந்தப் பதிவை எடுத்துவிடாலாம் என்று நினைத்தேன்.
      ஆனால் இதே போன்ற பிரட்சனைகள் யாருக்காவது இருந்தால் இதில் உள்ள பின்னோட்டங்களைப் பார்த்துச் சரி செய்து கொள்வார்கள் என்பதால் இந்தப் பதிவை நீக்காமல் விடுகிறேன்.
      நான் கேட்டதும் உடனடியாக உதவ வந்த உங்களுக்கும், ஆலோசனைக் கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நன்றியுடன்
      அருணா செல்வம்.

      நீக்கு
  2. கவலையை விடுங்கள் சகோதரி எங்கள் ப்ளொக்கர் நண்பன்
    இருக்கையில் கவலை எதற்கு ?....இதோ உங்கள் குழப்பத்தைத்
    தீர்த்து வைக்கக் காத்திருக்கின்றார் http://www.bloggernanban.com
    வாழ்த்துக்கள் உங்கள் தளம் மீண்டும் பிரகாசமாகக் காட்சியளிக்க .

    பதிலளிநீக்கு
  3. அருணா ! தாங்கள் படும் துன்பம் பெரிதே! முகநூலில் எனக்கும் இதே தொல்லைதான்! ஆனல் விளம்பரத் தொல்லை இல்லை, வேறு பல பதிவர்கள் பதிவு என் வலையில் வந்து என் பதிவை எங்கேயோ
    தள்ளி விடுகிறது! உங்களைப் போன்றே தடுக்க முயன்றும் முடியவில்லை! இந்தியா வந்திருந்த தாங்கள் வலைப்பதிவர்
    விழாவுக்கு வந்திருக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் புலவர் ஐயா.

      உங்களின் தொல்லைகளும் சரியாகிவிடும்.

      நான் இந்த வருடம் நிச்சயம் பதிவர் திருவிழாவில் சஸ்பென்சாக (சஸ்பென்சுக்கு தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை) கலந்து கொள்ளலாம் என்று தான் நினைத்து இருந்தேன்.
      அன்று காலையிலேயே கிளம்ப வேண்டும் என்று டிரைவரிடமும் சொல்லிவிட்டு தான் படுத்தேன். ஆனால் காலையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது.
      அதனால் வரமுடியவில்லை. அதனால் மிகவும் வருந்தினேன். மறுநாள் “தென்றல்“ சசிகலாவிடம் போன் செய்து பேசினேன். அவர்களையாவது சந்திக்கலாம் என்று நினைத்தும் முடியாமல் போய்விட்டது.
      சரி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்கு நானே மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.
      நீங்கள் இது குறித்து எழுதியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி புலவர் ஐயா. நன்றி.

      நீக்கு
  4. தனபாலன் அண்ணா இல்லாட்டி தமிழ்வாசி பிரகாஷ்கிட்ட கேட்டு பாருங்க. உதவி செய்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இருவரிடமும் கேட்பதற்குள் சரியாகிவிட்டது தோழி.
      தகவலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. திண்டுக்கல்தனபாலனை விட உதவ யாரால்முடியும்கவலையவிடுங்க

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கம்ப்யூட்டரில் control panel open செய்து அதில் programes AND feautures சென்று yontoo என்ற மென்பொருள் இருக்கிறதா என்று பாருங்கள் இருப்பின் அதை uninstall செய்யுங்கள் பிரச்சனை முடிந்து விடும் .UNINSTALL முழுமையாக செய்யுங்கள் மூன்றுமுறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரட்சனை சரியாகிவிட்டது பிரேம்.
      தங்களின் உடனடி ஆலோசனைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. இப்போது தங்கள் தளம்
    எவ்வித தடங்களுமின்றி
    சரியாகத் தெரிகிறதே
    சரி செய்து விட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இரமணி ஐயா.

      என் வலைத்தளத்தின் மேற்புறம் பிரட்சனை இல்லை. உள் நுழைந்ததும் தான் இத்தனைப் பிரட்சனைகள்.
      ஆனால் இப்பொழுது சரியாகி விட்டது.
      வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  8. தேவையில்லாத விளம்பரங்கள் எதுவும் வரவில்லையே! டி.டி சொல்லும் ஆலோசனைகளை பின்பற்றவும்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரங்களே நமக்குத் தேவையில்லாததாகத் தான் உள்ளது. ஆனால் மின் தளத்தின் உள் தேவையான விளம்பரங்களும் வேண்டவே வேண்டாம்.சாமி. நான் இரண்டு வாரமாகப் பட்ட அவஸ்தை போதும்.

      தகவலுக்கு மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  9. எனக்கிந்த அனுபவம் இதுவரை இல்லை.
    தனபாலன் சகோதரர் எல்லாவற்றையும் இலகுவாக செய்தேதருவார் போலுள்ளதே... கவலையை விடுங்கள் அவரிடம் கொடுங்கள்...:)

    இல்லை அம்பாள் அருளும் உண்டே..!

    நலமோ இப்போது தோழி!.. உங்கள் நலனையும் கவனியுங்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.
      “எனக்கிந்த அனுபவம் இதுவரை இல்லை. “

      இந்த அனுபவம் வேண்டாங்க. ரொம்ம்ம்ம்ப கடுப்பாக்கி விடும்.

      தவிர, நான் தற்பொழுது நலமுடன் இருக்கிறேன்.
      உங்களின் அன்பும் என்னை நலமாக்கும்.
      நன்றி தோழி.

      நீக்கு
  10. பிரச்சினை தீர்ந்ததில் ரொம்ப சந்தோஷம்... தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பிரட்சனைத் தீரவில்லைங்க. நானும் சரியாகிவிட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் கணிணியை நிறுத்திவிட்டு திரும்பவும் ஆன் பண்ணியதும் திரும்பவும் அதே பிரட்சனை....!!!
      திரும்பவும் மற்றவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன்.

      நன்றி குமார்.

      நீக்கு

  11. நார்டன் ஆண்டி வைரஸ் மென்பொருள் வாங்கி இன்ஸ்டால் செய்துவிடுங்கள் அதன் பிறகு எந்தவித தொந்தரவும் வராது.

    அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் உங்கள் தளத்திற்கு திருஷ்டி சுற்றிப்போட்டு 10 ஐபோன் வாங்கி எங்களைப் போல உள்ளவர்களுக்கு வாங்கி கொடுத்துவிடுங்கள் அதுக்கு அப்புறம் உங்கள் ப்ளாக்கை காத்து கருப்பு அண்டாதுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று தான் கொடாங்கியைக் கூப்பிட்டு குறி கேட்டேன். அவர் அமெரிக்கா பக்கம் கையைக் காட்டி, “அங்கிருக்கும் ஒருவர் தான் உங்களுக்கு இப்படியான செய்வினையைச் செய்திருக்கிறார்“ என்றார்.
      நான் அப்பொழுதும் நம்பவில்லை. ஆனால் “அவரே வந்து மாட்டிக்கொள்வார்“ என்று கோடாங்கி சொன்னார்.
      அது போலவே நீங்களே இப்படியான பதிலைக் கொடுத்து மாட்டிக்கொண்டீர்கள்.
      ஏங்க இப்படி....?
      ஐபோன் வேண்டும் என்று கேட்டிருந்தால் நான் இங்கிருந்து வாங்கி அமெரிக்கா பக்கம் அனுப்பி இருப்பேனே...
      சரி போகட்டும் விடுங்கள். நாளைக்கே ஒரு கிலோ காய்ந்த மிளகாய் வாங்கி திருஷ்டி சுற்றிவிடுகிறேன்.

      ஆலோசனைக்கு மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு