மனமென்னும் தோட்டத்தில்
மலர்கின்ற மலர்களெல்லாம்
மாயனவன் செய்துவைத்த
மனம்நிறைந்த மதுக்குடங்கள்!
எத்தனையோ பூவினங்கள்!
என்னாளும் காய்ந்தாலும்
காய்க்காமல் போனாலும்
காலத்தின் கவித்துவங்கள்!
இன்பங்கள் நிறைந்திருந்தால்
இனிக்கின்ற தேன்சுரந்து
இன்பமணம் வீசுகின்ற
எழுதமுடியா வர்ணனைகள்!
இனிக்கின்ற தேன்சுரந்து
இன்பமணம் வீசுகின்ற
எழுதமுடியா வர்ணனைகள்!
பருவத்தில் உணர்வுகளைப்
படைத்திட்ட அருமைகளைப்
பளிங்காகக் காட்டிநம்மை
படபடக்க வைப்பவைகள்!
மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையியைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!
தினமெழுந்து பார்த்தாலும்
தீதென்றே நினைத்தாலும்
இளம்வயது இன்பங்கள்
என்னாளும் இனிப்பவைகள்!
மரணநேரம் வந்தாலும்
மகிழ்வளிக்கும் ஞாபகங்கள்!
மனமதிலே வாடாமல்
மலர்ந்தாடும் சோலைகளே!
மலர்ந்தாடும் சோலைகளே!
அருணா செல்வம்.
39 கருத்துகள்:
நினைவலைகள் அழகான கவிதையாக மலர்ந்திருக்கிறது.வழக்கம்போல் இனிமை
Mika mika arumai
Thodara vaazhththukkal
முடிவில் நாலு வரிகள் மற்ற எல்லாவற்றையும் விழுங்கி விட்டது... அருமை... வாழ்த்துக்கள்...
தமிழ்மணம் 3
நல்ல கவிதை....
பருவநியாபகங்கள் உண்மை, நன்றாக கவி வடிவில் சொல்லியிருக்கிறீர்கள்.
இளம்வயது இன்பங்கள்
என்னாளும் இனிப்பவைகள்!//
இளம் வயது நினைவுகளுக்கு எல்லையேது.?
பருவ நாடகம் கவிதையாய் ..
பாராட்டுக்கள்..
ஞாபங்களே நம்மை வாழவைக்கிறது...
அழகிய கவிதை
நினைக்க நினைக்க
திகட்டாத தேன்சுவை...
இந்த பருவகால ஞாபகங்கள்...
என்றும் வசந்த காலம் தான் அவைகளுக்கு...
நீங்கள் இலங்கையில் பிறந்த பெண் என்று நினைக்கிறேன்; அப்படி இலங்கை தமிழச்சியாக இருந்தால்...இது உங்களுக்காக...
மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையியைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!
பாழ்மனத்தில் பதிந்தாலும்
யாழ்மனத்தில் பதிந்தவைகள்!
கண்டிப்பாக இளவயது ஞாபகங்கள் நம் காலம் முடியும் வரை இன்பமளிப்பவை என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கொள்ள முடியாது அருணா.
மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையியைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!
உண்மை தான் நினைவுக்கேது வயது.
தினமெழுந்து பார்த்தாலும்
தீதென்றே நினைத்தாலும்
இளம்வயது இன்பங்கள்
என்னாளும் இனிப்பவைகள்!
உண்மை! ஐயமில்லை! அருமை!
அருமை. மனதில் பதிந்த நினைவது முதுமையிலும் பசுமையாய் இருக்கும். யதார்த்தமான கவிதை. வாழ்த்துக்கள் தோழி!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
(ஊர் பயணம் நல்லபடியாக முடிந்ததுங்களா....?
நிறைய பார்த்துவிட்டு வந்து அனுபவங்களைப் பகிருங்கள்.
காத்திருக்கிறோம்)
முடிவு நாலு வரியா....?
(சாகும் பொழுதும்
சந்தோஷ எண்ணங்களை
சுமர்ந்தே பணயத்தை முடிக்கட்டுமே என்று தான்...)
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.
ஓட்டொன்று போட்டு உயர்த்திவிட்டீர்! ஓர்வார்த்தை
கூட்டக் குறைந்திடுமோ கூறு!
தங்களின் வருகைக்கும் ஓட்டிற்கும்
மிக்க நன்றி கவிஞர்.
ஆம் அருணா!அந்நினைவுகளில் மூழ்குவதே ஒரு சுகம்தான்!
அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
“ஞாபங்களே நம்மை வாழவைக்கிறது...“
நீங்கள் சொல்வது உண்மைதான் கவிதை வீதி..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.
வணக்கம் நம்பள்கி.
உங்கள் கவிதை இலங்கை தமிழச்சிகளுக்கே
உரியதாகட்டும்.
நான் புதுச்சேரி பெண்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நம்பள்கி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.
ஹலோ! அதெப்படி புதுச்சேரி என்று சொல்லியிருக்கீங்க! அதானால் அதற்கும் ஒன்னு!
மாதங்கள் வருடமாகி
வடிவத்தில் முதுமையியைப்
பரிசாகத் தந்தாலும்
பாழ்மனத்தில் பதிந்தவைகள்!
பாண்டிச்சேரியில் பிறந்து
புதுச்சேரியில் வளர்ந்து
பிரான்ஸில் வாழ்ந்து
பாழ்மனத்தில் பதிந்தாலும்
ஆழ்மனத்தில் பதிந்தவைகள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஆதிரா.
மரணநேரம் வந்தாலும்
மகிழ்வளிக்கும் ஞாபகங்கள்!
மனமதிலே வாடாமல்
மலர்ந்தாடும் சோலைகளே//
முத்தாய்ப்பு...
தங்களின் வருகைக்கும்
அயராமல் தந்த பதில் கவிதைக்கும்
மிக்க நன்றி நம்பள்கி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரெவெரி சார்.
"தினமெழுந்து பார்த்தாலும்
தீதென்றே நினைத்தாலும்
இளம்வயது இன்பங்கள்
என்னாளும் இனிப்பவைகள்!"
அருமை சகோதரி !!! வாழ்த்துகள் !!!
கருத்துரையிடுக