வியாழன், 7 மார்ச், 2013

சே.. என்ன வாழ்க்கை இது?






பெண்ணாகப் பிறந்து விட்டால்
பெருமையென உள்ம னத்தில்
விண்போன்ற ஆசை வந்தும்
வீணென்று தள்ள வேண்டும்!

பண்ணிற்குள் கருவின் உண்மை
பண்பற்று போகு மென்று
மண்ணாக்கி மனத்திற் குள்ளே
மக்கத்தான் வைக்க வேண்டும்!

மதம்கொண்ட போதை மக்கள்
மயக்கத்தைத் தெளிய வைக்கப்
பதமாகச் சொல்லெ டுத்துப்
பண்ணென்று பின்னி விட்டால்...

இதமாக ஏற்றோம் என்றே
இயம்பிவிட யாரும் இல்லை!
நிதம்காணும் காட்சி நெஞ்சுள்
நினைவாக்கிக் குமுற வேண்டும்!

காண்கின்ற காட்சி எல்லாம்
கனவுகண்ட ஊமை போலே
வீண்என்றே மனத்தில் வைத்து
வெளிவராமல் காத்தல் வேண்டும்!

ஊண்மட்டும் கொண்ட மேனி
உயிர்வாழ உதவ வேண்டி
ஆண்என்ற ஆதிக் கத்தின்
அடிமையென வாழும் வாழ்வே!

அருணா செல்வம்
08.03.2013


31 கருத்துகள்:

  1. நீங்கள் அடிமையில்லை அது அந்தக் காலம் இப்போதுதானே பெண்ணுரிமை காத்துவருகிறோம் பேணி வளர்கிறோம்.இப்போதுதான் வெளியே தெரிகிறது ஆனாலும் உங்களின் ஆதங்கம் உண்மை என்றே மனது சொல்லத்தோனுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியாழி ஐயா...

      நான் அடிமை இல்லை“ என்பதால் தான் இவ்வளவு சுதந்திரமாக கவிதையை எழுதுகிறேன்.
      ஆனால் என்னைப் போல் எல்லா இந்தியப் பெண்களும்
      சுதந்திரமாக இருக்கவில்லை என்பரே உண்மை.
      அதனால் வந்த கவிதை தான் இது்.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  2. ஏன்? என்ன ஆச்சு? இன்னைக்கு போய் இப்படி சொல்லலாமா? சரி போகட்டும் எல்லாம் சரியாகிவிடும்
    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  3. நிதம்காணும் காட்சி நெஞ்சுள்
    நினைவாக்கிக் குமுற வேண்டும்!//

    சரியா சொல்லி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.... சிலவற்றை வெளியே
      பெண்களால் சொல்ல முடிவதில்லை...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  4. எல்லா இடங்களிலும் பெண், ஆணுக்கு அடி‌மையென வாழ்வதில்லை. சுதந்திரமாய், சுயமாய் இருக்கும் பெண்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். எனினும் கவிதை சொல்லும் நிலை முற்றாக மாறி விடவில்லையென்பது நிதர்சனம். எது எப்படியோ... மகளிர் தினத்தினை மனமுவந்து கொண்டாடுவோம்... வாழ்த்திடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலகணேஷ் ஐயா.
      உங்களின் கருத்து 33 விழுக்காடு உண்மைக்கும் கீழ் என்றே கொள்ளலாம்.
      நிலைமை முற்றாக மாறிவிட வேண்டும் என்று நான் சொல்லவர வில்லை. கொஞ்சமாவது மாறவேண்டும் என்று தான் சொல்லவந்தேன்.
      இன்று மகளிர் தினத்தைக் கொண்டாடலாம்... வாழ்த்தலாம்....
      (தீபாவளி கொண்டாடுவதைப் போல...)

      தங்களின் வருகைக்கும் நல்ல கருத்தோட்டத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அச்சோ.... நாளைக்கு கலகலபாக கவிதைகள் எழுதுகிறேன்.


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  6. ஆணாதிக்கம் முழுமையாக ஒழிந்துவிட்டது
    என்று கூற இயலவில்லை...
    இருக்கின்றது...
    இனிவரும் காலங்களில் குறையும்
    என்ற நம்பிக்கையில்...
    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வார்த்தைகள் பளிக்கட்டும் கவிஞரே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  7. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அடிமையில்லையெனினும்.... சமமில்லை...
    ஏதோ சில பெண்களின் நிலை இது....
    பலரின் நிலையை நீங்கள் எழுதிய கவிதை பிரதிபலிக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத காலத்தில் இருந்து இணையம் வரை வந்து குரல் கொடுக்கும் சுதந்திரமான உலகில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமுதாயத்தில் சிற்சில குறைபாடுகளை தவிர்த்து பெண்கள் சுதந்திரமாய்த்தான் வாழ்கிறோம். ஆதங்கம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  10. பெண்கள் இன்னும் அடிமைகள் என்பது இக்காலத்தில் மிகக்குறைவுதான்.
    இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் குடும்பத்துக்குள் இன்னும் முழுமையாக அவளுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

    பிறந்த காலத்தில் பெற்றோர், பின்னர் கணவன், ஒருவேளை கணவன் தவறி விதவைக் கோலமாகிவிட்டால் பிள்ளையின், சகோதரனின், பாதுகாவலர் என்னும் பெயரில் உற்றம் சுற்றத்தவரின் கருத்துக்கட்டுப்பாடு இப்படி... இப்படி...
    நல்ல கவி, நல்ல கருத்து.

    உங்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.

      நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மட்டும்
      பார்க்காதீர்கள் இளமதி.
      நம்மை தாண்டி இருப்பவர்களைத் தொலை நோக்கு
      கண்களுடன் நோக்குங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. சே.. என்ன வாழ்க்கை இது?//

    Still saddened..?

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெவெரி சார்...
      (Still saddened..?)

      நான் சொல்ல வந்த கருத்து... “பெண்கள் நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட பசு மாடுகள்“ என்று சொல்லி இருக்கிறார்கள் இல்லையா...?
      இன்னும் கட்டப்பட்ட நிலையில் தான் நாம் உள்ளோம் என்பதைச் சுட்டிக் காட்டி எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. மகளிர் தினத்தில் இப்படியொரு சோகமா? நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது சகோதரி! வருந்த வேண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற முடியாமல் இருப்பவர்களுக்கும்
      மாற்றம் வர வேண்டும் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  14. உங்கள் கவிதையை மாற்றினால் உங்களுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்படும். நேற்று மகளிர் தினம்...

    ஊண்மட்டும் கொண்ட மேனி
    உயிர்வாழ உதவ வேண்டி
    ஆண்என்ற ஆதிக் கத்தின்
    அடிமையென வாழும் வாழ்வே!

    --------
    அடுத்த மகளிர் தினம் அன்று...இப்படி எழுத வேண்டும்...

    ஊண் கொடுத்து உருவாக்கிய மேனி
    உயிர் வாழ உதவ வேண்டி
    ஆண் என்ற அடிமையின் சுகத்துக்கு
    பெண் தெய்வம் வாழும் வாழ்வே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த மகளிர் தினத்திற்குத் தானே...
      எழுதிடலாம் நம்பள்கி.

      தங்களின் வருகைக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும்
      கவிதைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பல மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் மாற்றங்கள் இன்னும் வேண்டும் என்பது தான் உண்மை. வடக்கில் நகரங்களை விட்டு கிராமப் புறங்களில் சென்றால் இன்னும் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என தான் சொல்ல வேண்டும்.

    மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகராஜ் ஜி...
      உங்களின் கருத்தைத் தான் நான் எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  16. இந்த நிலை மாற வேண்டும் .இனிய மகளீர்தின வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விடலாம் தோழி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு