வியாழன், 19 ஏப்ரல், 2012

திருட்டுக் குட்டி!!



திட்டம் போட்டே செய்திட்டாள்.
திறமை யானக் கைகாரி!
சட்டம் என்றே ஒன்றிருந்தால்
சரியாய்ப் பிடித்து வைத்திடுவேன்!

எதிரி எவனும் இருந்ததில்லை.
எதிர்த்தே எவனும் நின்றதில்லை.
கதிரு போன்ற பெண்ணவளோ
கடுதில் நுழைந்த மாயமென்ன?

அஸ்தி வாரம் பலமான
அமைத்து வளர்ந்த தேகமிது!
பஸ்கி குஸ்தி செய்துநன்றாய்ப்
பருவம் மயக்கும் பளிங்கானது!

நாட்டுக் கோழி நல்லெண்ணெய்
நாளும் உண்டு வளர்த்தவுடல்!
தீட்டும் தமிழை இதயமேந்தித்
திளைத்தச் சுவையால் களித்தவுடல்!

தெள்ளத் தெளிந்தே நானிருந்தேன்!
தெரிந்தே திமிராய் எதிர்வந்தாள்!
கள்ளச் சாவி இல்லாமல்
கண்ணின் வழியில் புகுந்துவிட்டாள்!

கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
இருட்டில் கலந்த புகைபோல
இருந்த இடமோ தெரியவில்லை!

எதையோ எடுத்துச் சென்றுவிட்டாள்
இதயம் ஏங்கித் தவிக்கிறது!
இதைதான் காணோம் என்றில்லை
இருந்த அனைத்தும் காணவில்லை!

பசிக்க வில்லை! வாழ்க்கையும்
ருசிக்க வில்லை! காட்சிகளை
ரசிக்க வில்லை! கவிதைகளோ
கசிய வில்லை! கலங்குகிறேன்!
 
திருடிச் சென்ற அவளைநான்
தேடித் தேடிப் பார்க்கின்றேன்!
திருட்டுக் குட்டி என்கையில்
திரும்ப கிடைத்தால்... திருவிழாதான்!



19 கருத்துகள்:

  1. களவு கொடுத்தாகிவிட்டது காத்திருங்கள் கல்யாணம் வரை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணம் ஆகிவிட்டால்
      திருப்பிக் கொடுத்திடுவாளா..?
      அப்படியென்றால் எனக்கு கல்யாணம் வேண்டாம் சசிகலா!

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  2. ம்ம்ம்
    திருடிச் சென்றவள் திரும்பி வருவாள்
    திருப்பித் தருவாள் அவள்
    காதலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ சரிங்க செய்தாலி. காத்திருக்கிறேன்!

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  3. கருத்தில் சேர்த்த நான்மறைகள்
    கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
    இருட்டில் கலந்த புகைபோல
    இருந்த இடமோ தெரியவில்லை!

    அந்தக் கள்ளி வாழ்க
    அழகான கவிதை பிறக்கக் காரணமாக
    காரணமாய் இருப்பதற்காக
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அந்தக் கள்ளி வாழ்க“

      அந்தத் திருட்டுக்குட்டிக்கு வாழ்த்தா...?
      ம்ம்ம்... மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  4. திருட்டுக் குட்டி கிடைக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க கூடல் பாலா அவர்களே!

      நீக்கு
  6. உங்கள் கவிதை வடிவம்
    மிகவும் புதிது நண்பரே...
    மரபு வடிவில்
    பேச்சு வழக்கை கொண்டுவருதல்
    மிகவும் கடினமான செயல்...
    அதை அழகாய் செய்கிறீர்கள்..
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. தாயே.. அன்னையே... என்று
    கூப்பிடாத வார்த்தைகளால் அம்மாவை அழைப்பதைவிட
    அம்மாவை “அம்மா“ என்று சொல்வதில் தான்
    உண்மை இருக்கிறது என்று நினைக்கிறேன் ஐயா.

    இந்த வகை எனக்கு இலகுவாக வருகிறது,
    ஆனால் பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றிங்க மகேந்திரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. அருமை. வாய்விட்டு படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
    திருவிழா நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்ங்க சிவகுமாரன்!

      தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  9. அருமை. வாய்விட்டு படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
    திருவிழா நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கவிதையவிட அது பிறந்திருக்கும் வடிவம் அசத்துகிறது அருணா.என்னால் முடியவில்லை என்கிற ஆதங்கமும்கூட !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்கிறேன் ஷேமா
      உங்களுடைய கவிதைகளைப் புரிந்து கொள்ள எனக்கு இன்னு்ம் அறிவும் பக்குவமும் வரவில்லையே....என்றும் உங்களுடைய கவிதையைப் போல் எனக்கு எழுத வரவில்லையே என்றும் நான் தான் மிகவும் ஆதங்கம் பட்டுக்கொண்டிருக்கிறேன்.
      உங்களுடையக் கவிதைகளைப் படித்துவிட்டு கண்மூடித் தனமாக பின்னோட்டம் எழுத மனமில்லாமல் பெருமூச்சுடன் வெளியேறி விடுவேன். மன்னித்து விடுங்கள்.
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க ஷேமா.

      நீக்கு
  11. #கருத்தில் சேர்த்த நான்மறைகள்
    கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
    இருட்டில் கலந்த புகைபோல
    இருந்த இடமோ தெரியவில்லை#
    அழகாக வார்த்தைகளை கோர்த்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  12. "கருத்தில் சேர்த்த நான்மறைகள்
    கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
    இருட்டில் கலந்த புகைபோல
    இருந்த இடமோ தெரியவில்லை!"
    அழகாக வார்த்தைகளை கோர்த்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  13. அன்பின் அருணா செலவ்ம் - கவிதை அருமை - கருத்தும் அருமை - கவிதை நாயகனுக்கு திருட்டுக் குட்டி விரைவினில் கிடைத்து திருவிழாவாக மகிழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு