செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அத்தை மகள் சொன்னது...!! (கவிதை)
உயிர்கலந்த உன்கவியை உரைத்தேன் மாமா!
     ஊசிபோல எனைப்பார்த்தாள்! பின்பு சொன்னாள்
பயிறுஎன்றால் பசிக்குதவும் என்றே எண்ணிப்
     படிப்படியாய் வாங்கிவைக்க உதவும் பின்னே!
கயிறுபோன்று திரிப்பதுதான் கவிஞர் உள்ளம்!
     கருத்திருக்கும் கதைதானே காதல் எண்ணம்!
மயிலில்லை கவிமழைக்கு மயங்கி ஆட!
    மயக்கமெலலாம் கவித்தமிழில் மட்டும் என்றாள்!!

13 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு

AROUNA SELVAME சொன்னது…

என்னைப் பார்த்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள் சௌந்தர்!

பெயரில்லா சொன்னது…

ரசித்தேன்...

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க ரெவெரி!

மகேந்திரன் சொன்னது…

அடடா...
தூது போன அத்தை மகள் வந்தாச்சா...
நான் சொன்னேன் இல்லையா...
தூது சரியாய் இருக்குமென்று..

விடுங்க நண்பரே...
இன்று கவிதையில் மயங்கியவர்
விரைவில் கவியிடமும் மயங்குவார்...

முயற்சியை கைவிடாது .. தொடருங்கள் தூதுப் படலத்தை...

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க மகேந்திரன்!

நீங்களாவது நல்ல வார்த்தையைச் சொன்னீர்களே...
இது போதும்.... தொடருகிறேன்.

ஹேமா சொன்னது…

என்னவொரு அழகு தமிழ் !

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் ரசனைக்கும்
மிக்க நன்றிங்க ஷேமா.

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

கயிறுபோன்று திரிப்பதுதான் கவிஞர் உள்ளம்!
கருத்திருக்கும் கதைதானே காதல் எண்ணம்!

அழகிய வரிகள்!

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் பின்னோட்டம் இட்டதற்கும்
மிக்க நன்றிங்க நம்பிக்கைபாண்டியன் அவர்களே!

தணிகவேல்.கி சொன்னது…

நல்ல கவிதை !

என்ன அழகான அத்தை மகள் !

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கு நன்றிங்க தணிகைவேல்!

அத்தை மகளின் அழகைவிட
அவள் என்கண்களுக்கு அழகிங்க தணிகைவேல்!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

superb