வியாழன், 7 ஜூன், 2012

கனியா...? கலையா...? (படங்கள்)


தர்பூசனி பழங்களில் செய்த கலைநயங்கள். நான் ரசித்துப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள். 




 





























அனைத்து படங்களையும் இணையத்திலிருந்து எடுத்தேன்:  நன்றி.

புதன், 6 ஜூன், 2012

புதுமைப் பூ!! (கவிதை)




வண்டு ஒன்று
   பூவோ என்று
      வந்து வட்டமிடச்
செண்டு போன்ற
   இதழால் இமைகள்
      மூடிச் சேர்ந்துவிடக்
கண்ட வண்டு
   குண்டுக் கண்ணைப்
      புதுமைப் பூவெனவே
சென்று மீண்டும்
   கிட்டே வந்து
      திரும்பிச் சென்றிடுதே!!



திங்கள், 4 ஜூன், 2012

பூமாலையா? பாமாலையா? (கவிதை)




காலைப் பூக்களைக் கைகளால் பறித்ததும்
       கட்டினேன் பூமாலை!
சோலைப் பூவினுள் தேனினைத் தேடியே
       சுற்றிடும் வண்டொன்று
மாலைப் பூவினுள் மதுவினைக் குடித்திட
       மயங்கியே வந்ததினால்
சேலை நெய்திடும் தறியென என்கையோ
       செய்தது பாமாலை!!

சங்கச் செந்தமிழ் தந்துள பாட்டெனச்
       சாற்றிய பாமாலை!
தங்கத் தேரினில் தமிழ்மகள் வந்திடத்
       தந்துள பூமாலை!
எங்கும் செந்தமிழ்! எதிலும் இன்றமிழ்!
       இயம்பிடும் என்மூளை!
மங்கும் வாழ்வினில் பொங்கிடும் இனிமையை
       வளர்ப்பதே நம்வேலை!


வெள்ளி, 1 ஜூன், 2012

கோழி வறுவல்!! (கவிதை)



 
 
தொட்டவுடன் சுடுமளவில் எண்ணெய் வைத்துத்
    தோலெடுத்த கோழியினை வதக்கி விட்டுப்
பட்டையையும் கிராம்பையும் பதமாய்த் தட்டிப்
    பட்டுப்போல் அரைத்துவைத்த இஞ்சி பூண்டும்
வெட்டிவைத்த வெங்காயம் மிளகாய் போட்டு
    வேண்டுகின்ற மசாலாதூள் உப்பும் சேர்த்துச்
சொட்டுத்தண்ணீர் இல்லாமல் வறுத்து வைத்தால்
    சோறுவேண்டாம் என்றவனும் திரும்பிப் பார்ப்பான்.