திங்கள், 6 ஜனவரி, 2014

மற்றவரின் மேல் பொறாமை பட்டால்....

   பட்டினத்தார், ஞானியாவதற்கு முன் பெரிய செல்வந்தராக இருந்தார். வியாபாரத்தில் அவருக்கு செல்வம் கொட்டியது.
   அவரது வீடு அரசன் வாழும் அரண்மனைக்கு நிகராக பெரிய மாளிகையாக இருந்தது. நகரம் முழுவதும் அவரது வீட்டைப் பற்றியே அனைவரும் பேசினர்.
   இந்த விசயம் அந்த நாட்டு அரசனின் காதிலும் விழுந்தது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. நம் அரண்மனை எத்தனையோ விலை மதிப்பு உள்ளது. எத்தனையோ கலைநயம் மிக்கது. அதைப்பற்றி யாரும் விமர்சிக்காமல் கேவலம், ஒரு வியாபாரியின் வீட்டைப் பற்றி இவ்வளவு பிரமாதமாகப் பேசுகிறார்களே....என்று ஆவேசம் கொண்டான்.
   ஒரு நாள்...
   தன் பரிவாரங்களுடன் பட்டினத்தாரின் வீட்டிற்குச் சென்றான்.
   அது மிகமிக அழகொளிரும் மாளிகையாக இருந்ததைக் கண்டு அவனே பிரமித்தான். மாளிகையின் உத்தரத்தைத் தங்கத் தூண்கள் தாங்கிக் கொண்ருந்ததைக் கண்டு மனம் வெதும்பினான். தன் அரண்மனை கூட இப்படித் தங்கத் தூண்களால் கட்டப்படவில்லையே என்று ஏங்கினான். உடனே அவனுக்குக் கோபம் வந்தது.
   அவன் பட்டினத்தாரை அழைத்து, “நீர் இன்றே இந்தத் தங்கத் தூண்களை அகற்ற வேண்டும். இது அரச கட்டளை“ என்று உறுமினான்.
   பிறகு பரிவாரங்களுடன் சென்று விட்டான்.
   சிலநாள் கழித்து சில அதிகாரிகளை அழைத்து, பட்டினதார் தன் மாளிகையிலிருந்த தங்கத் தூண்களை எல்லாம் அகற்றி விட்டாரா என்று பார்த்துவிட்டு வரும்படி கட்டளையிட்டான்.
   அதிகாரிகள் பட்டினத்தாரின் மாளிகைக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
   அவர்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
   காரணம்...
   அங்கே தங்கத் தூண்கள் அகற்றப்பட்டு வைரங்கள் பதித்த தூண்கள் நிறுத்தப் பட்டிருந்தன. அவைகள் மேலும் மின்னின.
   விசயத்தை அறிந்த மன்னன், மற்றவரின் மேல் பொறாமை கொண்டு அவர்கள் விசயத்தில் அநாவசியமாகத் தலையிட்டால் இப்படிப்பட்ட அவமானமும் தலைகுனிவும் ஏற்படும் என்பதை உணர்ந்து வருந்தினான்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

21 கருத்துகள்:

mani சொன்னது…

nice story with good info

Yarlpavanan சொன்னது…

சிறந்த கருத்துப் பகிர்வு
நல்வழிகாட்டலும் கூட

ராஜி சொன்னது…

இதுவரை அறிந்திடாத விசயம் அருணா!

unmaiyanavan சொன்னது…

அடுத்தவர் மேல் பொறாமைப்பட்டால், அவமானம் ஏற்படும் என்பதை குறிக்கும் பதிவு. அருமை சகோதரி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியான தண்டனை...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அறியாத கதை
அற்புதமான கதை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ இந்த கதை நல்லா இருக்கு..... ஆனா எங்களை சின்ன புள்ளை ரேஞ்சுக்கு இழுத்துகிட்டு போய் படிக்க வைக்கிறது நல்லா இல்லை . எங்களுக்கு தேவை உங்களின் நிமிடக்கதைதான் . சோம்பேறி பார்க்காமல் உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்க.... அதை பத்திரமா லாக்கரில் வைத்து இருந்தால் காலப்போக்கில் உங்களுக்கு அங்கே வைத்ததே மறந்து போய்விடும்...

Avargal Unmaigal சொன்னது…

என்னது இந்த கருத்தை உங்க வூட்டுகாரருக்கு காண்பிக்க போறீங்களா? ஓ புரிஞ்சு போச்சு உங்களுக்கு மூளை இல்லைன்னு உங்க கணவர் நெனைச்சு இருக்கிறாரா? ஒ அதனால இதை காண்பித்து உலகத்தில் ஒருவர் உங்களுக்கும் மூளை இருக்குன்னு நிறுபிக்க போறிங்களா?

Avargal Unmaigal சொன்னது…

என்னது இந்த கருத்தை உங்க வூட்டுகாரருக்கு காண்பிக்க போறீங்களா? ஓ புரிஞ்சு போச்சு உங்களுக்கு மூளை இல்லைன்னு உங்க கணவர் நெனைச்சு இருக்கிறாரா? ஒ அதனால இதை காண்பித்து உலகத்தில் ஒருவர் உங்களுக்கும் மூளை இருக்குன்னு நிறுபிக்க போறிங்களா?

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாணடு வாழ்த்துக்கள் !என்னம்மா புத்தாண்டு பிறந்துருச்சு இந்த வருஷமாவது டீரிட் கிடைக்குமா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு.

பகிர்ந்தமைக்கு நன்றி.

த.ம. +1

rajamelaiyur சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான நீதிக்கதை! நல்லதொரு பகிர்வுக்கு நன்றி!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

தமிழ்மணம் 6

பொறாமை பிடித்துப் புழுங்குகிற வாழ்வு
சிறுமை அடையும் சிதைந்து!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…தமிழ்மணம் 6

பொறாமை பிடித்துப் புழுங்குகிற வாழ்வு
சிறுமை அடையும் சிதைந்து!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
அருமையான நீதிக்கதை..... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அம்பாளடியாள் சொன்னது…

உண்மை தான் தவிர்க்கப்பட வேண்டிய தீய குணங்களில்
மிக முக்கியமானதொன்று பொறாமையே ! சிறப்பான பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி அருணா .

நம்பள்கி சொன்னது…

நல்ல இடுகை!
தமிழ்மணம் +1

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள் சகோதரி.

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

இளமதி சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!