புதன், 3 பிப்ரவரி, 2016

ஜவ்வரிசி உருண்டை!தேவையான பொருட்கள்
---------------------------------------

ஜவ்வரிசி - 500 கிராம்
தேங்காய் - ஒன்று
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 8

செய்முறை
------------------


ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி அது மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.தேங்காயைத் துறுவி ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு வதக்கி.... வதக்கிய தேங்காய்த் துறுவலுடன் சர்க்கரை, கொஞ்சமாக உப்பு,  நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 


இப்போது ஊறிய ஜவ்வரிசியைக் கொஞ்சம் எடுத்து உருண்டையாகப் பிடித்து, லேசாகத் தட்டி (படத்தில் காட்டியது போல ) செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து இன்னும் கொஞ்ச மாவால் மூடி....இப்படி உண்டையாக செய்துக்கொள்ள வேண்டும்.
எல்லா மாவையும் இப்படி உருண்டை பிடித்து விட்டு...இட்லி பாத்திரத்தில் இட்லி மாவு ஊற்றும் இடத்தில் ஒவ்வொரு உருண்டையாக வைத்து பாத்திரத்தைப் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும். ஜவ்வரிசி வெந்ததும் கண்ணாடி போல பளபளப்பாகப் படத்தில் உள்ளது போல் இருக்கும்.


 சற்று ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து விடலாம்.


ஜவ்வரிசி உருண்டை

இந்தச் சிற்றுண்டி உருண்டைப் பிடிக்கச் சற்று சிரமாக இருந்தாலும்  சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

நன்றியுடன்
அருணா செல்வம்

5 கருத்துகள்:

 1. நல்லதொரு சுவையான உருண்டை. பகிர்வுக்கு மிக்க நன்றி செய்து பார்த்டுவிடுகின்றோம்..

  பதிலளிநீக்கு
 2. இதை ஏன் ஜவ்வரிசிக் கொழுக்கட்டை என்று சொல்லக் கூடாது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்.

   புடிச்சி வச்சாதானே... அது கொழுக்கட்டையாகும்....?
   உருண்டையாக இருப்பதால் இப்படி சொல்வார்கள் போல... யாராவது விளக்கம் சொன்னால் நல்லது.

   நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

   நீக்கு
 3. புதியதாய் இருக்கிறது.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு