திங்கள், 8 டிசம்பர், 2014

பொரி அரிசி உருண்டை!!



நட்பறவுகளுக்கு வணக்கம்.
    நேற்று புதியதாக திருமணமான தம்பதியர் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக போன் செய்தார்கள். அவர்களுக்கு அவசர அவரசமாக இந்தப் பொரி அரிசி உருண்டையையும் முறுக்கும் செய்து வைத்து உபசரித்தேன்.
    அதிலிருந்து உங்களுக்கும் கொஞ்சம்... “சும்மா“ சாப்பிட்டுப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்.

அரிசி – 2 டம்ளர்.
சர்க்கரை – ஒரு டம்ளர் (வேண்டுமானால் மேலும் சேர்த்துக் கொள்ளலாம்)
ஏலக்காய் – ஐந்து (நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்)
முற்றிய தேங்காய் – ஒன்று (துருவி வைத்துக்கொள்ளங்கள்)
உப்பு – கொஞ்சம்.

செய்முறை


     
அடிகனமான பாத்திரத்தில் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக பூக்க வறுக்க வேண்டும்.


    வறுத்தப் பிறகு ஆற வைத்து அதை மிக்ஸியில் இட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
    திரும்பவும் அதே பாத்திரத்தில் ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும்


உப்பு,
சர்க்கரை,
ஏலக்காய் சேர்க்க வேண்டும்.


அரிசிமாவைத் துரலாக சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். நன்கு என்றால் இரண்டு மூன்று நிமிடத்திலேயே வெந்து கட்டியாகி விடும். கட்டி கட்டியாக வராமல் நன்றாக கிளறிக்கொண்டே  இருக்க வேண்டும். 


வெந்து உருண்டைப் பிடிக்கும் அளவிற்கு வந்ததும் துருவிய தேங்காயில் கொஞ்சம் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.


    பின்பு சிறு சிறு உருண்டையாகப் பிடித்துத் துருவிய தேங்காயில் உருட்டி தட்டில் அடுக்கி வையுங்கள்.

    இது தான் பொரி அரிசி உருண்டை

செய்வதற்கு மிகவும் எளிது. சாப்பிடவும் சுவையாக இருக்கும். செலவும் கம்மி தான்.

நட்புறவுகளே..... இந்தப் பலகாரத்தை நம் தமிழ்ப்பெண்கள் அனைவருமே மிக நன்றாக செய்வார்கள். நான் எதற்காக இதைச் செய்து வெளியிட்டேன் என்றால்...... நான் சரியாகத்தான் செய்திருக்கிறேனா? என்று தெரிந்துக் கொள்ளத்தான். தவறு இருந்தால்... தோழிகளே பின்னோட்டத்தில் சொல்லிக்கொடுங்கள்.

அன்புடன்

அருணா செல்வம்.

32 கருத்துகள்:

  1. ஹூம்... படத்தைப்பார்த்து பெருமூச்சுதான் விட்டேன்.. என்னால முடிஞ்சது அவ்வளவுதான் எனது நகைச்சுவைப்பதிவு காண்க... த,ம,1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டிற்கு வாங்க கில்லர் ஜி. உங்களுக்கு சூப்பராக இந்த உண்மையைச் செய்து தருகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்..

    பாரம்பர்ய மிக்க சுவையான - பொரி அரிசி உருண்டை வழங்கி அசத்தி விட்டீர்கள்..

    மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க. வணக்கம் ஐயா.

      தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி செல்வராஜி ஐயா.

      நீக்கு
  3. ஹை...... பொர்லங்கா உருண்டை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பொர்லங்கா உருண்டை இல்லைங்க. அது வேற.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. படமும் விளக்கமும் அருமையாகத்தான் இருக்கிறது ஆனால் முக்கியமான ஒன்றை கோட்டைவிட்டு விட்டீர்களே... அதுதாங்க அதை சாப்பிட்ட தம்பதிகளின் நிலமை இப்போது எப்படி இருக்கிறது என்று போடவில்லையே..

    பதிலளிநீக்கு
  5. அதை சாப்பிடும் போது அவர்களின் முகம் போன போக்கினை அழகாக போட்டோ எடுத்து போட்டிருக்கலாமே? சாப்பிட்ட இருவரில் ஒருவருக்கு பல் உடைந்து போனதாக தகவல் இங்கு வரை வந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
      இது பொரி அரிசி உருண்டை.
      மிகவும் சாப்டா இருக்கும்.
      நிங்கள் சொல்ல வருவது பொர்லங்காய் உருண்டை. அதன் செய்முறை வேறு விதம்.

      நீக்கு
  6. பிரான்ஸில் இருந்து இந்திய அரசாங்கம் வெடி குண்டுகளை இறக்குமதி செய்ததாமே அதை தாயரித்தது நீங்கள் தானோ?

    பதிலளிநீக்கு
  7. என்னங்க வீட்டிற்கு வந்த தம்பதிகளுக்கு சிக்கன் சிக்ஸ்டி பைவ் கோழி பிரியாணி செட்டிநாடு சிக்கன் சிக்கன் லாலிபாப் என்று செய்து போடாமல் பொரி உருண்டை செய்து போட்டீருக்கீங்களே நியாமாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை ஒரு மணி நேரத்தில் வந்து போனவர்களுக்கு இது போதும் என்று நீங்கள் சொன்னதை எல்லாம் விட்டு விட்டு இதைச் செய்தேங்க.

      நன்றி உண்மைகள்.

      நீக்கு
  8. வணக்கம் தோழி!

    மிகச் சுலபமாக அருமையான பண்டமாக இருக்கின்றது!
    பகிர்விற்கு நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் செய்து பாருங்கள் தோழி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. சுவைத்து மகிழ்ந்திருக்கின்றேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்களின் பலகாரம் தானே இது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. உடனே சாப்பிட நீங்கள் செய்தது போல் செய்யலாம், அடுப்பில் வைக்காமல் பொரிஅரிசி மாவில், தேங்காய் பூ சூடான பால் விட்டு சர்க்கரை சேர்த்து பிடித்து விரத காலங்களில் மாலையில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
    இதையே வெல்லபாகு வைத்து அதனுடன் தேங்காயை சிறு (பல் பல் ஆக)துண்டுகளாக நெய்யில் வறுத்து போட்டு உருண்டை பிடித்து வைத்தால் வெகு நாட்கள் இருக்கும்.
    பொரி உருண்டை மிக சத்து மிகுந்த உணவு.
    நீங்கள் சொல்லும் முறை இளமதி சொல்வது போல் மிக சுலபமாக இருக்கிறது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அம்மா.

      நீங்கள் சொன்னது போல் பால் விட்டு சாப்பிட்டதில்லை. செய்து பார்க்கிறேன்.
      வெல்லப்பாகு ஊற்றி தேய்காய் பல், பொட்டுக்கடலை, வேர்கடலை, எள் போட்டு உருண்டைப் பிடிப்பார்கள். அது நம் மதுரைத் தமிழன் சொன்னது போல.... மிகவும் கெட்டியாக இருக்கும். ஆனால் உண்டை பிடிக்கும் போது உள்ளங்கை வெந்து விடும்....! மிகவும் சுவையாக இரக்கும். செய்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த முறையைத் தான் பொர்லங்காய் உருண்டை என்பார்கள்.

      இந்த பொரி அரிசி உருண்டை நீங்களும் தோழி இளமதி அவர்களும் சொன்னது போலவே மிகவும் சுலபமாக செய்யலாம்.
      விருந்தினரும் விரும்பி சாப்பிட்டார்கள்.

      தங்களின் வருகைக்கும் விளக்கமான பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி கோமதி அம்மா.

      நீக்கு
  11. செய்து பார்த்து விட்டு சொல்கிறோம் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னேரம் செய்து சாப்பிட்டு இரப்பிீர்கள் என்று நினைக்கிறேன். நான் தான் ரொம்பவும் தாமதமாக பதலளிக்கிறேன்.

      ஒருவர் இதையும் குறிப்பிட்டார்.
      மன்னிக்கவும்.
      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  12. தங்கள் விளக்கமும். கோமதி அவர்களின் செயல்முறையும் நன்றாக இருக்கிறது. இரண்டுமே செய்து பார்த்து விடவேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் செய்து சாப்பிடுங்கள் சசிகலா.
      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. நீங்கள் வந்தால் மதுரைத் தமிழன் சொன்ன கெட்டி உருண்டை தான்....

      நன்றி தோழி.

      நீக்கு
  14. சுவையான பொரி அரிசி உருண்டை பதிவிற்கு தமிழ் மண ஓட்டு 7!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  15. செய்வதுண்டு! நல்ல மணமாக இருக்கும் இது...எளிதும் தாங்கள் சொல்லுவது போல்....படம் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மிகவும் பிடித்த பலகாரம் இது ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு