புதன், 24 செப்டம்பர், 2014

மனித உறவுகள் மேம்பட 20 வழிகள்!!1.நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.

3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள்.

4. விட்டுக் கொடுங்கள்.

5. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள்.

10. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா செய்திகளையும் நம்பி விடாதீர்கள்.

13. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

15. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

17. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

19. சொந்தங்களையும், நண்பர்களையும் அவ்வப் போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

20. பிரட்சனை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

படித்ததைப் பகிர்ந்தேன்

அருணா செல்வம்.

20 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படித்ததும் பகிர்ந்ததும் அருமை சகோதரியாரே
இயன்ற வரை கடைபிடிப்போம்
தம +1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக அருமை சகோதரி....எத்தனை முறை வாசித்தாலும் மனதில் பதிய வைக்க வேண்டிய வாக்குகள்! பகிர்வுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நேற்றைய வலைச்சரம் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்! புதன்....

ezhil சொன்னது…

மிக நல்ல வழிகள்.... நானும் படித்திருக்கிறேன்....

ஸ்ரீராம். சொன்னது…

செயல்படுத்துவது சற்றே கடினமென்றாலும் முடியக் கூடியதுதான். எல்லாம் அருமை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

இளமதி சொன்னது…

அத்தனையும் முத்துக்கள் தோழி!
சில என்னிடம் உள்ள குறைகள்
அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்...

இதிலே 19 வது விடயத்திற்காக உங்களை நான் சந்திக்க விரும்புகிறேன் தோழி..:)

நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !

இருபது முத்துக்களும் இதமாக இருந்தன தோழி !
வாழ்த்துக்கள் .அன்பை நாளும் பேணும் மனத்தில்
இன்பமாய்க் குடிகொண்டிருக்கும் இத்தனை சிறந்த
முத்துக்களும் !

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை சகோதரி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நான் ஒரு வார காலமாக மொராக்கோ நாட்டிற்குச் சென்றதால் வலை பக்கம் அதிகமாக வரவில்லை.
இருந்தாலும் நீங்கள் எழுதியதைப் பார்த்துக் கருத்திட்டேன்.
என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

முயற்சிக்கலாம்... நானும் முயற்சிக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

19.............

19. சொந்தங்களையும், நண்பர்களையும் அவ்வப் போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

நேரில் சந்திக்க இருக்கிறீர்களா....? வாங்க வாங்க தோழி. இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்.

அருணா செல்வம் சொன்னது…

அன்பை நாளும் பேணும் மனத்தில்
இன்பமாய்க் குடிகொண்டிருக்கும் இத்தனை சிறந்த
முத்துக்களும் !

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை தான் தோழி.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான வழிகாட்டல்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Vinothkumar Vethathiri சொன்னது…

Vethathiri Maharishi Vazhga Valamudan