திங்கள், 28 ஜூலை, 2014

குழந்தை மொழி!!



கள்ளம் இல்லாப் புன்சிரிப்பில் - என்
உள்ளம் கொள்ளை போகிறதே!

தெள்ளு தமிழின் சொல்போல – மழலைச்
சொல்ல நெஞ்சம் இனிக்கிறதே!!

கானம் பாடும் பறவைமொழி
காதில் புகுந்தால் சங்கீதம்! – உண்மைக்
கருத்தைத் தேடிப் பார்த்துநின்றால்
கற்பனை தருமே நல்யூகம்!               (கள்ளம்)

வாணி கையில் தவழ்ந்திருக்கும்
வீணை மீட்ட மெல்லிசைகள்! – கவி
வல்லுநர் வழங்கும் வார்த்தைகளால்
வடிவம் பெறுமே நல்லிசைகள்!           (கள்ளம்)

பூவிதழ் மொழியும் ஓசையெல்லாம்
புரியா மொழிபோல் தானிருக்கும்! – அதைப்
பொன்னாய்ப் பெற்றவள் நெஞ்சத்தில்
புலமைப் பொருளாய் உயர்ந்திருக்கும்!!   (கள்ளம்)

அருணா செல்வம்
28.07.2014


(இணையத்திலிருந்து எடுத்தப் படம்)

25 கருத்துகள்:

  1. பேஷ்... பேஷ்... நல்லாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். நலமா சத்ரியன் அவர்களே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மனவெளி.

      நீக்கு
  3. மழலை மொழிக்கும் மயங்காதவர் உண்டோ ? அருமை சகோதரி

    எனது பதிவு ''விசித்திகன்''

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  4. உள்ளத்தைத் தொட்டது
    அருமையான குழந்தை மொழி!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. நல்ல கவிதை...பாராட்டுக்கள். வலையுலகில் நான் இன்னும் மழழை குழந்தைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      (வேறு காரணத்திற்காக நாக்கு குளரி பேசினால் அதை மழலைப் பேச்சு என்று எடுத்துக் கொள்ள முடியாது....)))

      நீக்கு
  6. என்ன தீடிரென்று குழந்தைகள் பற்றிய கவிதை.... சரி ஏதாவது 'விஷேசம்' இருக்கும். எனவே அட்வான்ஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஹீ.ஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கள் சொல்லி தப்பிவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

      தாய் மாமன் சீர் செய்ய நிறைய டாலர்களைச் சேர்த்து வையுங்கள் தமிழரே.

      நீக்கு
  7. குழந்தையின் புன்சிரிப்பில் இந்த உலகமே சொக்கித்தான் போகும்!
    அருமையான கவிதை!
    என்ன ஒரு ஒற்றுமை! எங்கள் பதிவும் கிட்டத் தட்ட இதை ஒத்ததுதான் ஆனால் செய்தி அடிப்படை. பதிவிட்டு வந்தால் உங்கள் தளத்தில் இந்த அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பள்ளி விடுமுறை என்பதால்..... நிறைய வேலை.

      அவசியம் உங்களின் பதிவைப் படிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு

  8. வணக்கம்!

    காலையில் இசைப்பாட்டின் இலக்கணத்தைத் தொலைபேசியின் வழியாக எடுத்துரைத்தேன். கம்பன் யாப்பிலக்கண வகுப்பில் மேலும் விளக்கம் தருகிறேன்!

    காலையயில் உரைத்த வண்ணம் இசைப்பாட்டு எழுதியுள்ளேன்!
    நுட்பங்களைக் கண்டுணர்க!

    எடுப்பு

    மழலை மொழியெனத் தந்தகவி - கேட்டு
    மயங்கிச் சுற்றிடும் இந்தப்புவி!...அருணா
    (மழலை)

    தொடுப்பு

    குழலின் இசையினில் என்றன்செவி - குளிர்ந்து
    குலவக் கவிதைகள் என்றும்குவி....அருணா

    முடிப்பு

    எதுகை மோனை ஒளிர்ந்திடவே - எழுத்தில்
    இனிமை இளமை மிளிர்ந்திடவே!
    புதுமை அணிகள் அணிந்திடவே - தமிழ்ப்
    புலமை கனிகள் கனிந்திடவே....அருணா
    (மழலை)

    பொன்னும் மணியும் பொலிந்தாட - நற்
    பொருளும் அருளும் விளைந்தாட!
    மன்னும் புகழில் மணந்தாட - உயர்
    மாண்பும் மகிழ்வும் இணைந்தாட...அருணா
    (மழலை)

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு படத்தைப் பார்த்ததுமே
      அமைத்தேன் இசையின் பாடலிலே!
      உழவன் ஆழ உழுவதுபோல்
      உரிய அமைப்பில் எழுதவில்லை!
      மழலை மொழியே என்கவிதை!
      மாண்பாய் அதைநீர் எடுத்துரைத்தீர்!
      பழகிப் பார்த்து இனிசெய்வேன்!
      படிப்போர் அதனை வியப்பாரே!

      தங்களின் வருகைக்கும் நான் கற்றுக்கொள்ள ஏதுவாக இசைப்பாட்டின் இலக்கணத்துடன் பாட்டமைத்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. கருவிலே தாயின் இதய ஒலியின் தாலாட்டிலேயே வளர்ந்த மழலையின் மொழி தாய்க்குத்தான் புரியும் !
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மை தான் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  10. பூவிதழ் மொழியும் ஓசையெல்லாம்
    புரியா மொழிபோல் தானிருக்கும்! – அதைப்
    பொன்னாய்ப் பெற்றவள் நெஞ்சத்திலோ
    புலமையின் பொருளாய் உயர்ந்திருக்கும்!! (கள்ளம்)
    அருமை அருமை ! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இனியா அம்மா.

      நீக்கு
  11. குழலினிது யாழினிது என்பார்....................

    கவிதை அருமை.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  12. படமும் கவிதையும் அவ்ளோ அழகு!
    //
    பூவிதழ் மொழியும் ஓசையெல்லாம்
    புரியா மொழிபோல் தானிருக்கும்! – அதைப்
    பொன்னாய்ப் பெற்றவள் நெஞ்சத்திலோ
    புலமையின் பொருளாய் உயர்ந்திருக்கும்!// சூப்பர்!!! சூப்பர்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நான் இந்தப் படத்தைப் பார்த்ததும் தான் இந்தப் பாடலை எழுதினேன்.
      என்ன அழகான படம்!!!
      அந்த சின்ன பாப்பா கையை ஆட்டி என்ன சொல்லி இருக்கும்.... அந்த குழந்தைக்கு என்ன சொல்லத் தெரியும்.... அது சொல்லவந்த மழலைமொழி எவ்வளவு இனிமையாக இருக்கும்..... நிறைய கற்பனைகள் தோழி.....

      அந்தக் கற்பனையிலேயே எழுதியப் பாடல் இது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மைதிலி தோழி.

      நீக்கு
  13. குழந்தை மொழி - அதில்
    பழந்தமிழ் மின்னும் - தங்கள்
    பாவின் அழகில் புரியுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கள் ஐயா.

      நீக்கு