ஞாயிறு, 13 ஜூலை, 2014

இது தான் காதலோ!!


பெண்ணைப் புரியாப் புதிரென்று
    பெரியோர் சொல்லைப் படித்திருந்தும்
மண்ணில் இருக்கும் தேவதையாய்
    மங்கை உன்னைக் கண்டவுடன்
உண்மை கருத்தை உடன்மறந்தேன்!
    உயிரில் உன்னைக் கலந்துவிட்டேன்!
கண்ணில் மறைந்து நீயிருந்தும்
    கருத்தாய்க் கவியில் பார்த்திடுவேன்!

கண்ணன் நிறத்தில் மையூற்றி
    காதல் கவியாய் வடித்திடுவேன்!
வண்ணம் அற்ற காகிதத்தில்
    வார்த்தை கோர்த்துத் துடித்திடுவேன்!
எண்ணம் எழுந்து பறந்திடவே
    எழுதில் சிறகை விரித்திடுவேன்!
விண்ணில் கலக்கும் நாள்வரையில்
    விரும்பி மனத்துள் சுமந்திடுவேன்!

என்னில் உன்னை வைத்திருந்தே
    எழுதும் ஒவ்வோர் வார்த்தைகளும்
பொன்னில் நனைத்த பூக்களைப்போல்
    பொலிர்ந்தே அழகாய்ச் சொலிக்கிறதே!
உன்னில் நானோ இல்லையென்ற
    உண்மை நன்றாய்த் தெரிந்திருந்தும்
மின்னும் வானில் விண்மீனாய்
    என்னுள் இருந்து மின்னுவதேன்?


அருணா செல்வம்
13.07.2014

    

45 கருத்துகள்:

  1. ஒருதலைக் காதலே கவிதை வடிக்கிறது ,உண்மைக் காதலன் என் செய்வானோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் செய்வான்....?
      அடுத்து யோசித்து எழுதுகிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாகவான் ஜி.

      நீக்கு
  2. கமெண்ட் 2 நாள் கழித்து வந்து போடுறேன்...அப்பதான் நீங்க பதில் சொல்லுவீங்க உடனே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரைத் தமிழரே....

      உங்களின் கோபம் நியாயமானதே...

      மன்னிக்கனும். இங்கே பிள்ளைக்குக்கு விடுமுறை துவங்கி விட்டது். அதனால் உறவினர்கள் வந்திருப்பதால் என்னால் உடனே பதில் எழுத முடியவில்லை. நான் பதிவு எழுதிவிட்டு டேப்லட்டில் பின்னோட்டங்களைப் பார்த்து வெளியிட்டு விடுகிறேன். மற்றவர்களின் பதிவையும் படித்தவிடுகிறேன். ஆனால் தமிழில் எழுத முடியாது.
      அதனால் தான் இவ்வளவு கால தாமதாம்.

      உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களும் ஊக்கமும் தான் என்னை அதிகம் எழுதத் துர்ண்டுகிறது. நீங்களே இப்படி சொன்னால் எப்படி...?
      தவிர பெண்களின் பிரட்சனைகளையும் புரிந்து கொள்ளுங்கள்.....
      நேற்று வந்த உறவினரின் நிலையைக் கற்பனைக் கலந்து பாட்டில் எழுதினேன். அவருக்கு மிகவும் சந்தோஷம்.

      இனி முடிந்தவரையில் உடனுக்குடன் பதில் எழுத முயற்சிக்கிறேன்.

      இந்தத் தாமதற்திற்காக அனைவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.
      நன்றி.


      நீக்கு
    2. ஹலோ நீங்கள் எனது பதிலை படித்து நக்கலா ஏதாவது பதில் சொல்லுவீங்கண்ணு பார்த்தால் எதுக்கு இந்த அழுகை . சரிங்க இப்படி அழுமுஞ்சியா இருப்பதால் இன்று முதல் வலைதளத்தில் உங்களுக்கு அழுமுஞ்சி என்ற பட்டத்தை தருகிறேன். மக்களே இன்று முதல் நம்ம அருணா மேடத்தை அழுமுஞ்சி அருணா செலவம் என்று அழைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். பூரிக்கட்டைக்கு இணையாக இந்த அழுமூஞ்சியை பிரபலபடுத்தவும்

      நீக்கு
    3. //உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களும் ஊக்கமும் தான் என்னை அதிகம் எழுதத் துர்ண்டுகிறது.///
      ஹலோ இப்படியெல்லாம் சொல்லி என்னை மாட்டிவிடாதீர்கள் பல அரசியல்தலைங்கதான் என்னை அடிக்க ஆளைத் தேடுகிறார்கள் என்றால் நீங்கள் இப்படி சொல்லி என்னை வம்பில் மாட்டிவிடுகிறீர்களே..

      இப்ப உங்க கணவரும் இதைப்படித்துவிட்டு என்னை அடிக்க ஆளைத் தேடுவதாக தகவல்கள் வருகின்றன..
      இப்பதான் உங்க கணவரிடம் இருந்து மெயில் வந்தது அதில் அவர் சொல்லி ருக்கிறார் இப்படி நீ பல பேரை ஊக்கப்படுத்துவதால் பல பெண்கள் வீட்டு வேலை செய்யாமல் நெட்டே கதி என கிடக்கிறார்கள் அதனால் இப்படி ஊக்கப்படுட்டுவதை நிறுத்து என்று மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கிறார்

      நீக்கு
    4. எனக்கு “அழுமுஞ்சி” பட்டம் வேண்டாம் என்று அதை உடனடியாக உங்களிடமே திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.

      நீக்கு
    5. என்னை எழுதச் சொல்லி அதிகமாக ஊக்கப்படுத்தவதே அவர் தான்.
      (என் தொல்லைகளில் இருந்து தப்பிக்க அவர் கையாளும் தாஜா இது...))))

      நீக்கு
  3. பதில்கள்
    1. சீனி அண்ணா.... உங்களின் கருத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வந்தது...

      ஒருவன் - நேற்று எங்கள் ஊரில் அடை மழை.
      மற்றொருவன் - அப்படியா....? நீ எத்தனை சாப்பிட்டாய்?

      நன்றி சீனி அண்ணா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நம்பி ஐயா.

      நீக்கு
  5. அடடா அருமை, தொடருங்கள் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  6. வணக்கம்
    அழகு கவி கண்டு ஆனந்த மழையில்நனைந்தேன்.
    அள்ளி எறிய வார்த்தைகள் இல்லை...
    த.ம 4வது வாக்கு

    நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துள்ளிக் குதித்தேன் தொடுத்திட்ட வார்த்தையில்
      அள்ளி எறியா அமுது.

      நன்றி ரூபன்.

      நீக்கு
  7. ஓகாரத்தை உடன்பாடாய் ஏற்கிறேன் சகோதரி!
    பாடலை உணர்ந்து படிப்பவர்கள் எப்படி எதிர்மறையாகவோ ஐயமாகவோ கொள்ள முடியும்!
    அருமை!
    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று யோசித்துத் தான் இத்தலைப்பை வைத்தேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “ஊமைக்கனவுகள்“

      நீக்கு
  8. கவிதையை படித்தேன். என்னங்க எழுது போது பேனாவில் மையைத்தான் ஊற்றி எழுதுகிறீர்களா அல்லது தேனை ஊற்றி எழுதுகிறிர்களா?

    மிகவும் தித்திகிறது உங்கள் கவிதை,,,,.இப்படி எல்லாம் இனிக்க இனிக்க எழுதினால் அதை படித்த நான் சீக்கிரம் இறந்து போயிடுவேன் அப்புறம் ஊக்கு விக்க ஆள் இருக்காது....

    என்னைப்போல இனிமையான ஆள் ( சுகர் பேஷண்டை இப்படிதான் இனிமே கூப்பிடனும் சரியா ) கள் உங்கள் கவிதையால் பாதிக்கப்படுகிறார்கள்


    //பொன்னில் நனைத்த பூக்களைப்போல்
    பொலிர்ந்தே அழகாய்ச் சொலிக்கிறதே!//

    எனக்கு பிடித்த மிக மிக மிக அருமையான வரிகள் சபாஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹே! நானும் இதே வரியை குறிப்பிடிருக்கிறேன்!!!!

      நீக்கு
    2. எதுக்குங்க இப்படியெல்லாம் ஐஸ்ஸ்ஸ்சூ

      இவ்வளவு ஐஸ்செல்லாம் வைத்தால் எனக்கு சுகருடன் ஜன்னியும் வந்துவிடும்.
      பிறகு இப்படியெல்லாம் நீங்கள் ஊக்குவிக்க ஆளைத் தேடனும்....

      நீக்கு
    3. மைதிலி மேடம்... உங்களுக்குமா....
      அட அந்த வரியில் அப்படி என்ன இருக்கிறது.....

      நீக்கு
  9. நீங்கள் லேட்டாக வந்தாலாவது பதில் சொல்லுறீங்க அதனால்தான் என்ன பதில் சொல்லிறீக்கங்க என்பதற்ககாவே மீண்டும் மீண்டும் வருகிறேன் நானெல்லாம் முழு சோம்பேறீங்க சில பதிவுகளுக்கு வந்த கருத்துகளுக்கே இன்னும் பதில் சொல்லவில்லை

    உங்களுக்கு நேரம் கிடைத்த போது பதில் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கடைக்கும் பொழுதும் வரும் கஷ்டத்தைப் பாருங்கள்....

      எல்லோருக்கும் பதில் எழுதி விடவேண்டும் என்று எழுதினால்.... இரண்டு மூவருக்குத் தான் பதில் எழுத முடிகிறது. பிறகு ஸட்டக் டாகி நின்று விடுகிறது.... எனக்கு மட்டும் தான் இப்படியா என்றும் தெரியவில்லை.

      அடடா.... என் பதிலை எதிர் பார்த்து மீண்டும் மீண்டும் வந்தீர்களா....? ரொம்ம்ம்ம்ம்ப நன்றிங்க.
      இனி முடிந்த வரையில் பதில் எழுதிவிடுகிறேன்.

      அனைத்துக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  10. இதுதான் காதலோ?.. சந்தேகமின்றி இதுதான் காதல் தோழி!

    அருமையாக இருக்கின்றது.
    மிக மிக இலகு நடையாய்ச் ஒவ்வொரு சீரும்
    உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன தோழி!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ இது தான் காதலா..... அப்பாடா நான் இன்னைக்குத் தான் தெரிந்து கொண்டேன்.
      காதல் என்றால் ஏதோ மாயாஜாலம் போல் இருக்கும் என்று நினைத்திருந்தேன்....))))

      புரிய வைத்தமைக்கு
      மிக்க நன்றி தோழி.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      தம்பி குமாரு... அக்கா என்பதை அருணா அக்கா என்றால் மேலும் மகிழ்வேன்.

      நீக்கு
  12. கண்ணன் நிறத்தில் மையூற்றி
    காதல் கவியாய் வடித்திடுவேன்!
    வண்ணம் அற்ற காகிதத்தில்
    வார்த்தை கோர்த்துத் துடித்திடுவேன்!
    எண்ணம் எழுந்து பறந்திடவே
    எழுதில் சிறகை விரித்திடுவேன்!
    விண்ணில் கலக்கும் நாள்வரையில்
    விரும்பி மனத்துள் சுமந்திடுவேன்!
    எவ்வளவு எளிதாக வந்துள்ளது காதல் கவிதை அருமை அருமை ஒவ்வொரு வரிகளையும் ரசித்து படித்தேன்.
    தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப் படித்துக் கருத்திட்டமைக்கு
      மிக்க நன்றி இனிய அம்மா.

      நீக்கு
  13. உள்ளத்தில்
    காதல் எண்ணம்
    அரும்பிவிட்டதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை ஐயா.
      காதலோ சோகமோ, எதுவாக இருந்தாலும் ஏதேனும் தலைப்போ அல்லது ஒரு கருவோ கிடைத்தால் உடனே அது குறித்து எழுதி விடுவேன்.
      நேற்று முன் தினம் என் கணவரின் நன்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் தன் பழைய காதலையே நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவரின் மனநிலையிருந்து எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் மனதில் பட்டதைக் கேட்டதற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. பொன்னில் நனைத்த பூ போல
    செம ..செம..
    தம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மைதிலி டீச்சர்.

      நீக்கு
  15. // விண்ணில் கலக்கும் நாள்வரையில்... //

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விண்ணில் கலக்கும் நாள் வரையில் இந்த சகோதரியை வாழ்த்துவீர்களா....)))

      அடஅடஅடடாடா....

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  16. அருமையான காதல் வரிகள்....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜா ஐயா.

      நீக்கு
  17. உவமைகள் அனைத்தும் சிறப்பு! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொறுத்தவரையில் கவிதையில்
      உவமைகள் இருந்தால் தான் அழகு, மதிப்பு எல்லாம்.
      ஆனால் எழுதும் பொழுது சட்டென்று வந்து விடாது. இப்படி எப்போதாவது வந்தால் சிறப்பாக அமைந்து விடுகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. எப்படி தங்கள் இந்தக் கவிதை விட்டுப் போனது எங்கள் கண்ணில் படாமல் என்று ஆச்சரியம்......ஒரு சில தளங்களின் புதியது எதுவும் ப்ளாகரில் வரவே இல்லை....

    //பொன்னில் நனைத்த பூக்களைப்போல்
    பொலிர்ந்தே அழகாய்ச் சொலிக்கிறதே!
    உன்னில் நானோ இல்லையென்ற
    உண்மை நன்றாய்த் தெரிந்திருந்தும்
    மின்னும் வானில் விண்மீனாய்
    என்னுள் இருந்து மின்னுவதேன்?//

    விண்மீனாய் மின்னுகின்றது கவிதையும்! பாவம் ங்க அவள் மனதில் அவனையும் மின்ன வையுங்களேன் சகோதரி! இன்பம் பொங்குமே! ஏனோ தெரியவில்லை....காதலில் வருத்தம் மனதை என்னவோ செய்கின்றது....கவிதை அருமை சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலில் சோகத்தை எழுதினாலும் அதைப் படிப்பதும் சுகமாகத் தான் இருக்கும் துளசிதரன் ஐயா.

      சில நேரங்களில் எனக்கும் சில தளங்கள் வருவதில்லை. தமிழ்மணத்தில் பார்த்ததும் படிப்பேன்.

      நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  20. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகம்செய்தவர்-காவிகவி


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    அறிமுகத்திகதி-23.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு