புதன், 2 ஏப்ரல், 2014

மலர்களே... மலருங்கள்!!





மொட்டான
பூவிற்குள்
எத்தனை
மோதல்கள்!

மூச்சு விட
முடியாமல்
முட்டி நிற்கும்
மோகங்கள்!

வாசத்தை
உள் வசமாய்
வைத்திருந்தால்
வண்டிற்கு
வாழ்வேது?

தித்திக்கும்
தேன்சுவை
உன்னுள்ளே
இருப்பதை
உலகறிய
வேண்டாமா?

வார்த்தைகள்
உள்ளிருக்க
வாய் மலர்ந்தாலே
வார்த்தையின்
கரு விளங்கும்!

காய்க்காதப்
பூவிற்கும்
கவர்கின்ற
அழகுதானே
கலைமகளின்
கைவண்ணம்!

கால தேவன்
வரைந்த
ஓவியங்களே!
கவிஞன்
கண்களுக்கு
விலங்கெதற்கு?
கவி பாட
இதழ் திறவுங்கள்!

இனிய ராகம்
இதயத்தில்
ஊறிட
இன்னிசை
மழையில்
இவ்வுலகம் 
நனைந்திட

மகரந்தச்
சேர்க்கையை
மன்மதன் புரிந்திட
மறுமலர் மறுபடி
மனம் திறந்தாட
மலர்களே
மலருங்கள்!!
 

அருணா செல்வம்

36 கருத்துகள்:

  1. மலர்ந்த பூவின் மணம் நுகர்ந்தேன் ,அருமை !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வாசமில்லா மலராச்சே.... எப்படி?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  2. மணம் மனத்தை கொள்ளை கொண்டது
    தொடர்ந்து பூக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... ஒரு பூ ஒரு முறை தான் ஐயா பூக்கும்;;;;)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. ///கவிஞன்
    கண்களுக்கு
    விலங்கெதற்கு?//
    அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. மலர்ந்தால்தானே வாசம் தெரியும்... மலருங்கள் மலர்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  5. ஹஹா மொட்டு மலர்ந்தாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போ?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படத்தைப் பாராட்டினால் அதை யார் வடிவமைத்துச் செய்தார்களோ அவர்களையே சாரும்.
      அவர்களுக்கு என் நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  7. ஆஹா! மலர்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன! உங்களுக்குத் தெரியவில்லையா? சகோதரி!

    அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அவ்வளவு எளிதாய் இல்லை. அதை மலர வைக்க நான் எவ்வளவு பாட்டு பாட வேண்டி இருந்தது....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு

  8. வணக்கம்!

    வண்ண மலா்கள் மலரும் கவிபடித்து
    எண்ணம் மலரும் எனக்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி சகோ.

      நீக்கு
  10. ஆகா... புய்ப்பம் பத்தி இன்னாமா சொல்லிக்கிற... சோக்கா கீதும்மே...!
    டாப்புல கீற புய்ப்பம் பிச்சருக்கு சென்டர் ஜஸ்ட்டிபை கவுஜ காம்பு மாறி கீதும்மே... (ஆகா... இன்னா ஒரு கலைக் கண்ணோட்டம்... என்க்குத்தாம்மே...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா நைனா... நாங்கூட இப்பத்தான் பாத்தேன். என்னமா கல கண்ணொட்டம் ஒனக்கு. தலையில சுத்தி போட்டுக்க நைனா...

      டங்ஸ்ப்பா...

      நீக்கு
    2. டீச்சர் ஒங்க பேச்ச கேட்டுக்கினு தலைல "சுத்தி" போட்டுக்கினேன்... மண்ட காண்டி வீங்கிப் போச்சு... :-(

      நீக்கு
    3. அதுக்குதான் நைனா அப்படி சொன்னேன்.

      நைனா.... எனக்கு சுத்த மெட்ராஸ் டமில் கத்தக்குடுக்கிற வாத்தி நீதாம்பா... என்ன டீச்சர்ன்னு சொல்லாத.

      நீக்கு

  11. கவிஞன்
    கண்களுக்கு 
    விலங்கெதற்கு?
    கவி பாட//

    ம்

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முத்தரசு....

      நீக்கு
  12. மலர்கள் மணத்தன! அருமையான கவிதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  14. மலரின் நறுமணம்போல கவிதையும் கிறங்கவைக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. மலரும் மலர்... உங்கள் கவிதை மலரும் மிக அழகு..... பாராட்டுகள் அருணா.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  16. "வாசத்தை
    உள் வசமாய்
    வைத்திருந்தால்
    வண்டிற்கு
    வாழ்வேது?" என்ற அடிகள்
    கவிதையின் தரத்தையே உயர்த்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு