திங்கள், 23 செப்டம்பர், 2013

இரண்டு கழுதைச் சுமை!! (நகைச்சுவை)





   மன்னர் தோமூர் சீன தேசத்தை ஆண்டவர்.
   ஒரு சமயம் அவரும் அவரது நண்பரும் வேட்டையாட காட்டிற்குச் சென்றனர்.
   அவர்களுடன் அவந்தி என்பவனையும் உடன் அழைத்துச் சென்றனர்.
   செல்லும் வழியெங்கும் வெயில் சுட்டெரித்தது.
   மன்னர் தோமூருக்கும், அவரது நண்பருக்கும் அந்த உஷ்ணத்தைத் தாங்க சக்தி இல்லை. அவந்தியும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் துன்பப்பட்டான். அப்பொழுது இருவரும் தங்கள் மேலாடைகளை கழற்றி, பின்னால் வந்து கொண்டிருந்த அவந்தியின் கைகளில் கொடுத்துச் சுமந்து வரும்படி கூறினர்.
   மன்னரின் உத்தரவு என்பதால் அவந்தியும் பேசாமல் வாங்கிக்கொண்டான்.
   அவர்கள் இருவரும் வேட்டையாடி முடிக்கவும் பொழுது சாயவும் லேசாக குளிர ஆரம்பித்தது.
   “வெயில் போய்விட்டது. இப்பொழுது நாம் மேலாடை அணிந்து கொள்ளலாமே!“ என்றார் நண்பர்.
   “ஓ! பேஷாக!“ என்று சொல்லியபடி மன்னர் தோமூர் திரும்பினார்.
   அவந்தியைக் காணவில்லை.
   “அவந்தி...!“ என்று கூப்பிட்டார்.
   பேச்சில்லை.
   அப்பொழுது வெகு தூரத்தில் ஒரு புள்ளி போலத் தெரிந்தான் அவந்தி. அவன் மெல்ல ஆடி ஆடி ஏதோ பெருஞ்சுமையைச் சுமந்து வருபவன் போல் வந்து கொண்டிருந்தான்.
   அவன் அருகே வந்ததும், “அவந்தி... நீ ஒரு கழுதை பொதி சுமப்பதைப் போல் அல்லவா எங்களது துணிகளைச் சுமந்து கொண்டு வருகிறாய்“ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் மன்னர் தோமூர்.
   உடனே அவந்தி, “இல்லை மகா பிரபு! நான் இரண்டு கழுதைச் சுமைகளை அல்லவா தூக்கிகொண்டு வருகிறேன்!“ என்றான்.
   தோமூரின் முகமும் நண்பரின் முகமும் சுட்ட கத்திரிக்காய் போல் சுருங்கி விட்டன.

(படித்ததில் பிடித்தது)
அருணா செல்வம்.

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. நேரம் பார்த்து அடிப்பது இதுதான்..

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. அவந்தி கேள்விபட்டபெயராய்இருக்கிறதே .நம்மூர்காரர் ஆச்சே !அவர் எப்போ சீனா போனார் ?
    பொதி சுமந்த கழுதையை ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சீனா போன போது நீங்கள் பார்க்கவில்லையா...?
      அச்சோ.....
      நானும் பார்க்கவில்லைங்க!!

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஆமாம்... நல்ல பதிலடிதான்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வார்த்தை அடி அல்லவா... நிச்சயம் வலித்திருக்கும்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. சிறப்பான பதிலடி! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு