செவ்வாய், 4 செப்டம்பர், 2012

வயது ஏற ஏற...!! (நிகழ்வு)





   நான் ஞாயிறு அன்று உறவினர் வீட்டு பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவிற்கு வந்திருந்த ஒரு வெள்ளைக்கார பெண், பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவிட்டு ஒவ்வொரு மனிதனின் மனமும் வயது ஏற ஏற எப்படிவெல்லாம் மாறுகிறது என்பதை ஒரு சின்ன உரை போல் பிரென்சு மொழியில் வாசித்தார்.
   அந்த வாசகங்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதை அவளிடமிருந்து பெற்று தமிழாக்கம் செய்து உங்களுக்கும் பகிர்கிறேன். படித்துப் பாருங்கள். நன்றி.

1.           3 வயதில் நினைப்பது! - அம்மாவை நான் அன்பு செய்கிறேன்
2.          10 வயதில் நினைப்பது! – அம்மா... ஏதாவது சொல்வார்கள்
3.  16 வயதில் நினைப்பது! –  ஓ... கடவுளே.. அம்மா என்னைத் தொல்லை பண்ணுற... (கடுப்பேத்துற...)
4.         18 வயதில் நினைப்பது! – எனக்கு இந்த வீட்டை விட்டு போகனும்.
5.   25 வயதில் நினைப்பது! – அம்மா சொன்னது நல்லதுக்குத் தான். (உண்மை தான்)
6.  30 வயதில் நினைப்பது! – நான் திரும்பவும் அம்மாவிடம் போக வேண்டும்.
7.      50 வயதில் நினைப்பது! – அம்மா நீ என்னை விட்டு போகக் கூடாது
8.    70 வயதில் நினைப்பது! – என் அம்மா இருந்தால் நான் அவளுக்கு எது வேண்டுமானாலும் செய்வேன். ஏனென்றால் நமக்கு ஒரு அம்மா தான்.


1.A  3ans, on dit : « Maman je t’aime »
2. A 10 ans : « Maman n’importe quoi »
3. A 16 ans : «  Oh mon dieu, ma mère m’énerve »
4. A 18 ans : « Je veux partir de cette maison »
5. A 25 ans : « Maman t’avais raison »
6. A 30 ans : « Je veux retourner chez ma mère »
7. A 50 ans : « Je ne veux pas perdre ma mère »
8. A 70 ans : « Je donnerais n’importe quoi pour ma mère soit là » On a qu’une mère

அருணா செல்வம்

(இணைய பிரட்சனையால் சில வலைகளைத் திறக்கவே முடியவில்லை. ஒரு சிலரின் பதிவுகளைப் படித்துவிட்டாலும் கருத்துரையிட முடியவில்லை. மன்னிக்கவும்)

27 கருத்துகள்:

  1. இதை வேறுமாதிரி facebook இல் படித்து இருக்கிறேன் அம்மாவை தொடர்பு படுத்தியது புதுமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் பாஸ்.

      நான் முதன்முதலில் இந்த வாசகங்ளைக் கேட்டதால் என் மனத்தைத் தொட்டது.
      நன்றி பாஸ்

      நீக்கு
  2. ஆகையினால் இப்போதே அன்னையின் மீது அன்பு செலுத்துவீர்! :)

    பதிலளிநீக்கு
  3. சிரிச்சிட்டேன்.....அப்பிடியே உண்மையாயிருக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐ... சிரிச்சீங்களா...?
      வீடு மாற்றும் வேலை பளு நேரத்தில்
      என் இனிய தோழி ஹேமாவைச் சற்று
      நேரம் சிரிக்க வைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.
      நன்றி தோழி.

      நீக்கு
  4. நல்ல மொழி பெயர்ப்பு.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. இதே உரையாடல் அம்மாவிற்கு பதிலாக அப்பா என்பதாக இதற்கு முன்பு படித்திருக்கிறேன் இதை அம்மாவாக மாற்றி அந்த பெண்மணி உரையாற்றி இருக்கிறார். மாற்றி அமைத்தாலும் நாலு பேருக்கு அந்த கருத்து செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க “உண்மைகள்.“
      நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன்.
      நான் இந்தக் கருத்தை முதன்முதலில் இப்பொழுது தான் கேட்டேன்.
      நன்றி ”உண்மைகள்“

      நீக்கு
  6. அருமை அருமை
    இது எவருக்கும் எந்த நாட்டவருக்கும்
    நிச்சயம் பொருந்தும்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரமணி ஐயா.

      நீக்கு
  7. இதேபோல ஒவ்வொரு வயதிலும் ஒரு மகன் தனது தந்தையைப் பற்றி என்ன நினைப்பான் என்று மதன் கூறியது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி
      நன்றி
      நன்றி.

      கவிஞர் அவர்களுக்கு

      நான் “மதன்“ அவர்கள் கூறியதைப் படித்ததில்லை. நீங்கள் அதை வெளியிட்டால் படித்துத் தெரிந்து கொள்வேன்.
      நன்றி.

      நீக்கு
  8. உண்மைதான் ..
    அம்மாவென் பெருமை சிலருக்கு புரிவதில்லை...
    சிலருக்கு குறிப்பிட்ட வயதின் பின் புரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் அம்மாக்கள்.. இல்லையாங்க சிட்டுக்குருவி.
      நன்றி சிட்டு.

      நீக்கு
  9. பெற்றோரின் அருமை சிலருக்கு தெரிவதில்லை. பெற்றோரின் சொல்படி நடந்தால் வாழ்வில் எல்லாமே வெற்றி தான். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. unmai,unmai,unmai unmaiyai mattume sollum aruna selvam -needuli valga

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
    2. 3 vauadthu kuzanthaiyaaga vungallai karpanai seithuk kondu ammavin madiel thoonguvadhaga ninaithu www.merlinsmagic.com www.youtube.com/watch?v=Y3itAwRtmVg esai keettu paarungal
      HMSLingam

      நீக்கு
  11. வணக்கம் சகோ
    உண்மை நான் இப்பவே அப்படிதான் நினைக்கின்றேன் ...நல்ல பதிவு நன்றி..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோ,
    உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி

    பதிலளிநீக்கு