செவ்வாய், 29 மே, 2012

மங்கல வேலி !! (கவிதை)
அவனுக்கும்
அவளுக்கும்
அர்த்தமுள்ள உறவின்
அங்கிகாரம் அது!

யார் யாருக்குச்
சொந்தமென்பதை
ஊரறிய வெளிக்காட்டி
உறுதிப் படுத்தியது!

விதைத்தவனே
பயிர் அறுக்கப்
போவதைப் பறைசாற்றும்
மங்கல வேலியது!

காலங்காலமாய்க்
கற்பின் அடையாளம்
காணாமல் போகிறது
கள்ளர்களின் பயத்தாலே!


வெறுங்கயிறு போட்டாலும்
வேண்டிடும் பொன்னுக்கு
வெறிகொண்ட மிருகத்தால்
வேதனை மீறிவிட

கழற்றி வைத்தாயிற்று
கற்பின் சின்னத்தை!
அமங்கல கோலத்தில்
சுமங்கலிகளின் அவலங்கள்!

“அடிமை சங்கிலி“
ஆய்ந்தவர் வாக்கு!
அறுத்தெரிய சொன்னதும்
அடக்கினர் அவரை!

அன்றைய நிலையில்
ஆண்மைக்கு நிகராய்
அகங்காரம் இருந்தது.
அடுத்தவர் தொடுவரோ..

இன்றைய நிலையில்
இன்னலில் தள்ளிட
இயற்கையைத் துணையாய்
இழுத்தனர்.. இழந்தனர்..

வேலிக்கு வேலியிடும்
வேண்டாதக் காரியத்தால்
வேதனையாய்க் கழற்றி
வீம்பின்றி நடக்கின்றார்.

இருமனம் சேர்ந்த
இன்பத்தின் அடையாளம்.
இன்றுதான் காண்கின்றார்
இதயத்தின் உன்னதத்தை!!( பிரான்சு நகரத்தில் தமிழ்ப்பெண்கள் திருடர் பயத்தால் வேறு வழியின்றித் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியில் செல்கின்றனர். அவர்களுக்காக எழுதிய கவிதை)

17 கருத்துகள்:

Unknown சொன்னது…

கள்வருக்குப் பயந்து தாலியைக் கழற்றி வைத்து விட்டுச் செல்லும் நிலை கொடுமைங்க. உங்களின் கவிதையோ அருமை. மனசில் தைத்தன வரிகள்.

சசிகலா சொன்னது…

வேலிக்கு வேலியிடும்
வேண்டாதக் காரியத்தால்
வேதனையாய்க் கழற்றி
வீம்பின்றி நடக்கின்றார்.
இப்படியும் செய்வார்களா ஆச்சரியமாக உள்ளது . வரிகள் அருமை .

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
நலமா?
களவின் மிகுதியில் ஏனைய நாடுகளில்
இந்த பயம் இருந்துகொண்டு தான் இருக்கிறது...
மங்கள நாணையே கழற்றி வைக்கும் அளவுக்கு
நாம் வந்துவிட்டோம்..
களவின் வழிவகை அறிந்து களையவேண்டும்.

அருமையான கவிதை..

ஆத்மா சொன்னது…

பிரான்சு நகரத்தில் தமிழ்ப்பெண்கள் திருடர் பயத்தால் வேறு வழியின்றித் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியில் செல்கின்றனர். அவர்களுக்காக எழுதிய கவிதை//

அதுதானே பார்த்தேன்

ஆத்மா சொன்னது…

வெறுங்கயிறு போட்டாலும்
வேண்டிடும் பொன்னுக்கு
வெறிகொண்ட மிருகத்தால்
வேதனை மீறிவிட...:(

Seeni சொன்னது…

ada che....

kaithai natru!

கோவி சொன்னது…

பிரான்சிலும் தாலி பறிப்பா?

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் அருமை

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஃபிரெண்ட்.

கொடுமையான செயல்தான் ஃபிரெண்ட். ஆனால் அவர்களுக்கும் வேறுவழி தெரியவில்லை.
பாவம் ஃபிரெண்ட் நம் தமிழ்ப்பெண்கள்.

அருணா செல்வம் சொன்னது…

சசிகலா..
துவக்கத்தில் தங்கச் சங்கிலி என்பதால் அறுத்தார்கள் என்று நம் பெண்கள் மஞ்சள் கயிறு போட்டுக் கொண்டார்கள். ஆனால் அதில் இருக்கும் அந்தத் தாலியில் உள்ள கொஞ்சம் தங்கத்திற்காகவும் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொடுக்கவில்லை என்றால் அவர்களை அடித்து சித்திரவதை பண்ணி...
அதனால் பெண்கள் செய்வது சரிதான்.
நாம் தவறாக எண்ணக்கூடாது.
நன்றி சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் நண்பரே... நலமாக இருக்கிறேன்.

“களவின் வழிவகை அறிந்து களையவேண்டும்.“

களவின் வழிவகை அறிந்தும் இங்கே களையத்தால் ஆட்கள் இல்லை.

நன்றிங்க நண்பரே!

அருணா செல்வம் சொன்னது…

சிட்டுக்குருவி...
தங்கத்தைப் பெட்டியில் வைத்து புட்டுபோட்டு பாதுகாக்கலாம்...
ஆனால் பெட்டியையே துாக்கிக்கொண்டு போய்விட்டால்....

அருணா செல்வம் சொன்னது…

அடடா... இவ்வளவு கோபமா நண்பரே...

(கோபத்தில் வாழ்த்து கூட வாத்தாகிவிடும் போல் இருக்கிறது)

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க நண்பரே... கடந்த ஒரு வருடமாக அதிகமாக இருக்கிறது.

தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க தோழரே...
உங்கள் ஊரில் இந்தப் பிரட்சனை இல்லையா?

ஹேமா சொன்னது…

நாட்டு நடப்பு கவிதையாகிவிட்டது.ஆனால் தப்பு எங்களின் பக்கமும்40-50-100 பவுணில் தாலிக்கொடி போட்டுக்கொண்டு உலாவரவேண்டுமா ?!

அருணா செல்வம் சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...
வெறும் மஞ்சள் கயிறு போட்டாலும் அதிலிருக்கும் தாலியின் தங்கமும் அவர்களை இழுக்கிறது.
தங்களின் வருகைக்கு நன்றிங்க தோழி.