செவ்வாய், 22 மே, 2012

ஆசை பொங்க எழுதினேன்!! (கவிதை)






புத்தாடும் மலரழகில் சொக்கும் வண்டாய்ப்
   பொன்னாடும் காதழகில் மயங்கும் கண்கள்!
நாற்றாடும் வயல்வெளியின் பசுமை போன்று
   நறுங்கவிதை படிக்கின்ற நங்கை உள்ளம்!
பார்த்தாடும் பருவத்தாள்! அழகின் உச்சம்!
   பார்க்கின்ற பார்வையிலே கவிதை கெஞ்சும்!
ஊற்றாடும் துள்ளலென ஆசை பொங்கி
   ஓடிவரும் வெள்ளத்தால் எழுதி விட்டேன்!






(பு என்ற எழுத்தின் நெடில் என்னிடம் இல்லை.)

16 கருத்துகள்:

  1. கவிதையப் படிச்சு ரசிக்க என்னால முடியுது. எழுதத் தான் வர்றதில்ல... நல்லா இருக்கு ப்ரெண்ட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீ எழுதறதே எனக்கு கவிதை மாதிரி தான்ப்பா தெரியுது. எனக்கு உன்னோட ஸ்டெய்ல் பிடித்திருக்கிறது ஃபிரெண்ட்...

      நன்றிப்பா.

      நீக்கு
  2. கவிதை நன்று!
    இன்னும் எழுதியிருக்கலாம் ஒன்று!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் ஆர்வத்திற்கு நான் எழுத கடமைப்படுகிறேன் ஐயா.

      (ஆனால் அதிகமாக எழுதிவிட்டால் சளிப்பு வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.)

      நன்றிங்க புலவர் ஐயா.

      நீக்கு
  3. புலவர் சொன்னதுபோல் இன்னும் எழுதி இருக்கலாம்
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கிறேன் ரமணி ஐயா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. அலர்ந்தாடும் என்று மாற்றி இருந்திருந்திருக்கலாம்...

    ஆனால் சிலக் கவிஞர்களால் தான் பிழையையும் ரசிக்க வைக்க முடியும்... நீங்கள் அந்த ரகம் அண்ணா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழையா....????

      தம்பி... அலர்ந்தாடும் என்று மாற்ற முடியாது. அதில் எதுகை இல்லையப்பா...

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிப்பா தம்பி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அடடா! - சீனி

      நன்றிங்க நண்பரே!
      (எப்படிங்க உங்களுக்கு இப்படியெல்லாம் வருது?)

      நீக்கு
  6. நெடில் இல்லையெனினும்
    இங்கே குறிலே அழகிய
    கவி படைத்துவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே!
      டூர் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? உங்கள் வருகை எனக்கு பேரானந்தத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் நம்ம ஊர் நிகழ்ச்சியை எல்லாம் எழுதுவீர்கள் இல்லையா? ஆவலாக காத்திருக்கிறேன்.

      நன்றிங்க நண்பரே!

      நீக்கு
  7. பெயரில்லா22 மே, 2012 அன்று 2:26 PM

    கவிதை நன்றாக உள்ளது நல்வாழ்த்து. வரலாமே என்வலைக்கும் எவ்விதத் தடையுமில்லை.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்ங்க வேதா.இலங்காதிலகம்!
      உங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றிங்க. நீங்கள் அழைக்காமலேயே பல முறை உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் வலைக்குள் பின்னோட்டம் இட கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பின்னொட்டம் இடும் இடத்தில் எழுதிவிட்டு க்ளிக் செய்தால் எழுதியது அனைத்தும் அலைந்து விடுகிறது. பிறகு திரும்பவும் எழுத வேண்டியுள்ளது.
      இந்தப் பிரட்சனை எனக்கு மட்டுமா... அனைவருக்குமா என்று தெரியவில்லை. கொஞ்சம் பாருங்கள்.
      உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு